செய்திகள்

இந்தியாசெய்திகள்

ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழா தொடக்கம் : கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழா இந்த ஆண்டு பக்தர்களின் பங்கேற்பில்லாமல் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஜூலை மாதங்களில் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்று எதிரொலியாக ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து காலை முதல் ஒடிசா...
இந்தியாசெய்திகள்

கொரோனா ஊரடங்கில் தளர்வு எதிரொலி!: தமிழ்நாடு – புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கியது…பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு - புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததை அடுத்து தமிழ்நாடு - புதுச்சேரி இடையிலான போக்குவரத்தை இன்று முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி...
செய்திகள்தமிழகம்

மேகதாது அணை விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகா. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் கர்நாடகா அணையை கட்டிவிட்டால் காவிரி நீர் வரத்து மிகவும் குறைந்துவிடும் என்பது தமிழகத்தின் கவலை. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி...
செய்திகள்தமிழகம்

வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகள

வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என, 2017, டிச. 31 அன்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ரஜினிகாந்த், 2020, டிச. 31 அன்று தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக கூறினார். ஆனால், தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு...
செய்திகள்விளையாட்டு

விம்பிள்டன் மகளிர் பைனலில் ஆஷ்லி-கரோலினா இன்று மோதல்

விம்பிள்டன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற உள்ள மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஆஸி.யின் ஆஷ்லி பார்தி, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா மோத உள்ளனர். முதல் அரையிறுதியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் (25வது ரேங்க்) மோதிய நம்பர் 1 வீராங்கனை பார்தி 6-3, 7-6 (7-3) என நேர் செட்களில் வென்றார். 2வது அரையிறுதியில் பிளிஸ்கோவா (13வது ரேங்க்) 5-7, 6-4, 6-4 என்ற...
செய்திகள்விளையாட்டு

வங்கதேசம் உணவுப்பொருள் தொழிற்சாலையில் தீ விபத்து; 52 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்

வங்கதேசத்தில் உள்ள உணவுப் பொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர்உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வங்கதேசத் தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான, நாராயண்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ரூப்கஞ்ச் என்ற இடத்தில் 6 மாடிக் கட்டிடம் ஒன்றில் 'ஹஷேம் ஃபுட்ஸ்' என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நூடுல்ஸ், பழ ஜூஸ்கள் மற்றும் மிட்டாய்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம்மாலை 5 மணியளவில் தொழிற்சாலை கட்டிடத்தின்...
செய்திகள்விளையாட்டு

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தள்ளிவைப்பு.!!

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றது. அதேபோல் இங்கிலாந்து தொடரை முடித்துவிட்டு இலங்கை அணியும் தாயகம் திரும்பி உள்ளது. இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது....
உலகம்உலகம்செய்திகள்

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் நியமனம்: அதிபர் ஜோ பிடன் உத்தரவு

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் நகர மேயர் எரிக் கார்சிட்டியை நியமித்து அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் இருந்த கென்னத் ஜஸ்டர் மாற்றப்பட்டு கார்சிட்டி நியமிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தவாரத் தொடக்கத்தில்தான் ஜஸ்டர் வெளியுறவுத்தொடர்பு கவுன்சிலில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் ' லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மேயராகவும், 12 ஆண்டுகளாக நகர...
இந்தியாசெய்திகள்

எடியூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகார் மனு: பெங்களூரு நீதிமன்றத்தில் தள்ளுபடி

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா உள்ளிட்ட 8 பேர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க கோரிய மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டி.ஜே.ஆப்ரஹாம் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக அப்போதைய ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் கடிதம் அளித்தார். அதில், ''பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் வீட்டு வசதி திட்ட குடியிருப்புகள் கட்டுவதற் காக ஒப்பந்தம் கோரியதில் ஊழல் நடந்துள்ளது....
இந்தியாசெய்திகள்

கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு: தனியார் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து என அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிப்பதை தவிர்த்ததால் மீண்டும் அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதே போல், இந்தியாவிலும் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த மாநிலங்களில்...
1 524 525 526 527 528 583
Page 526 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!