செய்திகள்

இந்தியாசெய்திகள்

மேற்கு வங்கம்: முன்னாள் தலைமைச் செயலாளர் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை

மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலாளார் அலபன் பந்தோபாத்யாய் மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியுள்ள மத்திய அரசு அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. யாஸ் புயல் சேதங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட ஆய்வு கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவிர்த்தார். இந்தக் கூட்டத்தில் அப்போது தலைமைச் செயலாளராக இருந்த அலபன் பந்தோபாத்யாயும் கலந்துகொள்ளவில்லை. இதை தொடர்ந்து அவரை மத்திய அரசு பணிக்கு...
இந்தியாசெய்திகள்

கேரளாவில் உள்ள 3 பேருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா!

கேரளாவில் உள்ள மூன்று பேருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா பரவி இருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் உருமாறிக்கொண்டே புதிய வகையாக மாறிக் கொண்டு வருவதால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்தியாவில் ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில் அந்த வைரஸுக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த...
செய்திகள்தமிழகம்

அனைத்து பள்ளிகளுக்கும்.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு.!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில்...
செய்திகள்தமிழகம்

ஆளுநர் உரை மீது இன்றுமுதல் விவாதம்- ஜூன் 24 வரை பேரவைக் கூட்டம்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 24-ம் தேதி வரை நடக்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவை குழு...
செய்திகள்தமிழகம்

யூ டியூபர் பப்ஜி மதனிடம் ஏமாந்ததாக 100-க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் மூலம் புகார்

யூ டியூபர் பப்ஜி மதனிடம் ஏமாந்ததாக 100-க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளனர். பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப் கேம் மதன் குமார் என்ற மதன். சேலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் வேங்கைவாசலில் வசித்து வந்தார். பின்னர் சென்னையில் குடியேறினார். இவர், தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு விளையாடும் போது அதை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது குறித்து லைவ்வாக விளையாடிக்கொண்டே ஆலோசனை வழங்கி...
செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியின் முதல்

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்கள் அடித்தார். ரோஹித் சர்மா 34 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து அணியின் கெயில் ஜேமிசன் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோரது...
செய்திகள்விளையாட்டு

யூரோ கால்பந்து தொடர்: ஸ்பெயின் – போலந்து இடையிலான ஆட்டம் டிரா

யூரோ கால்பந்து தொடரில் போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றத் தவறிய ஸ்பெயின் அணி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்தது. யூரோ கால்பந்து தொடரில் ஸ்பெயினின் செவில்லே நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 'இ' பிரிவில் உள்ள ஸ்பெயின் - போலந்து அணிகள் மோதின. 25-வதுநிமிடத்தில் ஸ்பெயின் அணிமுதல் கோலை அடித்தது. பாக்ஸ் பகுதியின் ஓரத்தில்இருந்து ஜெரார்ட் மோரேனோஅடித்த பந்தை கோல்கம்பத்துக்கு மிக...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்கா: தைவானுக்கு 25 லட்சம் தடுப்பூசிகள்

சீன ஆட்சேபத்தையும் மீறி தைவானுக்கு 25 லட்சம் கரோனா தடுப்பூசிகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது. அந்த நாட்டுக்கு மாடா்னா நிறுவனத்தின் 7.5 லட்சம் தடுப்பூசிகளை வழங்கி உதவப் போவதாக அமெரிக்க அதிகாரிகள் இந்த மாதத் தொடக்கத்தில் உறுதியளித்திருந்தனா். ஆனால், அதைவிட மும்மடங்கு அதிக தடுப்பூசிகள் தற்போது அனுப்பப்பட்டுள்ளன. தைவானில் கரோனா பாதிப்பு மோசமாக இல்லை என்றாலும், கடந்த மே மாதத்தில் புதிதாக அந்த நோய் உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை கடந்த மே...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினம்:பிரதமர் மோடி இன்று காலை 6.30மணிக்கு உரை உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில்...
இந்தியாசெய்திகள்

ஜனநாயகம், கருத்து சுதந்திரம் குறித்து அமெரிக்க நிறுவனங்கள் பாடம் எடுக்க வேண்டாம்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து

ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து அமெரிக்க சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் 'சமூக வலைதளமும் சமூகப் பாதுகாப்பும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:...
1 535 536 537 538 539 583
Page 537 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!