தமிழகம்

செய்திகள்தமிழகம்

காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – சுகன்தீப் சிங் பேடி

பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் காய்கறி மற்றும் பழங்களை, நடமாடும் வாகனங்கள் மூலம் வினியோகம் செய்திட வணிகர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி கூறுகையில், அனைத்து வார்டுகளிலும் மூன்று சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் சம்பந்தப்பட்ட மண்டல அளவிலான அனுமதி பெற்று விற்பனை செய்ய வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யும் வாகனங்களுக்கு தேவையான பதாகைகள் சென்னை பெருநகர மாநகராட்சி விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும் கூறுகையில்,...
செய்திகள்தமிழகம்

சென்னையில் காய்கறி விற்பனை தொடக்கம்

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, காய்கறிகள் அரசு சார்பில் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1,610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், காலை ஆறு மணி முதல் வாகனங்கள் மூலம் சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் காய்கறிகள் விற்பனை தொடங்கியுள்ளது. பகல் 12 மணிவரை இந்த விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

“தமிழக மக்களை கெஞ்சி கேட்கிறேன்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். தமிழகத்தில் புதுசா அரசு அமைந்து இரண்டு வாரங்கள் தான் ஆகியுள்ளது. இந்த ரெண்டு வாரத்துல ஏராளமான திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் , பெண்கள் எல்லாருக்கும் சாதாரண கட்டண பேருந்தில் கட்டணமில்லாத பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு , தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அவர்கள் தகுதிக்கேற்ற வேலை, இழப்பீடுகள், தூத்துக்குடி வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது . எழுவர் விடுதலைக்காக குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் செலவுத்தொகை பெறலாம்...
செய்திகள்தமிழகம்

யாஷ் புயல் : 4 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!

மத்திய கிழக்கு வங்க கடலில் யாஷ் புயல் நாளை உருவாவதையடுத்து நான்கு நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை மத்திய கிழக்கு வங்க கடலில் யாஷ் புயல் நாளை உருவாவதையடுத்து,இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த மூன்று நாட்கள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.அதற்கு அடுத்ததாக வருகின்ற 26ஆம் தேதி மன்னார் வளைகுடா தெற்கு வங்க கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும், நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கனமழைக்கு...
செய்திகள்தமிழகம்

ஊரடங்கு தளர்வுகள் அபத்தமானவை; கொத்துக் கொத்தாக கொரோனா பரவும் – டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு

ஊரடங்கு தளர்வுகள் அபத்தாமனவை என்றும் கொத்து கொத்தாக கொரோனா பரவவே வகை செய்யும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது: நாளை முதல் தளர்வில்லா ஊரடங்கு என்பதால் நேற்றும், இன்றும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு தளர்வுகள் அபத்தமானவை. அனைத்து கடைகள், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொத்துக் கொத்தாக கொரோனா பரவுவதற்கே இது வழிவகுக்கும்! சென்னையிலிருந்தும், பிற நகரங்களிலிருந்தும் 4500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதும், வழக்கமான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டதும் தேவையற்றவை. இவை தமிழகத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்து விடும். தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதை தவிர்ப்பதற்காகவே கடுமையான ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால்,...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் பாடாய்ப்படுத்தி வருகிறது. இந்த தொற்று காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு மாநிலங்கள், ஊரடங்கை அறிவித்துள்ளன. தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள தமிழக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இருந்தும் கொரோனா தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருந்தும் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நடத்த பல்வேறு துறையினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட 13 கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய...
செய்திகள்தமிழகம்

அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேசமயம் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் லேசான முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக...
Uncategorizedசெய்திகள்தமிழகம்

தமிழக கொரோனா பாதிப்பு பதிவில் மோசடி; ‘மெட் ஆல்’ உரிமம் ரத்து

தமிழகத்தில் கடந்த 19, 20ம் தேதிகளில் கொரோனா தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று இருந்ததாக ஐசிஎம்ஆர் போர்டலில் மெட்- ஆல் தனியார் ஆய்வகம் தவறாக பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தனியார் ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட கொரோனா பரிசோதனை உரிமத்தை தமிழக சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகம் வெளியிட்ட உத்தரவில், " ஐசிஎம்ஆர் போர்டலில், மெட் ஆல் தனியார் ஆய்வகம் பதிவேற்றம் செய்த கொரோனா பரிசோதனை மாதிரிகளை ஆய்வு செய்ததில், கீழ்காணும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கு வங்கம் கொல்கத்தா மாநகரில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் போர்டலில் ஆய்வகம் தவறாக பதிவேற்றியுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில், தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று...
தமிழகம்

தமிழக முதல்வரிடம்’உறவினர் பராமரிப்பு திட்டம்’கோரிக்கை வைக்கிறேன்.கமல்ஹாசன்

கொரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று கவலை தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன். அவர் இந்த பிரச்சனை குறித்து, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் நிதிஉதவி வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. புதுடெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது. ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கு துவக்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாக செலுத்தப்படும் என்றும் இந்த டெபாசிட் தொகை மூலமாக கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்த குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறார். பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை அவர்களின் உறவினர் அல்லது பெற்றோர்கள் நெருங்கிய நட்பு...
தமிழகம்

உழவர் சந்தைகள் மூலம் சேலத்தில் வாகனங்களில் காய்கறி விற்பனை

சேலம் மாவட்டத்தில் காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகளை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், 11 உழவர் சந்தைகள் மூலம் 76 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை நேற்று முதல் தொடங்கியது. கரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களில் பலர் கரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க தவறியதை தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி சந்தைகள் மூட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நேற்று உழவர் சந்தைகள் மூலம் வாகனங்களில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டது. சேலத்தில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, தாதாகாப்பட்டி, சூரமங்கலம் ஆகிய 4 உழவர் சந்தைகள் மூலம் 40...
1 429 430 431 432 433 440
Page 431 of 440

Right Click & View Source is disabled.

error: Content is protected !!