செய்திகள்

செய்திகள்தமிழகம்

“அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்”- மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுகப்பாண்டியன் தலைமையில் அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அதிமுகவின் அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகள், அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ரூபம்.கே.வேலவன், அமமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில்,...
செய்திகள்தமிழகம்

கடலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் மழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. அறுவடையாகும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அரசின் ஆதரவு விலையில் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் இடி...
செய்திகள்விளையாட்டு

மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கப் போகும் முக்கிய நட்சத்திர வீரர்! ரசிகர்கள் ஜாலி!

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சை எடுத்து முடித்ததும் பல மாதங்கள் அவர் ஓய்வு எடுத்து வந்து நம் அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாக நிறைய போட்டிகளில் இந்திய அணிக்கு அவரால் பங்கெடுத்து விளையாட முடியாமல் போனது. இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் விளையாடினார். இருப்பினும் அவரால் முன்பு...
செய்திகள்விளையாட்டு

கொரோனா தொற்று அதிகரிப்பால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் வர தடை : டோக்கியோவில் அவசரநிலை அறிவிப்பு!!

டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அவசர கால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்தவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்த...
உலகம்உலகம்செய்திகள்

புதிய வரலாறு படைத்த அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ்!

ஏற்கனவே உலக பணக்காரராக திகழும் அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ், 211 பில்லியன் டொலர் நிகர சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியில் புதிய வரலாறு படைத்துள்ளார். மைக்ரோசாப்ட் உடனான 10 பில்லியன் டொலர் ஜெடி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பென்டகன் அறிவித்ததைத் தொடர்ந்து அமேசான் பங்கு 4.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், 57 வயதான பெசோஸ் செவ்வாயன்று மட்டும் 8.4 பில்லியன் டாலர் நிகர மதிப்பைப் பெற்றார் என்று...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்..! மக்கள் பீதி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்த நிவேதா என்ற இடத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து கலிபோர்னியாவின் ஸ்டாக்டன் நகரில் சில வினாடிகளில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது....
இந்தியாசெய்திகள்

கொரோனா 3-ம் அலை: ஆயத்த பணிகளுக்காக ரூ. 23,123 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு

அனைத்து 736 மாவட்டங்களிலும் குழந்தை பிரிவுகளை உருவாக்குதல், ஒரு மாவட்டத்திற்கு ஒரு யூனிட்டை ஆதரிக்கும் மருத்துவ எரிவாயு குழாய் அமைப்புகளுடன் 1,050 திரவ மருத்துவ ஆக்ஸிஜன் சேமிப்பு தொட்டிகளை நிறுவுதல் மற்றும் ஒரு நாளைக்கு 5 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் தொலைத் தொடர்பு தளத்தை விரிவுபடுத்துதல் போன்றவை கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார தயாரிப்புத் தொகுப்பின் இரண்டாம் கட்டத்தின் மூலம் நிதி அளிக்கப்பட கூடிய முக்கியமான...
இந்தியாசெய்திகள்

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் நட்புறவோடு செல்லவே விரும்புகிறோம்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கருத்து

நீர்ப் பங்கீடு விவகாரத்தில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகாவுடன், நட்புறவான, சுமுகமான உறவோடு செல்லவே விரும்புகிறோம் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் விவசாயிகள் தினமும், முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ''நீர் விவகாரத்தில் எப்போதும் அரசியல் செய்யக்கூடாது. அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள்...
செய்திகள்தமிழகம்

‘வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த பகுதி’ மிக கனமழைக்கு வாய்ப்பு!

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்ப சலனம் காரணமாக காரணமாக இன்று நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48...
செய்திகள்தமிழகம்

திமுகவில் மகேந்திரன் ஐக்கியம்; நடிகை ஸ்ரீபிரியா கிண்டல்..!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய காலம் முதலே அவருடன் இணைந்து பயணித்து வந்தவர் மகேந்திரன். இவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனாலும், ஒரு தேர்தலில் கூட அவர் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த...
1 525 526 527 528 529 583
Page 527 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!