செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

சுவிஸ் வங்கியில் போப்புக்கு தனி வங்கி கணக்கு – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

வத்திக்கானில் ஒரு கார்தினல் உட்பட முக்கிய நிர்வாகிகள் சிலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, விசாரணையை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் போப் பிரான்சிஸ் பெயரில் தனிப்பட்ட வங்கி கணக்கு இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஊழல் மற்றும் நிதி முறைகேடு தொடர்பில் கார்தினல் ஒருவர் சிக்குவதும், சில நிர்வாகிகள் ஒத்துழைப்பில் இது நடந்து வந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்து விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போப் பிரான்சிஸ் தொடர்பில் முக்கிய தகவல்களை சுவிஸ் பத்திரிகையாளர் ஒருவர்...
செய்திகள்விளையாட்டு

மகளிர் பேட்மின்டன்: அரையிறுதியில் சிந்து

ஒலிம்பிக் போட்டியின் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பி.வி.சிந்து, முன்னணி வீராங்கனை அகானே யாமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். பரபரப்பான காலிறுதியில் உள்ளூர் வீராங்கனை யாமகுச்சியுடன் (4வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து, முதல் செட்டில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினார். அந்த செட்டை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்திய அவர் முன்னிலை பெற்றார். இந்த செட் 23 நிமிடங்களில் முடிவுக்கு...
செய்திகள்விளையாட்டு

மகளிர் ஹாக்கியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததுடன், காலிறுதி வாய்ப்பையும் தக்கவைத்தது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, முதல் 3 லீக் ஆட்டங்களில் உலக சாம்பியன் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து அணிகளிடம் தோற்று கடும் பின்னடைவை சந்தித்து. அதனால் காலிறுதி வாய்ப்பும் கேள்விக்குறியானது. இந்நிலையில் தனது 4வது லீக் ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து அணியுடன் மோதியது. வென்றால் மட்டுமே காலிறுதி வாய்ப்பை...
இந்தியாசெய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சர்வதேசபயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமானப்போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச்23ம் தேதியிலிருந்து திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை நாடு கொண்டுவரவும், உள்நாட்டில் சிக்கிய வெளிநாட்டினரை சொந்த நாட்டுக்கு அனுப்பவும்...
இந்தியாசெய்திகள்

ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் 14 வரை இரவு ஊரடங்கு

கரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் தற்போது இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இது இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், நேற்று அமராவதியில் முதல்வர் ஜெகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கள், போலீஸ் துறையினருக்கு தகவல்...
இந்தியாசெய்திகள்

கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: விதிகளை பின்பற்ற ராகுல் வேண்டுகோள்

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், 'கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கரோனா தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அம்மாநிலத்தின் சகோதர சகோதரிகள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து உங்கள்...
செய்திகள்தமிழகம்

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்யும் பணியை சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று தொடங்கி வைத்தார். கோட்டை, கொத்தளங்களுடன் உள்ள பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்வதற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்ததைஅடுத்து, அங்கு தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட மேலாய்வின்போது கருப்பு, ஊதா வண்ணவளையல்களின் உடைந்த பகுதிகள், உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட இரும்புத் துண்டுகள், நிறமற்றகண்ணாடி படிகம்,...
செய்திகள்தமிழகம்

“தனியார் பள்ளிகள் இவ்வளவு கட்டணம் தான் வசூலிக்க வேண்டும்” : நீதிமன்றம் அதிரடி!!

நடப்புகல்வியாண்டில்தனியார் பள்ளிகள்  85 சதவீதகல்விகட்டணத்தைவசூலித்துக்கொள்ளசென்னைஉயர்நீதிமன்றம்அனுமதிவழங்கியுள்ளது. மாணவர்களிடம் முழுமையான கல்வி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்ததை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடப்பு கல்வியாண்டில் தனியார்கள் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ள நீதிபதி அனுமதி வழங்கினார் . 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 6...
செய்திகள்தொழில்நுட்பம்

Nokia T20 tablet: கம்மி விலைக்கு NOKIA Tablet விரைவில் அறிமுகம்

நோக்கியா தனது போர்ட்ஃபோலியோவின் கீழ் டேப்லெட்களையும் சேர்க்க உள்ளது. நோக்கியா நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆனது விரைவில் சந்தையில் வரவிருக்கிறது. நோக்கியா (Nokia) மொப்பில் வெளியான அறிக்கையின்படி, நோக்கியா டி20 (Nokia T20) என்று பெயரிடப்படும் மற்றும் அடுத்த நிகழ்வில் நோக்கியா டேப்லெட் உடன் சேர்ந்து பல வகையான நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்படும். ரஷ்யாவில் வெளிப்படையாகப் பெறப்பட்ட ஒரு சாதன சான்றிதழின் வழியாக நோக்கியா டி 20 டேப்லெட்...
உலகம்உலகம்செய்திகள்

தாலிபான்கள் ராணுவ அமைப்பு அல்ல என்கிறார் பிரதமர் இம்ரான்கான்

பிரதமர் இம்ரான்கான் கருத்து...தாலிபான்கள் ராணுவ அமைப்பு அல்ல. சாதாரண பொதுமக்கள் தான் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதை அடுத்து, அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தாலிபான்களின் இனமான பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 30 லட்சம் ஆப்கான் அகதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக...
1 512 513 514 515 516 584
Page 514 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!