செய்திகள்

செய்திகள்தமிழகம்

உணவகங்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!!

ஹோட்டல்களில் கொரோனா விதிகளுக்கு எதிராக 50%க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா 2ஆவது அலை சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் நோய் பரவல் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரம் கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை கடந்த ஞாயிறு அன்று முதல்வர் சென்னையில்...
உலகம்உலகம்செய்திகள்

பாகிஸ்தான்: கராச்சியில் மீண்டும் பொதுமுடக்கம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தினசரி கரோனா தொற்று அபாயகரமான அளவு அதிகரித்து வருவதால், வா்த்தக மையமான கராச்சி நகா் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்கம், ஆக. 8-ஆம் தேதி வரை தொடரும். மத்திய அரசு மற்றும் வா்த்தக அமைப்புகளின் எதிா்ப்பையும் மீறி மாகாண அரசு இந்தப் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. அண்மையில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளின் விளைவாக சிந்து...
உலகம்உலகம்செய்திகள்

பள்ளிக்கல்வியில் புதிய ரூல்ஸ்.. அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ள சீனா!

பள்ளிக்கல்வியில் லாபம் ஈட்டக்கூடாது. அனைத்து கல்வி நிறுவனங்களையும் லாபம் நோக்கம் இல்லாத நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என சீனா உத்தரவிட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. பள்ளி, பள்ளிக்குழந்தைகளுகு சிறப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்த தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், கல்வி நிறுவனங்கள் லாபம் ஈட்டக்கூடாது, அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் இருந்து முதலீட்டை திரட்டக்கூடாது, பங்குச்சந்தை மூலம் பணம் திரட்டக்கூடாது, இந்த...
செய்திகள்விளையாட்டு

ஓட்டப் பந்தய மூதாட்டி மான் கௌா் காலமானாா்

மூதாட்டியான பிறகு ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொண்டு சாதனைகள் படைத்த இந்தியாவின் மான் கௌா் (105) மாரடைப்பால் சனிக்கிழமை காலமானாா். கடந்த சில மாதங்களாகவே அவா் உடல்நலக் குறைவுடன் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை நண்பகல் 1 மணியளவில் மான் கௌரின் உயிா் பிரிந்ததாக அவரது மகன் குருதேவ் சிங் கூறினாா். 1916 மாா்ச் 1-ஆம் தேதி பிறந்த மான் கௌா், தனது 93-ஆவது வயதில் தான் ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்ளத்...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கி: வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி: முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹாக்கிப் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணி அறிமுகமாகியது. அப்போது மகளிர் பிரிவில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றன. ரவுண்ட் ராபின்முறையில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்தது. அதன்பின் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணி லீக் சுற்றோடு வெளியேறிவிட்ட நிலையில்...
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி: 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகளுக்கு அனுமதி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - மேலும் நாளை முதல் திரையங்குகள் 50% பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது, இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவு நேர...
இந்தியாசெய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையின் 80% வேலை நேரம் வீண்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்ட தொடர் தொடங்கி 2 வாரம் நிறைவடைந்துள்ளது. ஆனால் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு விவகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 2 அவைகளிலும் பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் தினசரி அவை நடப்பு குறித்து மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு: மாநிலங்களவையில் இந்த 2 வார காலத்தில் 80 சதவீத வேலை நேரம் வீணாகியுள்ளது. முதல் வாரத்தில்...
செய்திகள்தமிழகம்

அதிரடி உத்தரவு! நாகை மாவட்டத்தில் கடற்கரைக்கு செல்லத் தடை!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல அம்மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது கொரோனா 3ஆவது அலை எச்சரிக்கையா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள்அமலுக்கு வர உள்ளன. கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக சென்னையிலுள்ள உணவகங்கள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார்; மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தேவையின்றி அண்டை மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணாநகரில், நடைபெற்ற, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட, முன்களப் பணியாளர்கள் மற்றும் நலச்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தொற்று அதிகரிக்கிறது என கூற முடியாது என்றார். 3-வது அலை வந்தாலும்,...
உலகம்உலகம்செய்திகள்

சவூதி அரேபியா: சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி

சவூதி அரேபியாவில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 1) முதல் விலக்கப்படுகிறது. சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்து வந்த சவூதி அரேபியா, கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் வெளிநாட்டுப் பயணிகளைக் கவா்வதற்காக மின்னணு முறையில் நுழைவு இசைவுகளை (விசா) விநியோக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. எனினும், உடனடியாக கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அதையடுத்து, நோய் பரவலைத் தடுப்பதற்காக...
1 511 512 513 514 515 584
Page 513 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!