செய்திகள்

செய்திகள்தமிழகம்

தலைவர்களின் சிலைகளுக்கு போடப்பட்டுள்ள கூண்டை அகற்ற வீரமணி வேண்டுகோள்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டுகள் அமைத்து, அவர்களை சிறைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் அவர்களுக்கோ, சட்டம்-ஒழுங்கைக் காக்கும் அரசுக்கோ பெருமையாகாது. அதிலும், அண்மைக்காலம் வரைதிறந்த சிலைகளாக இருந்த பெரியார்சிலைகளுக்கும்கூட, கடந்த ஆட்சியில் சில விஷமிகளின் செயல்களைத் தடுக்க சரியான வழி என்று கருதி, கூண்டு போட்டனர். எப்போதோ, எங்கோ நடந்த அசம்பாவிதங்களுக்கு, இது சரியான மாற்று வழி அல்ல. மாறாக,...
செய்திகள்தமிழகம்

2,200 மாநகர பேருந்துகளில் நவம்பர் மாத இறுதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2,200 மாநகர பேருந்துகளில் வரும் நவம்பருக்குள் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகர பேருந்துகளில் நடக்கும் திருட்டுகளைத் தடுக்கவும்,பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள்...
உலகம்உலகம்செய்திகள்

‘தலையில் பேண்டேஜ்’ கிம் ஜாங் உன்னுக்கு என்னாச்சு? பீதியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான்..

வட அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்த தகவல்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஜூலை 24 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்ற கொரிய மக்கள் ராணுவ நிகழ்ச்சியிலும், ஜூலை 27 முதல் 29 ஆம் தேதி வரையிலான போர் வீரர்களுக்கான நினைவு நாள் கூட்டங்களிலும் பங்கேற்ற கிம் ஜாங் உன்னின் தலையின் பின்புறத்தில் பேண்டேஜ் இருந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதால், அவருக்கு...
உலகம்உலகம்செய்திகள்

வெளியான பணக்கார பட்டியல். பெசோஸ் பின்னடைவு.!!!

அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெப்பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு பின் தங்கியுள்ளார். பிரபல ஆடை நிறுவனமான லூயி விட்டான் நிறுவனத்தின் தலைவர் அர்னால்ட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். $198.2 பில்லியன் மதிப்புள்ள அர்னால்ட் முதலிடத்திலும், $194.9 பில்லியன் மதிப்புள்ள ஜெப்பெசோஸ் இரண்டாம் இடத்திலும், $185.5 பில்லியன் மதிப்புள்ள இலான் மஸ்க் மூன்றாம் இடத்திலும் உள்ளார்....
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்ற சிந்துவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

ஜப்பானின் டோக்கியா நகரில் நடைபெறும் 32-வது ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம்வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். பதக்கத்துடன் சொந்த ஊரான ஹைதராபாத் திரும்பிய சிந்துவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பி.வி.சிந்து நேற்று தனது குடும்பத்தினருடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து வெண்கலப் பதக்கத்தை...
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா- இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி: மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா அரை இறுதியில் வீழ்ந்தார்

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் திருவிழாவில் நேற்று மகளிருக்கான ஹாக்கியில் வெண் கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் குர்ஜித் கவுர் 25, 26-வது நிமிடங்களிலும் வந்தனா கட்டாரியா 29-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் எலினா ரேயர் (16-வது நிமிடம்), சாரா...
இந்தியாசெய்திகள்

லடாக்கின் எல்லையில் இந்திய, சீன படை வாபஸ்

கடந்த ஆண்டு ஜூன் 15-ம்தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவிய சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டினர். அப்போதுமிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 60 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன அரசு தெரிவித்தது. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து இந்திய,...
இந்தியாசெய்திகள்

வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை; நடப்பு ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5% – ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கணிப்பு

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.5 சதவீதம் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. வங்கியின் வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரெபோ விகிதம் 3.35 சதவீதமாகவும் எவ்வித மாற்றமும் இன்றி தொடரும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தி லிருந்து இதுவரை வட்டி விகிதத்தில் 115 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கரோனா வைரஸ்...
செய்திகள்தமிழகம்

கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை தீவிரம்

கேரளாவில் இருந்து ரயில்கள் மூலம் வரும் பயணிகளுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், தமிழக எல்லையோரப் பகுதிகளில் கரோனாபரிசோதனை மற்றும் கண்காணிப்புபணிகள் மாநில சுகாதாரத் துறைமூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், கேரளாவில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா உட்பட 7 விரைவு ரயில்களில் வரும் பயணிகளுக்கு...
செய்திகள்தமிழகம்

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதி அறிவிப்பு!!

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான தேதியை தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப் பட்டனர். அதே போல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10, 11ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு...
1 506 507 508 509 510 584
Page 508 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!