விளையாட்டு

விளையாட்டு

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை – வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதல் பிரான்ஸ் வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 0-2 என பின்தங்கி இருந்தது. இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது....
விளையாட்டு

பொல்லார்ட் காயம் : பாக். தொடரில் இருந்து விலகல்

பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லாட் காயம் காரணமாக விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் 13 -ம் தேதி முதல் 22 ஆம் தேதிவரை இந்த தொடர் நடக்கிறது. இந்த நிலையில், அணியின் கேப்டன் பொல்லார்ட் தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். டி-20...
விளையாட்டு

இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி வரும் 17-ம் தேதி துவங்குவதாக இருந்தது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 8-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் இருநாடுகளுக்கும் இடையே...
விளையாட்டு

சர்ச்சை ஏற்படுத்திய விராட் கோலியின் விக்கெட் – சமூக வலைதளங்களில் எகிறும் எதிர்ப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் இந்திய அணி பேட் செய்து வருகிறது. அகர்வால் மற்றும் கில் சிறப்பான தொடக்கம் கொடுத்த நிலையில், அடுத்து வந்த புஜாரா மற்றும் விராட்கோலி ஒரே ஓவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதில் விராட் கோலிக்கு முதலில் பேட்டில் பட்டு பின்னர் பேடில் பட்டதாகவும், 3 வது நடுவரான விரேந்தர் சர்மா தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்து...
விளையாட்டு

BWF உலக டூர் பைனல் : மூன்றாவது லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவினார் பி.வி.சிந்து

இந்தோனேஷிய நாட்டில் நடைபெற்று வரும் 2021 BWF உலக டூர் பைனல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளார் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. மகளிர் ஒற்றையர் பிரிவில் ‘குரூப் ஏ’-வில் இடம் பெற்றிருந்த அவர், தாய்லாந்து வீராங்கனை Chochuwong-க்கு எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் 1 - 2 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளார் சிந்து. முன்னதாக இதே குரூப் பிரிவு ஆட்டத்தில் டென்மார்க் மற்றும்...
விளையாட்டு

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை – அரையிறுதியில் இந்தியா தோல்வி

12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது  அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதின. போட்டியின் தொடக்கம் முதலே ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில், ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. உலக கோப்பை தொடரின் வெண்கல...
விளையாட்டு

ஜாம்ஷெட்பூர்–ஐதராபாத் ‘டிரா’: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ‘விறுவிறு’

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர், ஐதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டி 1-1 என, 'டிரா' ஆனது. கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 8வது சீசன் நடக்கிறது. பம்போலிம் நகரில் நடந்த லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர், ஐதராபாத் அணிகள் மோதின. ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஸ்டீவர்ட் முதல் கோல் அடித்தார். இதற்கு ஐ தராபாத் அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி...
விளையாட்டு

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடக்கம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து போராடி ‘டிரா’ செய்தது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முதலாவது டெஸ்டில் ஓய்வில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். அவரது வருகையால் அணியில்...
விளையாட்டு

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், ஐரோப்பாவின் மிகவும் வலுவான அணியான பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. துவக்கத்தில் சில நிமிடங்கள் பெல்ஜியம் வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். எந்த வாய்ப்பும் கொடுக்காமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். அதன்பின்னர் இந்திய வீரர்கள் சுதாரித்து ஆடினர். 21வது...
விளையாட்டு

உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: தொடக்க ஆட்டங்களில் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே களம் காணும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள், ஜோடிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகிறார்கள். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள். பெண்கள் ஒற்றையர் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக...
1 31 32 33 34 35 74
Page 33 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!