தமிழகம்

தமிழகம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் மகா தேரோட்டம்: அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில்கார்த்திகை தீபத் திருவிழாவைஒட்டி மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதிவிழா தொடங்கி 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம், 7-ம் நாள் உற்சவத்தன்று நடைபெறும். இதில் பராசக்தி அம்மன் திருத்தேரை, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பர். இத்தகைய பிரசித்திப் பெற்ற மகா தேரோட்டம், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாட வீதியில் நடைபெறவில்லை. அதற்கு மாற்றாக கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் (பஞ்ச மூர்த்திகள்) 5 திருத்தேர்களில் தனித்தனியே எழுந்தருளிபக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் மகா...
தமிழகம்

தமிழக பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை: அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார்

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை சார்பில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அஸ்வின், துணைத் தலைவர் மருத்துவர் ராஜு பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சிம்ஸ் - எஸ்ஆர்எம் மருத்துவ நிறுவனம் சார்பில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது. சபரிமலை அடிவாரத்துக்கு செல்லும் இந்த ஆம்புலன்ஸ் வாகனம், 2 மாத காலத்துக்கு அங்கேயே இருந்து தமிழக பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவசர உதவிக்கும் பயன்படும். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு...
தமிழகம்

டெல்லி வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா: தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்

டெல்லியில் நடைபெறும் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், ஆண்டுதோறும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி நவ. 14முதல் 27-ம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 'சுயசார்புஇந்தியா' என்ற கருப்பொருளில் நடைபெறும் 40-வது இந்தியப் பன்னாட்டுவர்த்தகப் பொருட்காட்சியை மத்தியஅமைச்சர் பியூஷ்கோயல் கடந்த 14-ம்தேதி தொடங்கி வைத்தார். இதில், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், செய்தி, சுற்றுலா, வேளாண்மை, தோட்டக்கலை, தொழில்,மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தொழில்வளர்ச்சி நிறுவனம், கைத்தறி துறை, தொழில் முன்னேற்ற நிறுவனம், சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அரசு, அரசு சார்பு துறைகள் பங்கேற்று,தங்கள் வளர்ச்சித் திட்டங்களை காட்சிப்படுத்தியுள்ளன. செய்தித் துறை சார்பில்அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்படங்கள், உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கீழடி...
தமிழகம்

ஊட்டி மலை ரயில் சேவை நவ.30 வரை ரத்து!

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ள, 100 ஆண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ளூர் வாசிகள் மட்டுமன்றி வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பயணம் செய்வது வழக்கம். கடந்த அக்டோபர் 23ஆம் தேதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகையை நோக்கி மலை ரயில் புறப்பட்ட நிலையில், பல்சக்கரம் இருப்பு பாதையின் மீது மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் ,மலை ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து மண்சரிவை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து மலை ரயில் தண்டவாள பாதையில் பெரிய அளவிலான பாறைகள் உருண்டு...
தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆய்வு

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் , இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த நிலையில், அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்டா மாவட்டங்களை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இருவரும் ஆய்வு செய்ய உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கம்; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதல்வரின் முகவரி துறையில் மனுக்கல் தீர்வுக்காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் இறையன்பு வெளியிட்ட அரசாணையில், "முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு (ஐஐபிஜிசிஎம்எஸ்), உங்கள் தொகுதியில் முதல்வர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது. முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின்...
தமிழகம்

சென்னை புறநகா் ரயில் பிரிவில் மட்டும் மொபைல் யுடிஎஸ் செயலி

சென்னை புறநகா் ரயில் பிரிவில் மட்டும் மொபைல் யுடிஎஸ் செயலி செயல்படுத்தப்படுகிறது என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. புறநகா் இல்லாத பிரிவுகளில் முன்பதிவில்லாத பயணச்சீட்டு வாங்க பயணச்சீட்டு கவுன்ட்டா்களை பயணிகள் அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கரோனா நோய்த்தொற்று பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் பயணிகள் ரயில் சேவையை தெற்கு ரயில்வே பல்வேறு கட்டமாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் புறநகா் ரயில் சேவைகள் தொடா்பாக, சில பிரிவு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சென்னை புகரில் நான்கு வழித்தடங்களிலும் அனைத்துப் பிரிவு பயணிகளும் நேரக் கட்டுப்பாடு இன்றி பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள். இது திங்கள்கிழமை (நவ.15) முதல் அமலுக்கு வருகிறது. சென்னை புறநகா் போக்குவரத்து முறையின் 4 வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்படாத ஒற்றை பயண டிக்கெட், திரும்பும்...
தமிழகம்

இன்று 8வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: 50,000 முகாம்கள் ஏற்பாடு

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு, 8ஆவது முறையாக மெகா தடுப்பூசி முகாமை நடத்துகிறது. தலைநகர் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 2 ஆயிரம் முகாம்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மெகா கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்....
தமிழகம்

குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் – ஒளிச்சுடர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இன்று நாடு முழுவதும், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் , ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், 'குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் - ஒளிச்சுடர்கள்! ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்! குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம்! குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு...
தமிழகம்

மாணவி தற்கொலை விவகாரம்: தலைமறைவாக இருந்த தனியாா் பள்ளி தலைமை ஆசிரியை பெங்களூரில் கைது

கோவையில் பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியை மாற்றிய மாணவி கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனது வீட்டில் வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே ஆசிரியர் மீது புகார் தெரிவிக்கப்பட்டும்...
1 393 394 395 396 397 441
Page 395 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!