தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100-ஐ கடந்ததால் சரக்கு லாரி வாடகைக் கட்டணம் 20% உயர்வு: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம்

தமிழகத்தில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100-ஐக் கடந்துள்ளதால், சரக்கு லாரிகளின் வாடகைக்கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கலால் வரிஉயர்வு, மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்பு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை மேலும், உயர்ந்து வருகிறது. இதனால், டீசல் விலை தமிழகத்தில் முதல்முறையாக ரூ.100.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, லாரி உரிமையாளர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, காய்கறிகள், மணல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்லும் சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளனர். இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்...
தமிழகம்

“வாரிசு அரசியல்” வைகோ செய்தது தவறில்லை.. ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கையில் – காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு

"வாரிசு அரசியல்" வைகோ செய்தது தவறில்லை..மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அக்கட்சியினர் அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கியதில் எவ்வித வாரிசு அரசியலும் இல்லை. வாரிசு அரசியல் என்பது ஒருவரை திணிப்பது ஆகும். துரை வையாபுரிக்கு பதவி வழங்கப்பட்டது தொண்டர்களின் விருப்பப்படியே நடந்தது ஆகும் என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் மதிமுக கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.தற்பொழுது மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் இதனையடுத்து கோவை மாவட்ட சேர்ந்த மேலும் இரண்டு நிர்வாகிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ நீதி கேட்டு பயணம் மேற்கொண்டிருந்தார்....
தமிழகம்

அரசு பேருந்தில் ஏறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; பொதுமக்கள் நெகிழ்ச்சி!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் தியாகராய நகர் - கண்ணகி நகர் வழித்தடத்தில் செல்லும் M19B பேருந்தில் எறிய, முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா, போதுமான வசதி உள்ளதா, கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு உள்ளது, இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பயணிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். முன்னதாக சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகரில் உள்ள தடுப்பூசி முகாமிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார். பின்னர் சென்னை எழில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மெகா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம்...
தமிழகம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (அக். 24) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் முக்கியமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் ராகு தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மேலும், ராகு கால பூஜையின்போது ராகுபகவானின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யும்போது, அந்த பால் நீலநிறமாக மாறி வருவது இன்றளவும் காணப்படுகிறது. இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, உபயதாரர்கள் உதவியுடன் ரூ.5 கோடி செலவில் 7 ராஜகோபுரங்கள், 13 பரிவார தெய்வ விமானங்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கோயில் குடமுழுக்கு விழா கடந்த 18-ம்...
தமிழகம்

அலர்ட்! இந்த 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது . இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , வேலூர் , ராணிப்பேட்டை , திருவள்ளூர் , கிருஷ்ணகிரி , ஈரோடு , சேலம் , தர்மபுரி , திருச்சிராப்பள்ளி , கரூர் , நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது...
தமிழகம்

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புபவர் மீது நடவடிக்கை: நடிகை காயத்ரி ரகுராம் போலீஸில் மனு

திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலத் தலைவராக உள்ளார். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். இந்நிலையில் எப்போதோ நடந்த நிகழ்ச்சியில் இருந்து எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட சில மோசமான புகைப்படங்களை, மர்ம நபர் ஒருவர் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்து, மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார். இது எனது நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்து, அவரது பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலி யுறுத்தியுள்ளார். புகார் அளித்த பின்னர் நடிகை காயத்ரி ரகுராம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``திமுக எம்.பி.க்கள் கனிமொழி, செந்தில்குமார் ஆகியோர்,...
தமிழகம்

கொரோனா குறைந்தால் சென்னை சங்கமம் நடத்தப்படும் – கனிமொழி எம்பி

கொரோனா அச்சுறுத்தல் குறைந்தால் முதல்வரின் அனுமதி பெற்று நிச்சயம் சென்னை சங்கமம் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக மகளிர் அணிச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்நிலையில் இந்தாண்டு சென்னை சங்கமம் நிகழுமா என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கொரோனா அச்சுறுத்தல் நீங்கி சாதகமான சூழல் அமைந்தால் நிச்சயமாக நடத்தப்படும் என கனிமொழி பதில் அளித்தார்....
தமிழகம்

சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய உதவியாளர் சரவணன் வீடு, நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், மற்றொரு உதவியாளர் முருகன் வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அந்த இடங்களில் கடந்த 18-ம்தேதி சீல் வைக்கப்பட்டது. அன்று சோதனையின் போது ஒத்துழைப்பு இல்லாததாலும் அலுவலகம், வீடு பூட்டப்பட்டிருந்ததாலும் லஞ்ச ஒழிப்புத்துறை சீல் வைத்து சென்றது. இந்நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவை பெற்று பூட்டை உடைத்து சோதனை நடத்தி வருகின்றனர். சி. விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் கடந்த 17ஆம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது....
தமிழகம்

மீனவர்கள் பிரச்சனை : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தபோது, காணாமல் போன மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவக் கப்பலை விரட்டிப் பிடிக்க முயற்சித்த போது மூழ்கிப்போன கப்பலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 18.10.2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியது. அதிலிருந்த மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு மீனவரை தேடும் பணி...
தமிழகம்

மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி விரைவில் தொடங்கும்

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மாதவரம் - சிறுசேரி தடத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. மற்ற தடங்களைக் காட்டிலும் மாதவரம் - சிறுசேரி தடத்தில்தான் மொத்தமுள்ள 45 கி.மீ தூரத்தில் அதிகபட்சமாக 26 கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைகிறது. இப்பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் - சிறுசேரி இடையே புரசைவாக்கம், அயனாவரம், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாக இந்த தடம் அமைக்கிறது. மற்ற தடங்களைக் காட்டிலும் இந்த தடத்தில் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள்...
1 398 399 400 401 402 441
Page 400 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!