விளையாட்டு

விளையாட்டு

சென்னை அணி தோல்வி : ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ஏமாற்றம்

ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி 0-3 என்ற கோல் கணக்கில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 8வது சீசன் கோவாவில் நடக்கிறது. நேற்று பம்போலிம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. போட்டியின் 12வது நிமிடம் பெங்களூரு அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதை இமான் கோலாக மாற்றினார். 42வது நிமிடம் அசத்திய உடாண்டா சிங், மற்றொரு கோல் அடிக்க,...
விளையாட்டு

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ்- அரியானா ஆட்டம் ‘டை’

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 77-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்ததால் போட்டி பரபரப்பாக நகர்ந்தது. முடிவில் திரில்லிங்கான இந்த ஆட்டம் 39-39 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமனில்) முடிந்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி 6 வெற்றி, 5...
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெளியேற்றம்

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-ராஜீவ் ராம் (அமெரிக்கா) ஜோடி 4-6, 6-7 (5-7) என்ற நேர்செட்டில் ‘வைல்டு கார்டு’ மூலம் தகுதி கண்ட ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸ்-ஜாசன் குப்லெர் இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின்...
விளையாட்டு

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ், புனேரி பால்டன் அணிகள் வெற்றி

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 41 - 22 என்ற புள்ளி கணக்கில் பிங்க் பாந்தர்ஸ்  அணியை வீழ்த்தி வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் புனேரி...
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் கால்இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மெட்விடேவ், சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். சிமோனா ஹாலெப், சபலென்கா அதிர்ச்சி தோல்வி கண்டனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், அமெரிக்க ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-2,...
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நடால், ஷபவாலோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னாரினோவுடன் மோதினார். இதில் நடால் 7-6, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இதேபோல், மற்றொரு போட்டியில் கனடா வீரர் டேனிஸ் ஷபவாலோவ் ஜெமனி வீரரான அலெக்சாண்டர்...
விளையாட்டு

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 108 பந்துகளில் 162 ரன்கள் குவித்து ராஜ் பவா அசத்தல்

ராஜ் பவா 108 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்தார். இது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 16 அணிகள் பங்கேற்றுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. பி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி உகாண்டா உடன் மோதியது. டாஸ் வென்ற உகாண்டா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க...
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ், சின்னர், ஹாலெப், கோலின்ஸ் 4வது சுற்றுக்கு தகுதி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஹாலெப், கோலின்ஸ் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெத்வதேவ், சின்னர் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. 3-வது வரிசையில் உள்ள ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப் நேற்று காலை நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் மாண்டர்கோ நாட்டை சேர்ந்த டாங்காகோவிநிச்சை எதிர்கொண்டார். இதில் ஹாலெப்...
விளையாட்டு

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் போட்டிகளின் மைதானங்கள் மாற்றம்- பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. தென்னாப்பிரிக்கா அணியுடன் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் போட்டித்தொடரையும் இழந்துள்ளது. இதனால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா தொடரை முடித்து தாயகம் திரும்பும் இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி பங்கேற்க...
விளையாட்டு

2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு

2022 ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.  மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர், வரும் அக்டோபர் 16ந் தேதி தொடங்கி நவம்பர் 13ந்தேதிவரை இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றது. அடிலெய்டு, பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதிப் போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் முறையே...
1 22 23 24 25 26 74
Page 24 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!