தமிழகம்

தமிழகம்

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் பொறுப்பை வகித்து வரும் பன்வாரிலால் புரோகித்துக்கு அண்மையில் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் இனி பஞ்சாப் மாநில ஆளுநராக மட்டும் பதவி வகிப்பார் என குடியரசுத் தலைவர் தனது உத்தரவில் கூறியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்ட ஆர்.என். ரவியின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி ஆகும். பீகாரில் பிறந்திருந்தாலும் ஆர்.என். ரவி 1976ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கேரளாவிலும் பிறகு பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர்...
தமிழகம்

இன்று விநாயகர் சதுர்த்தி – ஆளுநர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: விநாயகர் பிறந்த நாளான இந்நன்னாள், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் மகிழ்ச்சியையும் சகிப்புத்தன்மையையும் எடுத்து செல்லும்நாளாகும். கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளும் ஆற்றலை நம் அனைவருக்கும் விநாயகர் அருள்வார். தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, வளமை, அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்தை கொண்டுவருவதாக விநாயகர் சதுர்த்தி அமையட்டும். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: விநாயகர் சதுர்த்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பை தருவதாகவும், அதேசமயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவும், வருங்கால முன்னேற்றத்துக்கு வித்திடுவதாகவும் அமையட்டும். கரோனா எனும் சவாலானசூழ்நிலையை தடுப்பூசிகொண்டு எதிர்க்கும் மன உறுதி கொண்டு இந்த விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: ஞானமேவடிவான திருமேனியைக்...
தமிழகம்

கவிஞர் புலமைப்பித்தன் மறைவு

கவிஞர் புலமைப்பித்தன், 85, உடல்நலக் குறைவால் காலமானார்.அ.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் வயது முதிர்ச்சி மற்றும் உடல்நலக் குறைவால், சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.அவரது உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் இன்று நடக்கின்றன.கோவை மாவட்டம் பள்ளம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்த புலமைப்பித்தன், 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்., நடித்த குடியிருந்த கோயில் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியவர். சமீபத்தில் விஜய் நடித்த தெறி படத்திலும் பாடல் எழுதிஇருந்தார்.அ.தி.மு.க., ஆட்சியில் அரசவைக் கவிஞராக, அ.தி.மு.க., அவைத் தலைவராக, சட்டமேலவை துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். புலமைப்பித்தனின் மனைவி தமிழரசி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே இறந்து விட்டனர். மகன் வழி...
தமிழகம்

விநாயகர் சிலைகள் தொடர்பாக இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை

விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் சார்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதும், பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் அறிவுரையின்பேரில் கூடுதல் காவல் ஆணையர்கள் லோகநாதன் (தலைமையிடம்), செந்தில் குமார் (வடக்கு), என்.கண்ணன் (தெற்கு), பிரதீப் குமார் (போக்குவரத்து) ஆகியோர் 20-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பின் நிர்வாகிகளை நேற்று மாலை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை...
தமிழகம்

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி ரூ.5 லட்சமாக உயர்வு; தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (7ம் தேதி), செய்தித்துறை (செய்தி மற்றும் விளம்பரம்) மானியக் கோரிக்கையின் போது, துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பத்திரிகையாளர்கள் நலனுக்காக 5 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்: 1- பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும். 2- பணிக்காலத்தில் மரணமடைந்த பத்திரிகையாளர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவி நிதி மூன்று லட்சம் ரூபாயிலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். 3- தொழிற்தகுதி, திறன் மேம்பாடு, மொழித்திறன், நவீனத் தொழில்நுப்டம் குறித்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். 4- இளம் பத்திரிகையாளர்கள் இந்திய அளவில் புகழ்மிக்க இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப்...
தமிழகம்

பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய தேர் பவனி

கரோனா நோய்த் தொற்று காரணமாக, பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்று பெரிய தேர் பவனி நடைபெற்றது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்த பின்னர் கொடி ஏற்றப்பட்டது. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இரவு பெரிய தேர் பவனி நடைபெற்றது. புனித ஆரோக்கிய அன்னை பெரிய தேரில் எழுந்தருள, பெரிய தேரின் முன்னால் 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோனியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோர் எழுந்தருள, தேர்பவனி பேராலயத்தை சுற்றிலும் வலம் வந்தது. வழக்கமாக...
தமிழகம்

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும்!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி , கோவை , திருப்பூர் , தேனி , திண்டுக்கல் , தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . 09.09.2021, 10.09.2021: தென் மாவட்டங்கள் , கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . சென்னையை பொறுத்தவரை...
தமிழகம்

அரசியல் செய்ய கடவுள்தான் கிடைத்தாரா..? அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்..!!

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார். அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவரும் சாமியின் திருப்பெயரைக் கொண்டிருக்கிறார். இறைவனை முன்னிறுத்தி அரசியல் செய்து, அதன் வாயிலாகத் தேவையில்லாத சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவது, ஒன்றாக வாழுகின்ற மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற செயல்களில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். யாரையும் வழிபட வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லோரும் அவர்களின் வீட்டில் இருந்தே சிறப்பாக வழிபடலாம். விநாயகர் வேண்டிய கோரிக்கைகளை...
தமிழகம்

11 பேருக்கு ‘நல்லாசிரியர்’ விருது!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 11 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருதை கலெக்டர் வினீத் வழங்கினார்.பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில், மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இவ்வாண்டு, திருப்பூர் மாவட்டத்தில், 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் நடந்தது.இதில், மாவட்டத்தை சேர்ந்த, 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு தொகையை திருப்பூர் கலெக்டர் வினீத் வழங்கி கவுரவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் நாகராஜன், மகேந்திரன், ராஜகோபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்:கோ.சுரேஷ், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி.ந.தெய்வீகன், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைபள்ளி, செலாம்பாளையம்.வே.சின்னராசு, பட்டதாரி ஆசிரியர், பாரதி நுாற்றாண்டு...
தமிழகம்

‘மத்திய அரசு மீது பழிபோடக் கூடாது’;விநாயகர் சதுர்த்திக்கு அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

"தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும்" என, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு தடை விதிப்பது ஒருதலைப்பட்சமானது. மத விழாக்களை வீடுகளில் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியதால், இங்கு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிப்பதாகக் கூறி, மத்திய அரசு மீது பழிபோடுவதை கண்டிக்கிறோம்.நாடு முழுவதும் எல்லா மத விழாக்களையும் தொற்று பரவாமல் கொண்டாட வேண்டும் என்பதுதான் அந்த சுற்றறிக்கை.மத்திய அரசு சொன்னபடி நீட், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினார்களா. கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானாவில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளித்து உள்ளனர். அது போல் இங்கும் அனுமதிக்க வேண்டும். டாஸ்மாக், பூங்காக்கள் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.விநாயகர் ஊர்வலம் நடத்தினால் கொரோனா பரவும் என்பது எந்த வகை நியாயம்.விநாயகர்...
1 407 408 409 410 411 441
Page 409 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!