சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட கால்வாய் பாசனத்துக்காக 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்
மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ சதாசிவம், துணைஆட்சியர் வீர் பிரதாப் சிங், நீர்வளஆதாரத் துறை சிறப்பு தலைமைப் பொறியாளர் (மேல் காவிரி வடிநில வட்டம், சேலம்) ஜெயகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்வாய் பாசனத்துக்கான தண்ணீரை சேலம் ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை...
