தமிழகம்

தமிழகம்

திடீர் கலவரம் : 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு!

கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், புதுச்சேரி கடல் பகுதியில் ஒருசில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். இதற்கு ஒருசில மீனவ பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நல்லவாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வீராம்பட்டினம் அருகே படகில் சென்று சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனால் சுருக்குமடி பயன்படுத்த தடை உள்ள நிலையில் ஏன் மீன் பிடிக்கிறார்கள் என்று வீராம்பட்டினம் மீனவர்கள் கேள்வி கேட்டபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அங்கு கலவரம் வெடித்தது. நல்லவாடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய பெரிய படகின் மூலம் வீராம்பட்டினம் மீனவர்களின் படகை இடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரும்பு, கத்தி உள்ளிட்ட...
தமிழகம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்

மதுரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 1-ம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. மதுரையில் இதுவரை 14 ஆயிரத்து 896 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், மேலும் 2 ஆயிரத்து 33 ஆசிரியர்கள் தாமதமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. உடல் நல சூழலால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்கள், அதற்குரிய மருத்துவ சான்றிதழுடன் பள்ளிக்கு செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு!

இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ.317.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள் கட்டித்தரப்படும், குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ஒதுக்கீடு, வாழ்க்கை தரம் மேம்பாடு நிதி ஆண்டுதோறும் 5 கோடி, 300 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக 6.16 கோடி ஒதுக்கீடு, விலையில் எரிவாயு இணைப்பு மற்றும் எரிவாயு உருளை மானியத்திற்கு 10.50 கோடி ஒதுக்கீடு என பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இலங்கை தமிழர்...
தமிழகம்

சென்னையை சுற்றியுள்ள பரனூர் உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யப்படுவதை நிறுத்த நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னையைச் சுற்றியுள்ள 5 இடங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சுங்கச்சாவடிகளில் வசூலை நிறுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திருவையாறு தொகுதி திமுக உறுப்பினர் துரைசந்திரசேகர் பேசும்போது, ''தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடந்து வருவதில் அவமானம் ஏற்படுகிறது. வாகனத்தில் எம்எல்ஏ இருக்கிறாரா, பாஸ் உள்ளதா என்பதை ஆய்வு செய்கின்றனர். நீண்ட நேரம் அனைவரையும் காக்க வைக்கின்றனர். எனவே, மத்திய அரசிடம் பேசி இந்த சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும்'' என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ''தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் சென்னையை சுற்றியுள்ள பரனூர், நெம்மேலி, சென்னசமுத்திரம், சூரப்பட்டு மற்றும் வானகரத்தில் அமைந்துள்ள...
தமிழகம்

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலான மழை

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பரவலாக மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை, தேனி, நீலகிரியில் இருநாட்களுக்கு அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் வளசரவாக்கம், ராமாபுரம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, நந்தம்பாக்கம், போரூர், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத்,...
தமிழகம்

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 முதல் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியவை பின்வருமாறு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும். வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகஓள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும். பள்ளிக்கு வர விருப்பமில்லா மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம். பள்ளி நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பின்பற்றப்பட வேண்டும். மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது. பள்ளி...
தமிழகம்

சிறுதொழில் வங்கியின் சார்பில் தமிழக தொழில்களை மேம்படுத்த ரூ.524 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்புதல் கடிதம் வழங்கல்

சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியின் சார்பில், தமிழக சிறு,குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த ரூ.524 கோடிக்கான ஒப்புதல் கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வங்கியின் தலைவர் சிவசுப்பிரமணியன் ராமன் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினை, மத்திய அரசின் நிதித்துறையின் கீழ்இயங்கும் சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (சிட்பி) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சிவசுப்பிரமணியன் ராமன் நேற்று சந்தித்தார். அப்போது, சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தொகுப்பு (கிளஸ்டர்) மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த ரூ.524 கோடி நிதியுதவிக்கான கொள்கை அளவிலான ஒப்பந்தக் கடிதத்தை வழங் கினார். அப்போது, முதல்கட்டமாக இந்த நிதி வழங்கப்படுவதாகவும், திட்டங்களை நிறைவேற்றியதும் கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும் 'சிட்பி'யின் தலைவர் தெரிவித்தார். நாட்டிலேயே இந்த நிதியை பயன்படுத்தும்...
தமிழகம்

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயிலுக்கு நிலக்கரியால் இயங்கும் நீராவி இன்ஜின் முதல்முறையாக உள்நாட்டில் வடிவமைப்பு: தெற்கு ரயில்வே பொறியாளர்கள் தகவல்

  மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேஇயக்கப்படும் மலை ரயிலுக்கு, முதல்முறையாக உள்நாட்டு தயாரிப்பில் நிலக்கரியால் இயங்கக்கூடிய நீராவி இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்பட்டுவரும் நீராவி மலை ரயில் சேவை, 112 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. இந்த நீராவி ரயில் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நிலக்கரியை கொண்டு எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்பட்டு வந்தது. மலைரயிலில் பயணிக்கும்போது, உதகையின் இயற்கை எழிலையும், வன விலங்குகளையும், மலைமுகடுகளையும் கண்டு ரசிக்க முடியும். இதனால், இதில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வம் காட்டுவர். இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக ரூ.8.50 கோடி மதிப்பில் நிலக்கரியால் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் இன்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வேபணிமனையில் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ரயில் இன்ஜின் தயாரிப்பு பணிகள் தற்போது...
தமிழகம்

பயிர் கடன் தள்ளுபடியில் திடீர் திருப்பம்.. அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்.!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது அதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, பயிர் கடன் தள்ளுபடி பொறுத்தவரை 81 சதவீதம் பேருக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வாங்க வேண்டிய கடனை விட கடந்த அதிமுக ஆட்சியில் பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ. 516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ. 503 கோடி முறைகேடாக வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி எதிர்நோக்கி ஒரு நாளைக்கு முன்பாகவே திட்டம்போட்டு தள்ளுபடி செய்திருப்பதாகவும், பயிர் கடன் வழங்கும்போது கூட்டுறவு சங்கங்கள் ஏனைய வசூலையும் கடனாக கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆறு தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில்...
தமிழகம்

தமிழ்நாட்டில் இந்த 3 கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடரும்..!!

கொரோனா ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. இந்நிலையில், மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். பள்ளிகள் திறந்து ஒருவாரம் கழித்து கொரோனா பாதிப்பு குறைந்திருந்தால் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
1 513 514 515 516 517 544
Page 515 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!