தமிழகம்

தமிழகம்

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக தமிழ்நாட்டின்7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து இரண்டு நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும். இதன் காரணமாக இன்று தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், மதுரை, விருதுநகர் ,சிவகங்கை, கடலூர் ,திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் , புதுக்கோட்டை, கடலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம்...
தமிழகம்

எப்படி இருக்கிறார் ரஜினி? ஒய்.ஜி. மகேந்திரன் விளக்கம்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கோலோச்சி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு ரஜினிகாந்த்திற்கு உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை காரணமாக ஆண்டுதோறும் அமெரிக்கா சென்று ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். சமீபத்தில் டெல்லியில் 67ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனால் டெல்லி சென்றிருந்த அவர் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இந்த சூழலில் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினி மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி பரவ தொடங்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து விளக்கமளித்த லதா ரஜினிகாந்த், 'ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து...
தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக நவ.1-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நவம்பர் 1-ல் வெளியிடப்படும் என கோவையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமை வகித்து பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் 1-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில்...
தமிழகம்

ஓபிஎஸ் அல்லது சசிகலாவின் தலைமையின்கீழ் அதிமுக வராவிட்டால் அழிவை சந்திக்க நேரிடும்: நீதிமன்றத்தில் ஆஜரான வா.புகழேந்தி ஆதங்கம்

ஓபிஎஸ் அல்லது சசிகலாவின் தலைமையின்கீழ் அதிமுக வராவிட்டால், அக்கட்சி அழிவை சந்திக்கநேரிடும் என நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான வா.புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவில் செய்தித் தொடர்பாளராக பதவிவகித்த பெங்களூரு வா.புகழேந்தி, கடந்த ஜூன்மாதம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள காரணம், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி இருவருக்கும் எதிராக குற்றவியல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வா.புகழேந்தி சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் நேரில் ஆஜராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகிய இருவருக்கும் விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.அலிசியாமுன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது...
தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்ற செளந்தர்யா ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் 'ஹூட்' செயலியை நடிகர் ரஜினி கடந்த திங்கட்கிழமை அறிமுகப்படுத்தினார். எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை, தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும், வருங்காலத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போல இந்த ஹூட் செயலி பிரபலம் அடைய வாழ்த்துவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவில் அப்போது தெரிவித்தார். ஹூட் ஆப் அறிமுக விழாவில் பேசிய செளந்தர்யா, கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இது இருக்கும் என தெரிவித்தார். அதோடு குறுஞ்செய்திகளில் நாம் பயன்படுத்தும் எழுத்துகளுக்கு உணர்வுகள் இல்லை எனவும், ஆனால் ஒருவரின் குரலுக்கு உணர்வுகளை தரும் வலிமை இருப்பதாகவும் குறிப்பிட்டார்....
தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பகலில் சரக்கு வாகனங்கள் வர தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சரக்கு வாகனங்கள் பகலில் வர அனுமதி இல்லை என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை சார்பில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு போக்குவரத்து காவல் எல்லைக்கு உட்பட்ட புறநகர் பேருந்து நிலையத்துக்கு நவ.1 முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 3 ஆயிரம் அரசுப் பேருந்துகள், 800 தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் காரணமாக அதிக அளவில் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்களை பகல் நேரத்தில் அனுமதிக்க இயலாது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும்படி, தங்களின் முகவர்களுக்கு வியாபாரிகள் தெரிவிக்க வேண்டும். சரக்குகளை...
தமிழகம்

சிசிடிவி கேமராக்களை அகற்றியது ஏன்..?: சுப்ரீம் கோர்ட்டில் அப்போலோ விளக்கம்..!

முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்குக்கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை தரப்பில், 'ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது. மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறாததால், மருத்துவ ரீதியிலான விவரங்களை எப்படி தெரிவிக்க முடியும். அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைபட்சமானது. எங்கள் நற்பெயர் சார்ந்த விஷயம் என்பதால் அதனை ஆரம்பத்திலேயே எதிர்க்க உரிமையுண்டு. எங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் கூறுகிறோம். ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அங்கு ஆஜராக மாட்டோம். மேலும், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனியுரிமைக்காக அப்போதைய...
தமிழகம்

சிறப்பாக பணியாற்றும் போலீஸாருக்கு நட்சத்திர காவலர் விருது: காவல் ஆணையர் அறிவிப்பு

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போலீஸாருக்கு அனுப்பிய சுற்றறிக்கை: சிறப்பாக பணியாற்றும் போலீஸாருக்கு இனி கூடுதலாக ஒவ்வொரு மாதமும் விருது வழங்கப்படும். கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) தலைமையிலான குழு, சென்னை பெருநகரகாவல் துறையில் சிறப்பான போலீஸாரை கண்டறிந்து அவர்களது பணியைமதிப்பிட்டு 'மாதத்தின் நட்சத்திர காவலர்' என்றவிருதை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 'மாதத்தின் நட்சத்திரகாவலர்' விருதை பெறதேர்ந்தெடுக்கப்படும் போலீஸாருக்கு ரூ.5ஆயிரம் பண வெகுமதியுடன், தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும். எனவே, போலீஸார்மெச்சத்தகுந்த பணியில்இருந்து அதன் விபரத்தை தங்கள் துணை ஆணையர் மூலமாக கூடுதல் காவல் ஆணையருக்கு தெரிவித்து மாதத்தின் நட்சத்திர காவலர் விருதினை பெறும் வகையில் சிறப்பாக பணி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்....
தமிழகம்

முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் விசாரணை

சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் திங்கள்கிழமை சுமாா் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் எம்.ஆா். விஜயபாஸ்கா் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் ஆகியவற்றில் முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்தது. இதன் அடிப்படையில் சொத்து குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையினா் பதிவு செய்தனா். அவா் மற்றும் குடும்பத்தாா் தொடா்புடைய 26 இடங்களில் கடந்த ஜூலை 22-இல் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம், சொத்து, முதலீட்டு ஆவணங்கள், பண பரிவா்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செப்டம்பா் 30-இல் ஆஜராகும்படி எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அப்போது உள்ளாட்சித் தோதலுக்காக அவா் ஆஜராகவில்லை. இதை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை...
தமிழகம்

‘தாதா சாகேப் பால்கே’ விருதை எனது குருவான கே.பாலச்சந்தருக்கு சமர்பிக்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த்

இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக கருதப்படும் 'தாதா சாகேப் பால்கே' விருது. இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பிரபல நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள். இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் இந்த விருதை ரஜினிகாந்த் பெறுகிறார். கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த விருதை அவருக்கு வழங்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். விருது வழங்கும் விழாவில் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்...
1 397 398 399 400 401 441
Page 399 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!