தமிழகத்தில் இன்று முதல் மே 29 ஆம் தேதி வரை கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரமானது ஆரம்பமாகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் அக்னி நட்சத்திரம் என்று...
தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் சென்னையில் இன்று காலமானார். கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த கோ.இளவழகன் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். பாவேந்தம், தேவநேயம், அப்பாத்துரையம், அண்ணாவின் படைப்புகள் என அனைத்தையும் நூலாக்கி தந்தப் பதிப்பாளர் தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் இளவழகன். தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரும் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை முழுமையாக வெளிக்கொண்டு வந்தவருமான இளவழகன் மறைவு செய்தி அறிந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ...
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் முறைப்படி சட்டப்பேரவைத் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார், அதன் பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். சட்டப்பேரவை தேர்தல் ஏப் 6 அன்று நடந்தது, மே 2 வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றது. திமுக 125 இடங்களைப்பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பது உறுதியானது. நேற்று காலை பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிகழ்ச்சி எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் நடக்கும் எனத் தெரிவித்திருந்தார். ஆட்சி அமைக்க உரிமை கோரும்முன் முதலில் திமுக சார்பில் வெற்றிப்பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி சின்னத்தில்...
திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியை சந்தித்தாலும்கூட, 178 இடங்களில் அவரது கட்சி வேட்பாளர்கள் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளனர். தமிழகத்தில் திமுக அடுத்து ஆட்சி அமைக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக அமர இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது இடத்தை எந்தக் கட்சி பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு தேர்தலுக்கு முன்பே எல்லார் மத்தியிலும் எழுந்தது. இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவியதால் 3-ஆவது இடத்தை அமமுக கூட்டணி பிடிக்குமா அல்லது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பிடிக்குமா என்று பரவலாக விவாதிக்கப்பட்ட நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி அதிக இடங்களில் மூன்றாவது இடம் பிடித்து கவனம் ஈர்த்துள்ளது. 175க்கும் அதிகமான இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது....
திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 125 தொகுதிகளில் திமுக மட்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது. அது இல்லாமல் காங்கிரஸ் 18 தொகுதிகள், மதிமுக 4, விசிக, இடதுசாரிகள் தலா 2 இடங்கள், பிற கட்சிகள் 4 இடங்களில் வெற்றி வாகை சூடி திமுவுக்கு பலம் சேர்த்துள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கொளத்தூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை வீழ்த்தியுள்ளார். கொளத்தூர் கொகுதியில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெற்றிச் சான்றிதழை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை வெற்றி பெறச் செய்த மக்கள் அனைவருக்கும் நன்றி...
இன்று முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி கிடைக்காததால் இந்த திட்டத்தை இன்று தொடங்கவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் நாடெங்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதும் 1.33 கோடி பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்திற்கு இதற்கான தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படாததால் 18-44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழக்கம்போல தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக இல்லை. நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 118 பேர் பலியாகினர். இவ்வாறு பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தவுடன் ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் நேற்று ஒரே நாளில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால்...
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை எழுந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் படுக்கைகள் முக்கால் சதவீதம் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கை இல்லாததால் ஆம்புலன்ஸிலேயே காக்க வைக்கப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லேசான பாதிப்புகள் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்டவையும் தனியார் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க...
கர்நாடகாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் 3,500 பேர் மாயமான நிலையில் அவர்கள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை மிகக்கடுமையாக உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தொற்றுப் பரவல் மிக வேகமாக இருப்பதால் அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுவதால் அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படி வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டவர்கள் தான் தற்போது தலைமறைவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுமார் 3500 பேர் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் தங்களது போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் கர்நாடகா சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர் இந்நிலையில் அவர்கள் கக்க நல்லா சோதனைச் சாவடி வழியே நீலகிரி...