தமிழகம்

செய்திகள்தமிழகம்

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52; கெமிக்கல் இன்ஜினியரிங்; எம்.பி.ஏ., படித்தவர். தனியார் வங்கியில் துணை தலைவராக உள்ளார். வங்கிப் பணிகளுக்கு இடையே, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து, தொடர்ந்து பேசி வருகிறார்.இந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் இரவு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, பாரதி பாஸ்கர், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்....
செய்திகள்தமிழகம்

நகரை அழகுபடுத்தும் பணி தீவிரம்; ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்க மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகளும், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாநகரில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பையை அகற்ற மாதந்தோறும் ஒருவார காலத்துக்கு தீவிர தூய்மைப்பணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரில் அரசு மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அப்புறப்படுத்துதல் மற்றும் சுவர்களில் வரையப்பட்டுள்ள தனியார் விளம்பரங்களை அழித்து, அவ்விடங்களில் வண்ண ஓவியங்களை வரைவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள், பேருந்து நிறுத்தங்கள்...
செய்திகள்தமிழகம்

அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க டிஜிபி உத்தரவு

தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் காவல் தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் காவல்துறை தலைமை அலுவலகங்களில் ஆவணப் பணிகளுக்காக அமைச்சுப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் எஸ்பி, டிஐஜி, ஐஜி அலுவலகங்களில் ஏராளமான அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். காவல் துறையினருக்கு சம்பளம் வழங்குதல், உத்தரவு ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பிரிவு உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் காவல் அலுவலக பணியாளர்களான சூப்பிரண்டுகள், டைப்பிஸ்ட்டுகள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், அலுவலக இளநிலை உதவியாளர்கள் ஆகிய ஒவ்வொருவரின் தனிப்பட்ட பணித்திறன் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு...
செய்திகள்தமிழகம்

இன்று முதல் 23 ஆம் தேதி வரை.. சனி, ஞாயிறு கிழமைகளில்.. கோவிலுக்கு செல்ல தடை.!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் 23-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மத வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

20 ஆண்டுகளில் எதுக்கு எவ்வளவு கடன்.. வெள்ளை அறிக்கை இன்று வெளியீடும் அமைச்சர் !!

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக நிதிநிலை குறித்து இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்து. ஆளுநர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த 2001ஆம் ஆண்டு, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு பொது வெளியில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார்....
செய்திகள்தமிழகம்

தலைவர்களின் சிலைகளுக்கு போடப்பட்டுள்ள கூண்டை அகற்ற வீரமணி வேண்டுகோள்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டுகள் அமைத்து, அவர்களை சிறைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் அவர்களுக்கோ, சட்டம்-ஒழுங்கைக் காக்கும் அரசுக்கோ பெருமையாகாது. அதிலும், அண்மைக்காலம் வரைதிறந்த சிலைகளாக இருந்த பெரியார்சிலைகளுக்கும்கூட, கடந்த ஆட்சியில் சில விஷமிகளின் செயல்களைத் தடுக்க சரியான வழி என்று கருதி, கூண்டு போட்டனர். எப்போதோ, எங்கோ நடந்த அசம்பாவிதங்களுக்கு, இது சரியான மாற்று வழி அல்ல. மாறாக, கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தலாம். அதனால் குற்றங்களும் குறைய வாய்ப்பு ஏற்படும். எனவே, தலைவர்கள் அனைவருக்கும் 75-ம் ஆண்டு விடுதலை நாளில், கூண்டுகளை அகற்றி, சுதந்திரமாக காட்சியளிக்க தமிழக முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

2,200 மாநகர பேருந்துகளில் நவம்பர் மாத இறுதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2,200 மாநகர பேருந்துகளில் வரும் நவம்பருக்குள் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகர பேருந்துகளில் நடக்கும் திருட்டுகளைத் தடுக்கவும்,பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: கரோனா தாக்கத்துக்குப் பிறகுபயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல் மாநகர பேருந்துகளை இயக்கி வருகிறோம். இருப்பினும், கரோனாவுக்கு முன்பு இருந்ததைப்போன்று மாநகர பேருந்துகளில் பயணிகள் வருகை இல்லை. பேருந்துகளில் நகை, செல்போன் உள்ளிட்டவை திருட்டு போனால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் மூலம் புகார் கொடுக்க நடத்துநர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தினோம். இருப்பினும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம்...
செய்திகள்தமிழகம்

கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை தீவிரம்

கேரளாவில் இருந்து ரயில்கள் மூலம் வரும் பயணிகளுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், தமிழக எல்லையோரப் பகுதிகளில் கரோனாபரிசோதனை மற்றும் கண்காணிப்புபணிகள் மாநில சுகாதாரத் துறைமூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், கேரளாவில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா உட்பட 7 விரைவு ரயில்களில் வரும் பயணிகளுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதேபோல் கன்னியாகுமரி, தேனி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக அளவில் கேரளாவில் இருந்து வருகிறார்கள். அவர்களின் ஆதார், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். கரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால், அவர்களுக்கு கரோனாபரிசோதனை கிடையாது. இதுதொடர்பாக...
செய்திகள்தமிழகம்

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதி அறிவிப்பு!!

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான தேதியை தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப் பட்டனர். அதே போல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10, 11ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 19ஆம் தேதி வெளியானது. அதேநேரம் தனித்தேர்வர்களுக்கு ப்ளஸ் 2 தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது . அதன்படி தனித் தேர்வர்களுக்கான ப்ளஸ் 2 துணைத் தேர்வு நேற்று ( 06.08.21 ) தொடங்கி 19 ஆம்தேதி வரை நடைபெறுகிறது . இந்நிலையில் தற்போது 10 மற்றும் 11 ஆம்...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு?- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி நீட்டிக்கப்பட்ட ஊரடங்குஆக.9-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அடுத்தக் கட்டஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில், கடந்த மே மாதம் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியதால், பல கட்டங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டன. இதற்கிடையே, திடீரென தொற்றுஎண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதாலும், அண்டை மாநிலங்களில் 3-வது அலையின் தாக்கம் அதிகரித்ததாலும், ஜூலை 31-ம் தேதி காலை முதல் கூடுதல் தளர்வுகள் ஏதுமின்றி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அத்துடன் அதிக அளவில் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களை மூடவும், கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதற்கிடையே, ஆக.9-ம் தேதியுடன் ஊரடங்கு நீட்டிப்பு முடிவுக்குவரும்...
1 517 518 519 520 521 544
Page 519 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!