செய்திகள்

செய்திகள்விளையாட்டு

22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தியது நியூசிலாந்து!

22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தியது நியூசிலாந்து! நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி...
உலகம்உலகம்செய்திகள்

இஸ்ரேலின் புதிய பிரதமரானார் நப்தாலி பென்னட்; ஆட்சியை இழந்தார் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்றார். பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன. ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 60 எம்.பி.க்கள் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், 59 எம்.பி.க்கள் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம், 12 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் நீடித்த பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) பதவிக்காலம்...
உலகம்செய்திகள்

வளரும் நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி! ஜி7 மாநாட்டில் ஒப்புதல்!!

வளரும் நாடுகளுக்கு 2022ஆம் ஆண்டுக்குள் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவ ஜி7 மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் இடம் பெற்றுள்ள ஜி-7 கூட்டமைப்பின் 47ஆவது மாநாடு பிரிட்டனின் கார்ன்வால் பகுதியிலுள்ள செயின்ட் ஐவ்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜொமனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும்...
இந்தியாசெய்திகள்

72 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று 70,421 ஆக சரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று கடந்த 72 நாட்களுக்கு பிறகு 70,421 குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,421 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம்...
இந்தியாசெய்திகள்

கொரோனா உயிரிழப்பு தரவுகளை திருத்தி அமைக்கும் மகாராஷ்டிரா.. பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

கடந்த சில நாட்களாக, மகாராஷ்டிரா தனது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை அப்டேட் செய்து வருகிறது, இதனால் அங்கு கொரோனா உயிரிழப்பு 8,800 முதல் 1.08 லட்சம் வரை அதிகரித்துள்ளது, கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு இருந்தது. இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா. அங்கு முழு ஊரடங்கிற்கு இணையான 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது....
இந்தியாசெய்திகள்

கம்ப்யூட்டர் ஊடுருவல்களால் சமூக பாதிப்பு; ஜனநாயக மதிப்புகளை அழிக்கக்கூடாது: பிரதமர் மோடி வலியறுத்தல்

கம்ப்யூட்டர் ஊடுருவல்களால் சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன, ஜனநாயக மதிப்புகளை மேம்படுத்தும் வழியாக கம்ப்யூட்டர் தகவல்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். ஜி7 உச்சி மாநாட்டின் 2வது நாளில் நடந்த 'ஒன்றாக மீண்டும் கட்டமைத்தல் - திறந்தவெளி சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் மற்றும் மீண்டும் பசுமையை உருவாக்குதல், பருவநிலை மற்றும் இயற்கை' என்ற தலைப்புகளில் நடந்த இரண்டு அமர்வுகளிலும் பிரதமர் ரேந்திர மோடி பங்கேற்றார். திறந்தவெளி...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் துவங்கியது தென்மேற்கு பருவமழை; நீலகிரி, கோவையில் கனமழை

இரண்டு வாரங்களுக்கு முன்பே பருவமழை துவங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் உதகை மற்றும் நீலகிரியின் மற்ற பகுதிகளில் நேற்று தென்மேற்கு பருவமழை துவங்கியது. மே மாத மத்திய பகுதியில் நல்ல மழைப்பொழிவு விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்தது. நேற்று உதகையில் 3.6 மி.மீ மழை பதிவானது. நடுவட்டம் பகுதியில் 10 மி.மீ மழையும், அப்பர் பவானியில் 42 மி.மீ மழையும், அவலாஞ்சியில் 35 மி.மீ மழையும், பந்தலூர் பகுதியில் 25 மி.மீ...
செய்திகள்தமிழகம்

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்! மத்திய அரசு அனுமதி!!

சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து அங்கேயே சில நாட்கள் ஓய்வெடுத்து பின்னர் தமிழகம் திரும்பினார். அதன்பின்னர் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்த போது கொரோனா பரலல் ஏற்பட்டது. இதனால் அவரின் அமெரிக்க பயணம் கடந்த ஆண்டு தடைபட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா 2ஆவது...
செய்திகள்தமிழகம்

கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் ஊரடங்கு தளர்வுகள் திரும்ப பெறப்படும் – முதல்வர்!

தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் கட்டுப்படுவோம், கட்டுப்படுத்துவோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாகவும், நாளொன்றுக்கு 38 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு 50 ஆயிரமாக தாண்டும் என கூறப்பட்ட நிலையில், தமிழக அரசு...
செய்திகள்விளையாட்டு

மயங்கி விழுந்த கிறிஸ்டியன் எரிக்சனைக் காப்பாற்றியது எப்படி?- டென்மார்க் டீம் டாக்டர் விளக்கம்

ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஷார்ட் பாஸ் ஒன்றை மேற்கொண்ட டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், திடீரென அப்படியே தரையில் சாய்ந்தார், பேச்சு மூச்சின்றி கிடந்தார். வீரர்களும் களமிறங்கிய மருத்துவக் குழுவும் அவரது மூச்சையும் நாடியையும் மீட்கப் போராடினர். கார்டியோ பல்மனரி ரிசுசிடேஷன் என்ற சிபிஆர் சுவாச மீட்பு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக டென்மார்க் அணியின் மருத்துவர் கூறும்போது, கிறிஸ்டியன் எரிக்சனின் பல்ஸ் வீழ்ந்து விட்டது. அவருகு...
1 542 543 544 545 546 583
Page 544 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!