செய்திகள்

செய்திகள்விளையாட்டு

தோனி அணிந்த 7-ம் எண் ஜெர்சியை பாதுகாக்க வேண்டும் -முன்னாள் வீரர் வேண்டுகோள்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி அணிந்த 7-ம் எண் ஜெர்சியையும் யாருக்கும் அளிக்காமல் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் வீரர் சாபா கரீம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு அறிவித்த அதே தினத்தில் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதனிடையே ஓய்வு பெற்ற லெஜண்ட் வீரர்களின் பாரம்பரியம்...
உலகம்உலகம்செய்திகள்

சிங்கப்பூரில் மிதக்கும் சோலார் பேனல்கள் மூலம் மின்சார உற்பத்தி

மிதக்கும் சோலார் பேனல்கள் மூலம் மின்சார உற்பத்தி... சிங்கப்பூரில் உள்ள தெங்கே நீர்த்தேக்கத்தில் (Tengeh Reservoir) மிதக்கும் ஒரு லட்சத்து இருபத்தி ரெண்டாயிரம் சோலார் பேனல்கள் மூலம் மின்சார உற்பத்தி தொடங்க உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மின் உற்பத்தி செய்வதற்காக தெங்கே நீர்த்தேக்கத்தின் மேல் 111 ஏக்கர் பரப்பளவில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கரிக்கு மாற்றாக சோலார் பேனல்கள் மூலம் இங்கு நடைபெறும் மின் உற்பத்தியால் ஆண்டுக்கு 32...
உலகம்உலகம்செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் காலமானார்.!

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் உடல்நலக்குறைவால் காலமானார். பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி 80 வயதான மம்னூன் உசேன் நீண்டகால உடல்நலக்குறைவால் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். 1940ம் ஆண்டில் ஆக்ராவில் பிறந்து 1947ல் தனது பெற்றோருடன் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த மம்னூன் உசேன், செப்டம்பர் 2013 முதல் செப்டம்பர் 2018 வரை பாகிஸ்தானின் 12வது ஜனாதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடப்படுகிறது....
இந்தியாசெய்திகள்

பெங்களூர் – சென்னை அதிவிரைவு ரயில்கள் மீண்டும் இயக்கம்! – ரயில்வே அறிவிப்பு!

பயணிகள் வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெங்களூர் - சென்னை விரைவு ரயில் சேவைகள் தொடங்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்ததாலும், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களாலும் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனால் பயணிகள் குறைவாக பயணிக்கும் பெங்களூர் - சென்னை உள்ளிட்ட ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது பாதிப்புகள் குறைத்து பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் பல...
இந்தியாசெய்திகள்

வாட்ஸ்அப் தகவல்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம்

வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட ஒரு தகவல் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது வாட்ஸ்அப் தகவல்களுக்கு தாங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் அத்தகைய தகவல்களை எழுதியவர்களை அத்துடன் தொடர்புபடுத்த முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டன்ர். இந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில்...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. அரசு புதிய முடிவு…!!!!

தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பாக இருக்குமா? பெற்றோர்கள் மனநிலை...
செய்திகள்தமிழகம்

என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

மூத்த இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தன் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் சங்கரய்யா. இவருடைய 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் கடந்த...
செய்திகள்தமிழகம்

கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாளை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

காமராஜர் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியிருக்கிறார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இன்று வரை உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களில் இவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு...
செய்திகள்விளையாட்டு

332 ரன்கள் இலக்கை அசால்ட்டாக எட்டிய இங்கிலாந்து: ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்தது,. கேப்டன் பாபர் அசாம் அபாரமாக விளையாடி 158 ரன்கள் எடுத்தார். முகமது ரிஸ்வான் 74 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் 332...
செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா காலமானார்: உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கியமானவர்

இந்திய கிரிக்கெட் வீரரும், 1983-இல் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வென்ற அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான யஷ்பால் சர்மா (66), மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார். தில்லியில் வசித்து வந்த யஷ்பால் செவ்வாய்க்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு சென்று, வீட்டுக்கு வந்த பிறகு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு மனைவி, 2 மகள்கள், மகன் உள்ளனர். லோதி ரோடு பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அவரது...
1 522 523 524 525 526 583
Page 524 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!