தமிழகம்

செய்திகள்தமிழகம்

வேலூர் மலை கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பிரிட்டீஷ் அரசாங்க முத்திரையுடன் கூடிய பீரங்கி: அரசு அருங்காட்சியகத்துக்கு கொண்டு வர ஆலோசனை

வேலூர் மலை கோட்டையில் பிரிட்டீஷ் அரசாங்க முத்திரையுடன் கிடைத்துள்ள பீரங்கியை மீட்டு பாதுகாப்பது குறித்து அரசு அருங் காட்சிய காப்பாட்சியர் சரவணன் விரைவில் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். வேலூர் பாலாற்றில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள மலை கோட்டை 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு கட்டுப்பாட்டில் இயங்கிய பொம்மு ரெட்டி, திம்ம ரெட்டி ஆகியோரால் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க பல போர்களை கண்டுள்ள வேலூர் கோட்டை அகழியுடன் அமைந்திருப்பது ராணுவ ரீதியாக சிறப்பு மிக்க கோட்டையாக இருந்து வருகிறது. வேலூர் கோட்டை பிஜப்பூர் சுல்தான்கள், மராட் டியர்கள், முகலாயர்கள், ஆற்காடு நவாபுகள், ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. பொது ஆண்டு 1,688 வாக்கில் மராட்டிய படையினர் 14 மாதங்கள் முற்றுகைக்குப் பிறகு வேலூர் கோட்டையை கைப்பற்றினர். ஏறக்குறைய 20 ஆண்டுகள் மராட்டியர்களின்...
செய்திகள்தமிழகம்

ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை : தமிழக அரசு அறிவிப்பு

ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்தாலும் எண்ணிக்கை அளவில் அதிகமாகவே உள்ளது. இதனால் பல மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாத நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் அனுமதி அளிப்பதால் எனக் கூறப்படுகிறது. இதையொட்டி கொரோனா சிகிச்சை முறைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த நெறிமுறைகளில், 'கொரோனா நோய் தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் அவர்கள் முதலில் அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தை அணுகவேண்டும். அவர்களின் உடல்நிலை முதற்கட்டமாக அங்குப் பரிசோதனைச் செய்யப்படும். இவ்வாறு பரிசோதிக்கும் போது கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஆக்சிஜன் அளவு 90 அல்லது...
செய்திகள்தமிழகம்

சேலம் செவ்வாய்பேட்டையில் நேரக் கட்டுப்பாட்டுடன் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் திறப்பு

சேலம் செவ்வாய்பேட்டையில் நேரக் கட்டுப்பாட்டுடன் நேற்று மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் திறக்கப்பட்டது. இதனால், வழக்கமான நாட்களைபோல அங்கு பரபரப்பு நிலவியது. தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வாகனங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறு வியாபாரிகள் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று சிறு வாகனங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறு வியாபாரிகள் பொருட்களை கொள்முதல் செய்ய வசதியாக சேலம் மாவட்டத்தில் உள்ள மளிகை பொருட்கள் மொத்த விற்பனைக் கடைகள் நேற்று முதல் காலை 6 மணி முதல் காலை 10 மணி திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து,...
செய்திகள்தமிழகம்

“ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது, விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் அதிகமாகியது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.எனவே, கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து தந்துள்ளது . மக்களை நோக்கி காய்கறிகள் , மளிகைப் பொருட்கள் வந்து சேர ஏற்பாடுகள் செய்துள்ளோம் . ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன . பொதுமக்களுக்குத் தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்பட உள்ளது...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் வெயில் சதம்.. கொளுத்தும் வெப்பத்தால் மக்கள் அவதி!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்திரி வெயில் முடிந்தாலும் கோடை வெயில் கடுமையாக மக்களை தாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும் அவர்களை வெயில் விடுவதாக இல்லை. கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளக்கும் அளவுக்கு கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக, மதுரை, வேலூரில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. கடலூா், திருச்சியில் தலா 104 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரி, கரூா் பரமத்தி, சேலத்தில் தலா 101 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம்,...
செய்திகள்தமிழகம்

ரயில், விமான பயணிகளுக்கு நாளை முதல் இ-பதிவு அவசியம்: தமிழக அரசு அறிவிப்பு!

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாவட்டங்களுக்கு செல்வதற்கும் சென்னையில் உள்ள பகுதியில் செல்வதற்கு இ-பதிவு அவசியம் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது வீட்டில் இருந்து ரயில் மற்றும் விமான நிலையத்திற்கு செல்வதற்கும் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து வீட்டிற்கு செல்வதற்கும் இ-பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நாளை முதல் அதாவது ஜூன் 1-ஆம் தேதி முதல் வீட்டில் இருந்து விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் சென்றாலும் கூடவே இ-பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அதே போல் விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்தாலும் கூட இ-பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி விமான, ரயில் டிக்கெட்டுகள் உடன் அடையாள அட்டையும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான நிலையங்கள் செல்வதாக...
செய்திகள்தமிழகம்

இன்று முதல் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்.. ஊரடங்கில் சிறப்பு ஏற்பாடு !!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது தளர்வில்லா ஊரடங்கு ஜுன் 7வரை நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. எனினும் பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மளிகை கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால், மக்கள் தேவையை கருத்தில்கொண்டு நடமாடும் மளிகை கடைகள் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்தது. அதன்படி ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் வாடிக்கையாளர் கேட்கும் பொருட்களை வீடு தேடி கொண்டுவழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயம்பேடு மற்றும் கொத்தவால்சாவடியில் இருந்து தேவையான மளிகைப்பொருட்களை கொள்முதல் செய்து குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வாகனங்களுக்கு உரிய அனுமதி அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் இந்த...
தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… நீட்டிப்பு தேதியை அறிவித்தது தமிழக அரசு!

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு, கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு பணிகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தமிழக முதல்வர் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைகள் ஆய்வுகள் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போழுது மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடியிருப்பு பகுதிகளில் தள்ளுவண்டி மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் முதல், 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்க தமிழக...
தமிழகம்

PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து தட கள பயிற்சியாளர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து,பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்கள் அளிக்கலாம் என்றும்,அவர்களது பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும்,அதன்படி,புகார் அளிக்க 94447 72222 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமி கேட்டுக்கொண்ட நிலையில்,மாணவிகள் பலரும் சமூக ஊடகங்களின் மூலம்,தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த சம்பவங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில்,சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் விளையாட்டு அகாடமியின் பயிற்சியாளர் நாகராஜன் மீதும் புகார்கள் அளிக்கப்பட்டன. அதாவது,நாகராஜன் பயிற்சியின் போது தடகள விளையாட்டு மாணவிகள்,வீராங்கனைகளை பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவதும்,...
தமிழகம்

அண்ணா பல்கலைக்கழ முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் காலமானார்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் (92) கரோனா பாதிப்பால் காலமானார். கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் எம். ஆனந்தகிருஷ்ணன்(92), நுரையீரலில் தொற்று காரணமாக ஒரு வாரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பிறந்த ஆனந்தகிருஷ்ணன், கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டட பொறியியல் துறையில் பட்டம் பெற்று, அமெரிக்கா மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொறியியல் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். பின்னர், தாயகம் திரும்பிய அவர், புதுதில்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகத்தின் முதுநிலை அறிவியல் அலுவலராகவும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியராகவும், தலைவராகவும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில்...
1 427 428 429 430 431 440
Page 429 of 440

Right Click & View Source is disabled.

error: Content is protected !!