தமிழகம்

தமிழகம்

பாமக தனித்து நிற்பதால் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை: பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து நிற்பதால் பாஜக, அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் அருகே முடிச்சூர் கிராம ஊராட்சியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து எச்.ராஜாநேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதால் அதிமுக, பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றிபெறும். பிரிந்து நிற்பதால் பாமகவுக்குதான் நஷ்டம். 4 மாத திமுக ஆட்சியில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எங்கள் கூட்டணிக்கு பலமே...
தமிழகம்

மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்துவோர் மீது நடவடிக்கை – தமிழக அரசு

மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டு வருவதாக உள்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்றாம் பாலினத்தவர் மற்றும், தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக டிஜிபி விதிகளில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக உள்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்....
தமிழகம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; 39 ஒன்றியங்களில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அத்துடன், இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் 9-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடந்தது. மொத்தமுள்ள 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், பரிசீலனையின்போது 1,246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 25-ம் தேதி மாலை இறுதி வேட்பாளர்...
தமிழகம்

புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்

புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில் இஓஎஸ்-4 (ரிசாட்-1ஏ) மற்றும் இஓஎஸ்-6 (ஓசோன் சாட்-3) ஆகிய 2 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முதல் சிறிய வகை ராக்கெட் (எஸ்எஸ்எல்வி) மூலமாக இஓஎஸ்-2 என்ற மைக்ரோசாட் செயற்கைக் கோளும் செலுத்தப்பட உள்ளது. எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் ஏவப்படும் செயற்கைக் கோளின் செயல்பாடு தகுதிகுறித்து பல்வேறு கட்ட சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த 3 செயற்கைக் கோள்களும் விவசாயம், உள்நாட்டு விவகாரங்கள், புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த கண்காணிப்புக்கு...
தமிழகம்

தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்: 25 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

தமிழகத்தில் 4ஆவது முறையாக பிரமாண்ட தடுப்பூசி முகாம் மாநிலமெங்கும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 4ஆவது முகாம் இன்று 20 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 3 முகாம்களில் மட்டும் சுமார் 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 35% பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக்கொள்ளவில்லை என்றும் 65% பேர் 2ஆவது தவணை ஊசி செலுத்திக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அவர்கள் இன்றைய முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை,...
தமிழகம்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ‌‌‌‌‌‌‌கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வாங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ...
தமிழகம்

கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும்: எச்.ராஜா

''தமிழக அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும்'' என்று பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்து மக்களின் தற்போதைய நிலை குறித்துதான் ருத்ரதாண்டவம் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு சிலர் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லுாரிகள் கட்டப்பட்டால், மத வழிபாடு குறித்த பாடம் வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் கருத்து. அதை தமிழக அரசு செயல்படுத்துமா.கோயில் நகைகளை உருக்கக்கூடாது என்று, விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அறநிலையத்துறை சிறப்பாக செயல்படவும், தமிழகத்தில் காணாமல் போன 8000 கோயில்களை மீட்டெடுப்பதற்கு அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்க தயார். மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான் பல்வேறு திட்டங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்....
தமிழகம்

தீவிரமாகும் ‘ஷாகீன்’ புயல்: தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் அக்.4 வரை கனமழை

அரபிக் கடலில் உருவாகியுள்ள 'ஷாகீன்' புயல் இன்று (அக்.2) தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் அக். 4 வரை கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான 'குலாப் புயல்', கடந்தஞாயிற்றுக்கிழமை ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோரமாவட்டங்களில் கரையைக் கடந்தது. பிறகு வலுவிழந்த இந்த புயல், தெலங்கானா, மகாராஷ்டிரா வழியாக நகர்ந்து, குஜராத் கடற்பகுதியில் மையம் கொண்டிருந்தது. இதையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புதிய புயலாக உருவெடுத்தது. கத்தார் அளித்த பரிந்துரையின்படி இந்த புயலுக்கு 'ஷாகீன்' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரபிக் கடலில் உருவான 'ஷாகீன்' புயல், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, குஜராத்தின் தேவபூமி துவாரகாவில் இருந்து...
தமிழகம்

நடிப்புலக சரித்திர நாயகன் சிவாஜி கணேசன் பிறந்த நாள், இன்று

தமிழ் திரையுலகில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்து எல்லோராலும் நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். அவரின் 93வது பிறந்த நாளான இன்று அவர் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம். இன்றும் கோடம்பாக்கத்தை நோக்கி நடிப்பு கனவுகளோடு படையெடுக்கும் பலருக்கும் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர் சிவாஜி கணேசன். 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தஞ்சாவூர் அருகில் உள்ள சூரக்கோட்டை என்ற கிராமத்தில் கணேசனாக பிறந்த இவர், இளம் வயது முதலே நடிப்பின் பால் ஈர்க்கப்பட்டு மேடை நாடகங்களில் எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கினார். பேரறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடித்த இவரது நடிப்புத்திறனை பார்த்து வியந்த தந்தை பெரியார், 'சிவாஜி' கணேசன்' என்று மேடையில் அழைத்தார். அன்று பெரியார் உச்சரித்த அந்த...
தமிழகம்

தேனி, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை முதல் 4-ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக அக்.1 முதல் 4-ம் தேதிதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டாமாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 1-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், 2, 3, 4 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில்...
1 402 403 404 405 406 441
Page 404 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!