செய்திகள்

செய்திகள்தமிழகம்

அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

கொரோனா காரணமாக பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிட்டு வெளியிடுவது சற்று தாமதமானது. அதன் தொடர்ச்சியாக 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. அதன்படி, கடந்த மாதம் 26- ஆம் தேதி முதல், விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் 8 நாட்களில் 2 லட்சத்துக்கும் மாணவர்கள் சேர்கைக்காக விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவும்...
செய்திகள்தமிழகம்

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52; கெமிக்கல் இன்ஜினியரிங்; எம்.பி.ஏ., படித்தவர். தனியார் வங்கியில் துணை தலைவராக உள்ளார். வங்கிப் பணிகளுக்கு இடையே, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து, தொடர்ந்து பேசி வருகிறார்.இந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் இரவு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், மூளைக்கு...
செய்திகள்தமிழகம்

நகரை அழகுபடுத்தும் பணி தீவிரம்; ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்க மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகளும், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாநகரில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பையை அகற்ற மாதந்தோறும்...
செய்திகள்தமிழகம்

அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க டிஜிபி உத்தரவு

தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் காவல் தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் காவல்துறை தலைமை அலுவலகங்களில் ஆவணப் பணிகளுக்காக அமைச்சுப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் எஸ்பி, டிஐஜி, ஐஜி அலுவலகங்களில் ஏராளமான அமைச்சுப்...
உலகம்உலகம்செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர்.. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. தகவல் வெளியிட்ட சிறை அதிகாரி.!!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா சிறையில் இருக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கடந்த ஒன்பது வருடங்களாக அந்நாட்டில் ஆட்சி செய்துள்ளார். இவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையின் போது ஜேக்கப் ஜுமா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் கோர்ட் அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேக்கப் ஜுமாவிற்கு 15 மாத கால சிறை...
உலகம்உலகம்செய்திகள்

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்ஷிப்: 70 மெகா நியூட்டன் உந்து விசையை உருவாக்கும் பிரம்மாண்ட ராக்கெட் தயாரானது

உலகின் முன்னணி வணிகர்களில் ஒருவரான ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் மிகப் பெரிய ராக்கெட்டை கட்டமைத்து இருக்கிறது. இந்த ராக்கெட்டில் மொத்தம் இரு பாகங்கள் இருக்கின்றன. ஒன்று ராக்கெட்டின் மேல் புறமான ஸ்டார்ஷிப். இரண்டாவது அடிப்பாகமான பூஸ்டர். இந்த பூஸ்டரை சூப்பர் ஹெவி என்று அழைக்கிறார்கள். இந்த இரண்டையும் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகாவில் உள்ள அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவான ஸ்டார்பேஸில் கடந்த...
செய்திகள்விளையாட்டு

டிஎன்பிஎல்- நெல்லை ராயல் கிங்சை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்யை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சேலம் அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் தந்தனர், அந்த அணியின் ஸ்ரீதர் ராஜ் 30 ரன்களும், சுரேஷ்குமார் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த கோவை...
செய்திகள்விளையாட்டு

42 கி.மீ தூர மராத்தான்- தங்கம் வென்ற கென்ய வீரர் சாதனை

ஒலிம்பிக் போட்டியின் உச்சபட்சமாக தடகளம் கருதப்படுகிறது. நடப்புத் தொடரில், அதிகபட்சமாக 48 பிரிவுகளில் தடகள போட்டிகள் நடத்தப்பட்டதே இதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இதில், 100 மீட்டர், 200 மீட்டர் உள்ளிட்ட ஓட்டப் போட்டிகளில் ஏற்கெனவே முடிந்த நிலையில், கடைசி நாளில், இறுதி தடகள போட்டியாக மாரத்தான் நடைபெற்றது. 42 கிலோ மீட்டர் தூர இலக்கை கொண்ட இப்போட்டியில், மொத்தம் 106 பேர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும், வீரர்கள் இலக்கை...
இந்தியாசெய்திகள்

இன்று முதல் வாரச்சந்தைகள் திறக்க அனுமதி -கெஜ்ரிவால் அறிவிப்பு..!

டெல்லியில் இன்று முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை முன்னிட்டு, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மக்களின் வசதிக்காகவும், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் சந்தைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும்...
இந்தியாசெய்திகள்

மாணவர்கள் மனதளவில் பாதிப்பு…பள்ளிகளை திறக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனிக்காமல் விட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எனவே பள்ளிகளை விரைவில் திறப்பதே நல்லது என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் அது மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதால் மாணவர்களின் இயல்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. செல்போன், லேப்டாப்பும்...
1 504 505 506 507 508 584
Page 506 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!