செய்திகள்

தமிழகம்

அகில இந்திய ஸ்ரீவிராட் விஸ்வகர்மா தேசிய செயலாளர் ஜெகதீசனுக்கு வாழ்த்து

அகில இந்திய ஸ்ரீவீராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு அகில இந்திய தேசிய செயலாளர் சின்னையா ஆச்சாரி ஜெகதீஸ்வரனுக்குவேலூர் மாவட்ட மூத்த பத்திரிக்கையாளர் கே எம் வாரியார், திருவள்ளுவர் மணவாளன் நகரில் உள்ளமாநில அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

நிலவில் சாதனை படைத்த இந்தியாவின் சந்திரயான் -3

இந்தியாவின் இஸ்ரோ தயாரித்த சந்திராயன் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14-ல் விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென்துருவத்தை நோக்கி இன்று மாலை 5.44 மணிக்கு பயணிக்க தொடங்கி சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியது.  இதன்மூலம் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு நமது இந்தியா.  இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

ஈஷா நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டிகள் : தமிழ்நாடு முழுவதும் வரும் 25-ம் தேதி தொடக்கம்

‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மாநில அளவிலான கபடி போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும். இது தொடர்பாக ‘ஈஷா கிராமோத்சவம்’ குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈஷா அவுட்ரீச் அமைப்பானது கிராமப்புற மக்களின் நலனுக்காக...
தமிழகம்

வேலூரில் ரூ.197 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் காணொலி மூலம் துவங்கி வைத்த முதல்வர்

வேலூர் பென்ட்லெண் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு துறைசார்பில் ௹. 197.81 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் துவக்கிவைத்தார். இதில் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

மீனவ மக்களுக்கு எதிராக செயல்படும் தமிழ்நாட்டரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

தமிழ்நாடு புதுவை மீனவர் சமுதாய பாதுகாப்பு குழுவின் சார்பில் திரு. ரூபேஸ் குமார் அவர்களின் தலைமையில் திரு.இரவி முன்னிலையில் கடந்த 19/8/2023 அன்று நடைபெற்ற கடல் தமிழக மீனவ மக்களின் கடல் உரிமைகளை பறிக்கும் 'கடல் மேலாண்மை திட்ட குழு' என்ற அமைப்பை கலைக்கவும் தமிழக கடலோரங்களில் காற்றாலை, புதிய துறைமுகங்கள் அமைத்து மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கவும் நடக்கும் செயல்களை தடுக்கவும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு...
தமிழகம்

ஈஷாவின் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம் : நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பயன்பெற்றனர்

ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் பல்துறை மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் ஆனைமலையில் நேற்று (ஆக.20) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை...
இந்தியா

சந்திரயான்-3: லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.

எல்.எச்.டி.ஏ.சி. அதிநவீன கேமரா மூலம் 19ம் தேதி எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் வெளியீடு. தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது விக்ரம் லேண்டர். வரும் 23ம் தேதி மாலை 6.04க்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது. செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூரில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுகவினர் உண்ணாவிரதம்

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மதுரை நீங்கலாக திமுக இளைஞர் அணி சார்பில் இன்று 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் நடந்தது.  இதனை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்துக்கி வைத்தார் இதில் எம் எல் ஏ ,மேயர், துணை மேயர் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலை பார்வையிட்ட ஜார்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோயிலை ஜார்கண்ட் ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்பு சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூர்அடுத்த காட்பாடியில் உள்ள சன்பீம் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிளையாட்டு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா பள்ளி அரங்கில் நடந்தது.  பள்ளி மாணவி சஹானாவரவேற்றார். விளையாட்டு அறிக்கையை மாணவி திவ்யஸ்ரீ தொகுத்தார்.  பள்ளி தலைவர் ஹரிகோபாலன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் கே.எஸ்.ரவி, கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.  டாக்டர் தங்க பிரகாஷ், பள்ளி துணைத் தலைவர் டாக்டர்...
1 90 91 92 93 94 599
Page 92 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!