கொரோனா 2வது அலையால் பீதி; சென்னையில் விமான சேவை குறைந்தது: பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது
கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது.கடந்த 2020, ஜனவரி மாத தொடக்கத்தில் சென்னையில் இருந்து 520 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டது. 74 விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டது. 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கொரோனா தொற்றின் முதல் அலையின்போது, உள்நாட்டு விமானங்கள், சில கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலும் பயணிகள் விமான சேவையை தவிர்த்தனர். தற்போது கொரோனாவின் 2வது அலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில மருத்துவமனைகளில் இட பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள்...
