செய்திகள்

தமிழகம்

வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் தீபத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலை கார்த்திகை தீபம் முன்னிட்டு மலை உச்சியில் உள்ள மூலவர் உள்ள குடகு பாறைக்கு மேல் தீபம் ஏற்றப்பட்டது.  முன்பாக கீழே உள்ள கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகபெருமானுக்கு விசேஷ அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, மேலாளர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஈஷாவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம் : கார்த்திகை தீபத் திருநாளான நவ 26 ஒட்டுமொத்த ஈஷாவும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளியால் பிரகாசித்தது.

ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, சூரிய குண்டம், நந்தி, ஆதியோகி உள்ளிட்ட இடங்களில் ஈஷா தன்னார்வலர்களும், பொதுமக்களும் அகல் விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 24-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு நாத ஆராதனையும் நடைபெற்றது. லிங்கபைரவி சந்நிதியில் பெளர்ணமி அபிஷேகமும், அதை தொடர்ந்து நந்தி முன்பு லிங்கபைரவி மஹா ஆரத்தியும் நடைபெற்றது....
தமிழகம்

வள்ளிமலையில் சுப்பிரமணியசுவாமி மலைமேல் கார்த்திகை தீபம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மலையில் மூலவர் இருக்கும் பாறை உச்சியில் கார்த்திகை தீபம் நேற்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

அறம் செய்து உலகில் தடம் பதிக்க வேண்டும்: ரோட்டரி ஆளுநர் ஆனந்த ஜோதி பேச்சு

அறம் செய்து உலகில் தடம் பதிக்க வேண்டும் என்று ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேசினார். இது பற்றி விவரம் வருமாறு. மதுரை நெக்ஸ்ட் ஜென் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி பவுண்டேஷன் கருத்தரங்கு அழகர் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி தலைமை தாங்கினார். பன்னாட்டு ரோட்டரி பவுண்டேஷன் டிரஸ்டி பரத் பாண்டியா, முன்னாள் ஆளுநர்கள் முருகானந்தம், தாமோதரன்...
தமிழகம்

உலக அமைதிக்காக CEOA பள்ளியின் சார்பில் நடைப்பெற்ற மினி மாராத்தான் ஓட்டம்

நவ-25 உலக அமைதிக்காக CEOA பள்ளியின் சார்பில் மினி மாராத்தான் ஓட்டம் காலை நடைபெற்றது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே உலக அமைதிக்காக CEOAபள்ளியின் சார்பில் பள்ளித் தலைவர் சாமி, செயலாளர் ஜெயசந்திர பாண்டி மற்றும் காவல் துறை ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் மினி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் 400க்கும் மேற்பட்டவர் கலந்து...
தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழா; கோயில் பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு

உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா நவ.,21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தினமும் காலை , மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையை...
தமிழகம்

அகில இந்திய விராட் விஸ்வர்கமா சார்பில் தீபஒளி வாழ்த்து

அகில இந்திய விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி திரு கார்த்திகை தீப திருவிழாவாழ்த்து தெரிவித்து உள்ளார்.  அனைவரின் வாழ்விலும் தீபஒளி போல வாழ்க்கை ஒளிர விஸ்வகர்மா சமூக மக்களுக்கும் மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்கும் அகில இந்திய விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தீபஒளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் காகிதப்பட்டறையில் அரசமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வேலூர் காதிதப்பட்டறை சாலையில் மாலை அரசமரம் விழுந்து வேலூர் - ஆற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு ஜொலிக்கும் திருஅண்ணாமலை

திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் திருக்கோயிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். தீப விழாவை முன்னிட்டு திருஅண்ணாமலை முழுவதும் வண்ண விளக்குகளால் இரவில் ஜொலித்து வருகிறது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
இந்தியா

இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார், பிரதமர் நரேந்திர மோடி

பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். மையத்தில் ஆய்வு செய்த பின், தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர்.  தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சியுடன் அப்பதிவிட்டுள்ளார். இந்த அனுபவம் நமது நாட்டின் தற்சார்பு திறன் மீதான நம்பிக்கையை உயர்த்தியது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
1 46 47 48 49 50 584
Page 48 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!