செய்திகள்

இந்தியாசெய்திகள்

ஏடிஎம் மெஷின்களில் பணம் இல்லையா… வங்கிகளுக்கு அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி..!!

வங்கிகளில் காத்திராமல் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,13,766 ஏடிஎம் மையங்கள் உள்ளன. ஆனால் இந்த மையங்களிலும் சில நேரம் பணம் இல்லாததால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த சிரமங்களை களையும் வகையில், ஏடிஎம் மையங்களில் எப்போதும் பணம் இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி...
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு 12 நாட்கள் தனிமை!

இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு, அபுதாபிக்கு வந்தவுடன் அவர்கள் கட்டாயமாக 12 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று எதிகாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.   இது குறித்து தேசிய எதிகாத் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளியிட்டுள்ள தனிமைப்படுத்துதலுக்கான விதிமுறைகளை தற்போது மாற்றியமைத்து உள்ளதாகவும், அதன்படி பசுமை நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற...
இந்தியாசெய்திகள்

ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் கிரையோஜெனிக் எஞ்சினில் கோளாறு…திட்டம் தோல்வி – இஸ்ரோ தலைவர் சிவன்

விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பயணம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ராக்கெட்டின் கிரையோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட்டில் பொருத்தி இன்று அதிகாலை...
செய்திகள்தமிழகம்

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: கோவில்பட்டி புதிய மாவட்டம் அறிவிக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. இப்பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆயிரக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. கல்வி நிலையங்களும் அதிகம் உள்ளன. கோட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகம், மாவட்ட தலைமைஅரசு மருத்துவமனை, செயற்கைபுல்வெளி ஹாக்கி மைதானம்போன்றவை ஏற்கெனவே கோவில்பட்டியில் அமைக்கப்பட்டு இயங்கிவருகின்றன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கரநான்குவழிச் சாலையில் கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. மதுரை கோட்டத்தில் அதிக...
செய்திகள்தமிழகம்

பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் நடத்துவதற்கு தடை: சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா தொற்றை கட்டுப்படுத்த திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூகநலக் கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும்...
உலகம்உலகம்செய்திகள்

உலகின் மிகப்பெரிய கட்டடத்தின் உச்சியில் நிற்கும் பெண் புகைப்படம்

உலகின் ஆகப் பெரிய Burj Khalifa கட்டடத்தின் உச்சியில் பெண் ஒருவர் நிற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானதை அடுத்து அவ்வளவு உயரத்தில், அந்தப் பெண் எவ்வாறு நின்றார், அந்தக் காட்சி செயற்கையானதா எனப் பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் வலைத்தளவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது, Emirates நிறுவனம். காட்சியில் தோன்றிய அனைத்துமே உண்மை என கூறியுள்ள நிறுவனம், தேர்வு செய்யப்பட்ட அந்த ஊழியருக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது....
உலகம்உலகம்செய்திகள்

இரத்தினபுரியில் கிடைத்த மாணிக்கக்கற்கள் அடங்கிய தொகுப்பு குறித்து அமைச்சர் தகவல்

இரத்தினபுரியில் கிடைத்த மிகப் பெரிய நட்சத்திர நீல மாணிக்கற்கள் அடங்கிய தொகுப்பை கொள்வனவு செய்வதற்காக சீனாவில் இருந்து 500 மில்லியன் டொலர் பேரம் முன் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் மாணிக்கக்கல் சம்பந்தமான ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார். இது 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணம் எனவும் அவர் கூறியுள்ளார். மாணிக்கக்கல்லின் பெறுமதியை சரியாக மதிப்பிடாமல், அதன் பெறுமதியை உத்தியோகபூர்வமாக வெளியிட முடியாது என்ற போதிலும்...
செய்திகள்விளையாட்டு

இந்திய மல்யுத்த வீரங்கனைக்குத் தற்காலிக தடை; மற்றொரு வீராங்கனைக்கு நோட்டீஸ்!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் விளையாட்டின் மகளிருக்கான 58 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் பங்கேற்றிருந்தார். 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பெலாரஸ் அணி வீராங்கனை வனீசாவை எதிர்த்து போட்டியிட்ட அவர், தோல்வியை தழுவி இருந்தார். இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் தொடரின்போது விதிமுறைகளை மீறியதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு வினேஷ் போகட்டை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. அவர் மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
செய்திகள்விளையாட்டு

தோனி எனக்கு கொடுத்த மாபெறும் வாய்ப்பு! 13 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த தினேஷ் கார்த்திக்!

இந்தியாவுக்காக சர்வதேச அளவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியவர் தினேஷ் கார்த்திக். சில டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடியிருக்கிறார். இருப்பினும் அவர் மகேந்திர சிங் தோனியின் சம அளவு காலத்தில் விளையாடிய காரணத்தினால் அவளுக்கான வாய்ப்பு அவ்வளவாக கிடைக்கப்பெறவில்லை. அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு விளையாடும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை...
இந்தியாசெய்திகள்

ஆப்கனின் மஜர்-இ-ஷரிப் நகரிலிருந்து இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு தீவிரம்

தாலிபான் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மஜர்-இ-ஷரிப் நகரத்திலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து பல இடங்களில் தாக்குதல் நடத்திவரும் தாலிபான்களிடம் சிக்காமல், அந்தப் பகுதியிலிருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற மத்திய அரசு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்துள்ளது. ஆப்கனில் பதற்றமான பகுதிகளிலில் உள்ள இந்தியர்களை மீட்டு, பத்திரமாக தாயகத்துக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே ஆப்கானிஸ்தான்...
1 502 503 504 505 506 584
Page 504 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!