செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

பிரிட்டனில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகர்.. கடும் வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி..!!

பிரிட்டனில் பெருவெள்ளம் உருவாகி லிவர்பூல் நகரில் இருள் சூழ்ந்ததால், அங்குள்ள மக்களை வெளியேற்றியுள்ளனர். பிரிட்டனில் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சாலையில் பள்ளம் உருவாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அதை சரி செய்யும் பணியை இரவு நேரத்தில் பணியாளர்கள் மேற்கொண்டனர். எனவே மக்களை அவரவர் வீடுகளிலிருந்து வெளியேற்றினர். மேலும் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. வெள்ளத்தினால் பல வீடுகள் சேதமடைந்திருக்கிறது. இதற்கிடையில் நள்ளிரவு நேரத்தில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால்...
இந்தியாசெய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கோவிட் பாதிப்பு: கட்டுப்பாடுகள் அறிவிப்பு

இந்தியாவில் கோவிட் பாதிப்பு நேற்று முன்தினம் 35 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் நேற்று 39 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேரளாவில் தொற்று பாதிப்பு கடந்த 50 நாட்களில் இல்லாத அளவு உயர்ந்ததே தினசரி பாதிப்பு திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் 12,818 பேர்...
இந்தியாசெய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகை; பொதுமக்கள் சுற்றிப் பார்க்க ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் அனுமதி

குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகம் பொதுமக்கள் பார்வைக்காக 2021 ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. கோவிட்-19 காரணமாக 2021 ஏப்ரல் 14 முதல் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பார்வைக்காக 2021 ஆகஸ்ட் 1 முதல் அவை மீண்டும் திறக்கப்படுகின்றன. காலை 10.30...
செய்திகள்தமிழகம்

டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் 132 ஏக்கர் பரப்பளவில் உள்ள சி.வ.குளம் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு...
செய்திகள்தமிழகம்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி இலவசம் – மா.சுப்ரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நியூமோகோக்கல் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்துவதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்,...
உலகம்உலகம்செய்திகள்

சீனப் ‘பனிப்பாறைகளில்’ நடந்த ஆராய்ச்சி…! 15 ஆயிரம் வருஷமா ‘அது’ அழியாம இருந்துருக்கு…! – ஆய்வில் வெளிவந்த ‘அதிர’ வைக்கும் தகவல்…!

இப்போதெல்லாம் தினம் ஒரு வைரஸ் என்ற கணக்கில் புதிது புதிதாக வைரஸ்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்களை திபெத்திய பனிப்பாறைகளில் இருந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனப் பகுதியில் உள்ள கடல்மட்டத்தில் இருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள திபெத்திய பனிப்பாறைகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். மேற்குப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 2 பனிப்பாறைகளில்...
உலகம்உலகம்செய்திகள்

உலக முழுவதும் 75% பரவிய டெல்டா வகை கொரோனா.. உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி !!

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் மருத்துவ வல்லுநர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் அதற்குள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. அந்த வகையில் வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா வகை கொரோனா நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. அதன்படி உலக சுகாதார அமைப்பு டெல்டா வகை கொரோனா பரவல் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, உலகம்...
செய்திகள்விளையாட்டு

இன்று தொடங்குகிறது டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா: ரசிகர்களுக்கு அனுமதியில்லை

உலகில் உள்ள அனைத்து விளையாட்டு ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகின்றன. டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது. கொரோனா அச்சம் காரணமாக, ஒலிம்பிக் தொடர் முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேநிலைதான் தொடக்க விழாவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. குறைந்த அளவில்...
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் மேரிகோம், மன்பிரீத் சிங்

ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்-வீராங்கனைகள், நிர்வாகிகள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் தேசியக்கொடி ஏந்திச் செல்லவுள்ளனர். இவர்களுடன் குத்துச்சண்டை வீரர்களான சதிஷ் குமார், ஆஷிஷ் குமார், மணிஷ் கவுஷிக், அமித் பங்கல், வீராங்கனைகள் பூஜா ராணி,...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக்: வில்வித்தை தரவரிசையில் 9-ஆவது இடத்தை பிடித்தார் தீபிகா குமாரி

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபருக்கான தரவரிசையில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9 ஆவது இடத்தை பிடித்தார். ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளான இன்று நடைபெறும் தகுதிநிலை தரவரிசை சுற்றில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். வில்வித்தைப் போட்டிக்கான தகுதிநிலை சுற்று அதிகாலை ஐந்தரை மணிக்கு தொடங்கியது. இதில் தனிநபருக்கான மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி பங்கேற்றார். இதில் முதல் மூன்று இடத்தை கொரிய...
1 517 518 519 520 521 584
Page 519 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!