செய்திகள்

செய்திகள்தமிழகம்

இன்று முதல் 23 ஆம் தேதி வரை.. சனி, ஞாயிறு கிழமைகளில்.. கோவிலுக்கு செல்ல தடை.!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் 23-ம் தேதி வரை வெள்ளி, சனி,...
செய்திகள்தமிழகம்

20 ஆண்டுகளில் எதுக்கு எவ்வளவு கடன்.. வெள்ளை அறிக்கை இன்று வெளியீடும் அமைச்சர் !!

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக நிதிநிலை குறித்து இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்து. ஆளுநர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று...
செய்திகள்தொழில்நுட்பம்

அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

தண்ணீரை தங்கமாக மாற்ற முடியும் என்று சொன்னால், யாரும் இதுவரை நம்பியிருக்கமாட்டார்கள். ஆனால் இனிமேல் தாராளமாக நம்பலாம். நீரில் இருந்து பொன் தயாரிப்பது உண்மையில் சாத்தியமாகிவிட்டது. இது கற்பனையல்ல, உண்மை, அதிலும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, ஆராய்ந்து, பலவித சோதனைகளுக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட உண்மை. ப்ராக் நகரில் உள்ள செக் அகாடமி ஆஃப் சயின்சஸில் (Czech Academy of Sciences) இயற்பியல் வேதியியலாளர்கள் (Physical chemists) இந்த சாதனையை செய்துள்ளனர். அவர்...
செய்திகள்தொழில்நுட்பம்

நல்ல ஆபர் விலையில் ஹெட்போன் வாங்க அமேசானுக்கு வாங்க.

Amazon அதன் Great freedom Festival Sale அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 முதல் தொடங்கியது. இந்த விற்பனை ஆகஸ்ட் 9 இரவு 11:59 வரை நடைபெறும். விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் , கேமராக்கள், ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட எலக்ட்ரோனிக் பொருட்கள் வாங்குவதில் சிறந்த சலுகைகள் இருக்கும். வாடிக்கையாளர்கள் SBI கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐக்களுக்கு 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இன்று ஹெட்போன்களில் அசத்தலான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது....
உலகம்உலகம்செய்திகள்

தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறி விடுங்கள்: குடிமக்களுக்கு அமெரிக்க அரசு வலியுறுத்தல்

தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால்,ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களது குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மைய கட்டிடத்தை (இரட்டை கோபுரம்) அல்-கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதிவிமானங்களை மோதி தகர்த்தனர். அதன் பிறகு அல்-கொய்தாதீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. அங்கு தனது படைகளை நிறுத்தி தீவிரவாதிகளையும், தலிபான்களையும்...
உலகம்உலகம்செய்திகள்

வுகானில் 1.12 கோடி பேருக்கு கொரோனா சோதனை: தொற்று பரவத் தொடங்கிய நிலையில் சீனா அதிரடி

சீனாவின் வுகானில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வுகான் மக்கள் தொகை ஒரு கோடியே 20 லட்சமாக உள்ள நிலையில் அதில் ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 15 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் தொற்று...
செய்திகள்விளையாட்டு

“கடின பயிற்சி, பலரின் ஆதரவு; ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இதுதான் காரணம்” – நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விரைவில் 90 மீட்டர் தூர இலக்கை அடைவேன் என்று தெரிவித்துள்ளார். ஈட்டி எறிதலில் 90 மீட்டர் என்ற இலக்கை விரைவில் அடைவேன் என்று தெரிவித்துள்ள ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா, 90.57 மீட்டர் தூர சாதனையை முறியடிக்க சிறப்பாக செயல்பட்டும் முடியவில்லை என்று கூறியுள்ளார். 'சர்வதேச போட்டிகளில் நான் பங்கேற்றது...
செய்திகள்விளையாட்டு

பஜ்ரங் புனியா: இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்று தந்த விவசாயி மகன்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் எதிர்பார்த்ததை போலவே இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த பஜ்ரங்கின் மல்யுத்த வாழ்க்கையின் பயணங்கள் மலைக்கத்தக்கது. 65 கிலோ எடைப் பிரிவில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரர் தவ்லத் நியாஸ்பெக்கோவை எதிர்கொண்டார் பஜ்ரங் புனியா. முதல் 3 நிமிடங்களில் இரு வீரர்களும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இதையடுத்து, தனது அபார திறமையை வெளிப்படுத்திய பஜ்ரங் புனியா புள்ளிகள் மேல் புள்ளிகள் குவித்தார். இறுதியில் 8-0 என்ற புள்ளி...
இந்தியாசெய்திகள்

மழைக்கால கூட்டத் தொடரின் 3-வது வாரத்தில் மாநிலங்களவையில் 8 மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடந்த வாரம் மட்டும்8 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. மழைக்கால கூட்டத்தொடரின் 2-வது வாரத்தை விட 3-வது வாரத்தில் அலுவல் பணிகள் அதிகரித்துள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வருகின்றன. இதனால் இரு அவைகளும் சரியாக நடக்கவில்லை. இதனால் கடந்த 3...
இந்தியாசெய்திகள்

கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் இலவச தரிசனம்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி தேவஸ்தான அலுவ லகத்தில் நேற்று 'டயல் யுவர் இ ஓ' எனப்படும் தொலை பேசி மூலம் பக்தர்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி பக்தர்களின் குறைகளைக் கேட்ட பின்னர் கூறியதாவது: சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணனின் பரிந்துரையின் பேரில் தினமும் குறைந்தபட்சம் 1,000 பக்தர்களையாவது இலவசதரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்....
1 505 506 507 508 509 584
Page 507 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!