செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது; செல்போன் இணைப்பு துண்டிப்பு: பாகிஸ்தான் அதிரடி

தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும், அலுவலகம் வர அனுமதி மறுக்கப்படும், சம்பளம் வழங்கப்படாது, உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் நுழையத் தடை விதிக்கப்படும் என அடுக்கடுக்காக பாகிஸ்தான் வெளியிட்ட கெடுபிடிகளால் அந்நாட்டு மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதனால், தடுப்பூசி மையங்களில் மக்கள் ஆர்வத்துடன் மக்கள் குவிந்து வருகின்றனர். சில தடுப்பூசி மையங்களில் கிலோமீட்டர் கணக்கில் மக்கள் அணிவகுத்துக் காத்து நின்றனர். உலகம்...
உலகம்உலகம்செய்திகள்

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை: இஸ்ரேல் எச்சரிக்கை

தங்கள் நாட்டு எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஒய்நெட் செய்தி வலைதளத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பெஞ்சமின் கான்ட்ஸ் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: எம்வி மொசிா் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் தயாராக உள்ளது. ஈரானுக்கு எதிரான ராணுவ...
செய்திகள்விளையாட்டு

புதிய ஒப்பந்ததிற்கு ‘நோ’, இனி பார்சிலானோ அணியில் மெஸ்ஸி இல்லை!

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, இனி பார்சிலோனா அணிக்காக விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பார்சிலோனா அணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2004 ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மெஸ்ஸி, அந்த அணியுடனான தனது 18 வருட உறவை கடந்த ஜூன் மாதம் முடித்து கொண்டார்....
செய்திகள்விளையாட்டு

நாட்டின் கனவு. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் பதக்கம்.!!!

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு பரிசு பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் பர்கினா பாசோ என்ற நாட்டை சேர்ந்த ஜாங்கோ வெண்கலம் வென்றுள்ளார். இதுவரை பத்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள பர்கினா பாசோவின் வரலாற்றில் முதல் பதக்கமாக இது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தடைக்காலத்தில் பதக்கம் வெல்லும் 100வது நாடு...
இந்தியாசெய்திகள்

தென்னிந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்தது..!!

கேரள மாநிலம் மன்னூத்தி - வடக்கன்சேரி பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை அடுத்து குதிரன் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்தது. இந்த நிலையில் பாலக்காடு - திருச்சூர் 6 வழிச்சாலை சுரங்கப் பணிகள் முடிந்ததை அடுத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. அதேநேரம் திருச்சூர் - பாலக்காடு சுரங்கப்பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
இந்தியாசெய்திகள்

வெளிநாடுகளில் இந்திய மாணவர்களின் தனிமைப்படுத்தல் வசதிக்காக ஆதர் பூனவல்லா ரூ.10 கோடி நிதி

வெளிநாடுகளில் படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்களின் கரோனா தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனவல்லா ரூ.10 கோடிநிதி உதவி வழங்கி உள்ளார். கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டவர்களை மட்டுமேசுதந்திரமாகப் பயணிக்க உலக நாடுகள் அனுமதிக்கின்றன. இதுவரை பைசர், மாடெர்னா மற்றும் அஸ்ட்ராஜெனிகா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகியவற்றின் தடுப்பூசிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள்...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு?- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி நீட்டிக்கப்பட்ட ஊரடங்குஆக.9-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அடுத்தக் கட்டஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில், கடந்த மே மாதம் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியதால், பல கட்டங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டன. இதற்கிடையே, திடீரென தொற்றுஎண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதாலும், அண்டை மாநிலங்களில் 3-வது...
செய்திகள்தமிழகம்

4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 6-ம் தேதி மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய நீலகிரி, கோவை,திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். 7, 8 ஆகிய தேதிகளில்...
உலகம்உலகம்செய்திகள்

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா பரவியதற்கு ஆதாரம் உள்ளது – அமெரிக்கா பரபரப்பு புகார்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் 2-வது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.95 கோடியை தாண்டியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க குடியரசு கட்சியின் நாடாளுமன்ற வெளியுறவு குழு பிரதிநிதி மைக் மெக்கால் கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்...
உலகம்உலகம்செய்திகள்

ஓமன் வளைகுடாவில் மீண்டும் பதற்றம்: யுஏஇ கப்பல் கடத்தி விடுவிப்பு

ஓமன் வளைகுடாவில் ஐக்கிய அரபு அமீரகக் கப்பல் கடத்தி புதன்கிழமை விடுவிக்கப்பட்டது. அங்கு ஈரானுக்கும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகக் கடல் பகுதியில், பனாமா கொடியேற்றப்பட்ட "ஆஸ்ஃபால்ட் பிரின்சஸ்' என்ற கப்பல் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை இரவு கடத்தப்பட்டதாக பிரிட்டன் கடற்படை தெரிவித்தது. அந்தக் கப்பல் ஈரானை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும்...
1 507 508 509 510 511 584
Page 509 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!