செய்திகள்

இந்தியாசெய்திகள்

ஓபிசி மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. அரசியல் சாசனத்தின் 127வது பிரிவு திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் 386 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மழைக்காலக் கூட்டத் தொடரில் முதல் முறையாக, செவ்வாயன்று, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர்முழக்கம் நிறுத்தப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மசோதா, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்க மற்றும் மாற்றம் செய்ய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று அதற்கான விருதும் பரிசுத் தொகையும் தமிழக முதல்வரால் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தஞ்சாவூர் மாநகராட்சி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி...
செய்திகள்தமிழகம்

ஆகஸ்ட் 20ம் தேதி மொஹரம் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!!

தமிழகத்தில் முஸ்லிம்களின் பண்டிகையான மொஹரம் வரும் ஆகஸ்ட் (20.08.2021) அன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்து உள்ளது. மொஹரம் முஸ்லிம்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முஸ்லிம்களின் மாதமான மொஹரம் மாதத்தின் 10 நாள் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பு வைத்து வழிபடுவர். இந்த பண்டிகை தியாகத் திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. முகமதுவின் பேரனான இமாம் ஹுசைன் இஸ்லாமிய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக...
செய்திகள்தமிழகம்

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – மு.க.ஸ்டாலின்

மாமன்னன்‌ ராஜேந்திர சோழனின்‌ பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாகக்‌ கொண்டாட முதலமைச்சர் மு.க.ஸ்டாஜின்‌ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரியலூர்‌ மாவட்டம்‌, கங்கைகொண்ட சோழபுரத்தில்‌ மாமன்னன்‌ ராஜேந்திர சோழனால்‌ ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்‌ ஆலயம்‌ உலகப்‌ புகழ்‌ வாய்ந்த ஒன்றாகும்‌. முதலாம்‌ இராஜேந்திர சோழனின்‌ காலம்‌ முதல்‌ சோழர்களின்‌ கலை மற்றும்‌ கட்டடக்கலைகளின்‌ அழகிய தொகுப்பாகவும்‌,...
உலகம்உலகம்செய்திகள்

பருவநிலை மாற்ற அறிக்கை: கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் தீவு நாடுகள் அச்சம்

உலகின் தாழ்வான நாடான மாலத்தீவு பருவநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டால் தங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று "அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள்" கவலை தெரிவித்துள்ளன. புவி வெப்பமடைதல் உலகின் சில பகுதிகளை வாழமுடியாததாக மாற்றிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை கூறியதை அடுத்து இந்த நாடுகள் கவலைப்படுகின்றன. இது உலக விழிப்புணர்வுக்கான அழைப்பு" பிரிட்டன் பிரதமர் போரிஸ்...
உலகம்உலகம்செய்திகள்

பெகாசஸ் விவகாரம்.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. குரூப் டெக்னாலஜியுடன் எந்த பரிவர்த்தனையும் இல்லை.. பாதுகாப்பு துறை அமைச்கம்

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. குரூப் டெக்னாலஜியுடன் எந்த பரிவர்த்தனையும் இல்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் சிங் படேல் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பணியில் இருக்கும் நீதிபதி, வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸை பயன்படுத்தி அடையாளம்...
செய்திகள்விளையாட்டு

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2021.. இன்று பிளே ஆப் சுற்று ஆரம்பம் .!!!!!

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால் அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். நேற்று முன்தினம் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. அதில் ரூபி திருச்சி...
செய்திகள்விளையாட்டு

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு. ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு…!!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பின்பு வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய ஹாக்கி அணியின் தூணாக கருதப்படும் கோல் கீப்பரான பி.ஆர். ஸ்ரீஜேஷ் அற்புதமாக தன் பணியை செய்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றார். ஸ்ரீஜேஷ் திறமையாக கோல் கீப்பிங் பணியை செய்யவில்லை என்றால் வெண்கல் பதக்க வாய்ப்பை இந்தியா இழந்திருக்கும். ஸ்ரீஜேஷை ஊக்குவிக்கும்விதமாக அவருக்கு ரூ.1 கோடி பரிசுத்...
இந்தியாசெய்திகள்

லடாக்கில் மத்திய பல்கலை. அமைக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா 2021 மக்களவையில் கடந்த வாரம் நிறைவேறியது. மாநிலங்களவையில் நேற்று இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''லடாக்கில் இப்போது மத்திய பல்கலைக்கழகம் இல்லை. லடாக், லே பகுதிகளில் மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி அளிக்கப்பட வேண்டும்...
இந்தியாசெய்திகள்

ஓபிசி பிரிவினரை கண்டறிய மீண்டும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினரை (ஓபிசி) கண்டறிந்து பட்டியல் தயாரிக்க மாநில அரசுகளுக்கு மீண்டும் அதி காரம் அளிக்கும் 127-வது சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில், சமூக,பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்றும் மத்திய அரசுக்கே அதிகாரம்...
1 503 504 505 506 507 584
Page 505 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!