செய்திகள்

தமிழகம்

வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலருக்கு கும்மாங்குத்துவிட்ட மற்றொரு திமுக கவுன்சிலர் !! பணம் கொடுக்கல் -வாங்கல் தகராறு

வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் முருகன் (30-வது வார்டு), சுதாகர் (24-வது வார்டு) இவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து உள்ளது.  இந்த நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே தனக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் சுதாகர் நின்றுகொண்டு இருந்தார்.  அப்போது முருகன் அங்குள்ள ஓட்டலில் உட்கார்ந்து கொடுக்கல், வாங்கல் குறித்து காரசார விவாதம் நடந்தது. அப்போது ஆத்திரம் அடைந்த முருகன், மற்றொரு கவுன்சிலர்...
தமிழகம்

காட்பாடி காங்கேயநெல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதார அலுவலர் சிவக்குமார்.

வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி உத்தரவின்பேரில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், 15 -வார்டுகளில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து பேசியபோது: உங்கள் வீட்டை சுற்றியும் பயன்படாத பொருள்களில் மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும், சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். உடன் சுகாதார பணியாளர்கள் செயல்முறை விளக்கம் காட்டினர். செய்தியாளர்...
இந்தியா

பெங்களூருவில் 144 தடை உத்தரவு : கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவிய பந்த் நடைபெற உள்ளதன் எதிரொலி

பெங்களூருவில் இன்று நேற்று 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, இன்று கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தீர்வு வேண்டி….

திரு வீரராகவன் சாலமங்கலம் பஞ்சாயத்தில் குடும்பத்த்துடன், பூர்வீகமாக வசித்து வருபவர். பொது பிரச்சனைகளை கையில் எடுத்து போராடி வரும் இவர் தனக்கு மன உளைச்சல் ஏற்பட காரணம் சாலை வசதி சரியில்லாமை, 40 அடி சாலை கொண்டு வரவுவதற்காக தன் பூர்வீக நிலம் தங்கள் கைவிட்டு போகும் தருணம், நீர் நிலைகளில் கொசுக்கள் நிறைந்திருப்பது, இதனால் மலேசரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்ககள் உருவாகும் அச்சம் போன்ற பல பொது பிரச்சனைகளை...
தமிழகம்

மலர்க்கண்ணன் பதிப்பகமும், மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா

செப்டம்பர் 24, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மலர்க்கண்ணன் பதிப்பகமும், மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து ஆசிரியர் தின விழா, நூல் வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடத்தியது. விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து ஆசிரியர்களும், பேராசிரியர்களும் பெருமளவில் வந்திருந்தினர். மேலும், தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்றுநர்களும், சிறுகுறு நிறுவன இயக்குநர்களும் பங்கேற்று விருது பெற்றனர். விழாவிற்கு...
இந்தியா

திருப்பதி-திருமலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு

திருப்பதி - திருமலை ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடந்துவந்த பிரமோற்சவத்தின் நிறைவ நாளான நேற்று வராகசுவாமி கோயில் எதிரே மலையப்பசுவாமி மற்றும் தாயார்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சுகந்த திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தன. கோயில் தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்கள். தீர்த்தவாரிக்கு பின்னர் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி...
தமிழகம்

வேலூர் தங்க கோயில்சக்தி அம்மாவிடம் ஆசி பெற்ற அசாம் முதல்வர்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம்தங்ககோயிலில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். அருகில் கோயில் இயக்குநர் சுரேஷ், ஸ்ரீ நாராயணி பீட மேலாளர் சம்பத் ஆகியோர் உள்ளனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் குடியாத்தத்தை சேர்ந்த வி.ராமு, அதிமுக அமைப்பு செயலாளராக நியமனம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு .

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அஇஅதிமுக அமைப்பு செயலாளர்களாக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் வேலூர் முன்னாள் மாவட்ட செயலாளர் குடியாத்தத்தை சேர்ந்த வி.ராமுவும் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றும் துணை நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் சார்பில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி பகுதியில் டெங்கு கொசுக்களை அழிக்க புகை மருந்து தெளிக்கும் மாநகராட்சி சுகாதாரத்துறை

வேலூர் மாநகராட்சி ஆணையர் இரத்தினசாமி உத்தரவுப்படி காட்பாடி மண்டலம் வார்டு 6 ஆண்டாள் நகர் பகுதியில் வளர்ந்த கொசுக்களை ஒழிக்கவேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் புகை மருந்து பணியாளர்கள் மூலம் தெளிக்கப்பட்டது.  மற்ற 15 வார்டுகளிலும் மருந்து தெளிக்கபடவுள்ளது.  டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கொசு கடிக்காமல் பார்த்து கொள்ள பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதார அலுவலர் சிவக்குமார் பொதுமக்களை கேட்டுகொண்டு உள்ளார்....
தமிழகம்

ஆந்திராவில் தமிழக பறக்கும் படை அதிரடி 920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் : வேலூர் தனி தாசில்தார் அதிரடி

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்யவேலூர் பறக்கும்படி தனி தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் ஆந்திர மாநிலம் பல்ஜி கண்டிகை, மற்றும்புத்தூர் ரயில்நிலையத்தில் அங்குள்ள காவலர்கள் உதவியுடன் சோதனை செய்தபோது தமிழகத்திலிருந்து கடத்தி வந்த ரேசன் அரிசி 920 கிலோவை பறிமுதல் செய்து வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் நுகர்பொருள் வணிக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
1 78 79 80 81 82 599
Page 80 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!