கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாககோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாகமேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 28-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில்...
