மதுரையில் கல்லறை திருநாளை முன்னிட்டு கல்லறைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிராத்தனை
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தில் இறந்தோரை என்றும் மறப்பதில்லை என்பதற்கேற்ப ஆண்டு தோறும் நவம்பர் 2 ஆம் நாளை கல்லறை திருநாளாக கடைபிடிக்கிறார்கள். அன்றைய நாளில் தங்கள் குடும்பங்களில் இறந்த மூதாதையர்கள், பெற்றோர், உறவினர்கள் கல்லறைகளுக்கு குடும்பத்தோடு சென்று கல்லறைகளை புதுப்பித்து மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிற்க்காக வேண்டுதல் செய்து விட்டு வருவது வழக்கம். மேலும் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு...