தமிழகம்

தமிழகம்

சிவகாசியில், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய முப்பெரும் விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தேசிய நுகர்வோர் தினவிழா, 22வது ஆண்டு விழா மற்றும் 2023' புத்தாண்டு காலண்டர் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், மாவட்ட மகளிர் அணி தலைவர் ஈஸ்வரி, செயலாளர் வேல்குமார், பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்றனர். முப்பெரும் விழாவில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கோட்டாட்சியர் விஸ்வநாதன், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய காலண்டரை வெளியிட்டு பேசினார். அவர் பேசும்போது, இந்திய பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாளை, தேசிய நுகர்வோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நுகர்வோர் உரிமைகள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும். எந்தப் பொருட்கள் வாங்கினாலும் அவற்றின்...
தமிழகம்

அமைச்சர் உதயநிதிஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த்

வேலூர் திமுக எம்.பி.கதிர் ஆனந்த், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தனது வாழ்த்துக்களை நேரில் சென்று தெரிவித்தார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

ராஜபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் சார்பில் ரூ. 12.81 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜோஸ்வா ரஞ்சித் என்பவர் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த செப்டம்பர் 25ம் தேதி வீட்டின் மாடியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு அம்மா அமிர்தம்மாள் மற்றும் பள்ளியில் பயிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மறைவுக்கு பிறகு இவரது குடும்பத்தினர் வறுமையில் தள்ளப்படுவதை தவிர்க்க, 1997 ம் ஆண்டு 2 வது பேட்சில் இவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் டிஎஸ்பி ப்ரீத்தி மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரி நாதன் மற்றும் நெல்லை, தூத்துக்கு, மயிலாடுதுறை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சக காவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உயிரிழந்த காவலர் ஜோஸ்வா...
தமிழகம்

தேனியில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்குதல், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருது வழங்குதல் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்முரளீதரன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் வங்கியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், மகளிர் திட்ட அலுவலர் ரூபன்ராஜ் டாக்டர்இணை இயக்குனர் பரிமளம்.உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 11,775 பயனாளிகளுக்கு ரூ.61 கோடியே 476 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டது. செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாரம் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி தலைமையில் நடைபெற்ற தீர்மான கூட்டத்தில் 18 கவுன்சிலர்களில் அதிமுக,திமுக,அமமுக, சுயட்சை உள்ளிட்ட அனைத்து கட்சியின் 11 கவுன்சிலர்கள் பேரூராட்சியில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி தீர்மானத்தை நிறைவேற்றாமல் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இதில் அதிமுக 3  ,திமுக 10 ,அமமுக 1,காங்கிரஸ் 1, சிபிஎம் 1,சுயட்சை 2 உள்ளிட்ட மொத்தம் 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி தலைமையில் தீர்மானக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு வாசிக்கப்பட்டன. இந்நிலையில் மம்சாபுரம் பேரூராட்சியில் பதிவு செய்யப்பட்ட மாதத்திய பிறப்பு இறப்பு மற்றும் பேரூராட்சியின் வரவு செலவுகளுக்கான இரண்டு தீர்மானங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ள எட்டு தீர்மானங்களில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக துணைத் தலைவர் உள்பட அதிமுக,திமுக,அமமுக,சிபிஎம்,சுயட்சை உள்ளிட்ட அனைத்து கட்சியைச் சார்ந்த 11 கவுன்சிலர்கள் தீர்மானங்களை நிறைவேற்றாமல் பேரூராட்சி அலுவலரிடம் புகர் அளித்து வெளிநடப்பு செய்தனர்.மேலும் இதுவரை நடைபெற்ற 9 தீர்மான...
தமிழகம்

சோழவந்தானில் நேரு யுவகேந்திரா துர்க்கை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய கிராம மற்றும் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேரு யுவகேந்திரா நீரத்தான் துர்க்கை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய கிராம மற்றும் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ,கோகோ, கபடி ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியினை காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைவர் சிவபாலன் துவக்கி வைத்தார். நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார் ஸ்ரீ அன்னை கல்வி அறக்கட்டளை சேர்மன் ஆண்டி முன்னிலை வகித்தார். துர்க்கை மகளிர் மன்ற தலைவி நாகலட்சுமி வரவேற்றார். ஸ்ரீ அன்னை நர்சிங் கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி, முதுகலை ஆசிரியர் ராமமூர்த்தி, சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் வாழ்த்துரை வழங்கினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தமிழ் துறை தலைவர் பெரியசாமி பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி...
தமிழகம்

கே வி குப்பம் பிடிஓ கோபி, பாலியல் புகாரில் பணி இடை நீக்கம் – வேலூர் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடிஓவாகபணி புரிந்து வந்தவர் கோபி.பணி செய்யும் நேரத்தில் குடிபோதையில் வருவதும் பெண் ஊழியர்களிடம் நெருங்கி பழகுவதும் வாடிக்கையாகக் கொண்டு இருந்தார் இதன் காரணமாக பெண் ஊழியர்கள் அச்சத்துடன் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தனர் இந்த நிலையில்சம்பவத்தன்றுஒரு பெண் ஊழியரிடம் பிடிஓ கோபி மதுபோதையில் அத்து மீறியதாகபுகார் கூறப்பட்டது.இந்த சம்பவம் துறைரீதியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த விசாரணையில் பிடிஓ கோபிபாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது அதன் அடிப்படையில் வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பிடிஓவைபணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் .கே வி குப்பம் பிடிஓ அலுவலகத்தில் இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் இடத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

தைப்பொங்கலுக்கு செங்கரும்பு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் எழுப்பிய உரிமைக் குரலுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று விவசாயிகள் பாராட்டுகின்றனர் – சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் உலக நன்மைக்காக ஸ்ரீ ஆதிருத்ரம் மஹாயக்ஞம் நடைபெற்று வருகிறது.கமிட்டி தலைவர் அருணாச்சல வாத்யார், சேது வாத்யார், ஸ்ரீதர் வாத்யார், சேது வெங்கட்ராமன் வாத்யார், சந்திரசேகரன் வாத்யார், சத்யநாராயணன் வாத்யார் உள்ளிட்ட 170 பேர் மேற்பட்ட வேதவிற்பனர்கள் பங்கேற்றனர். 25 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி வருகின்ற 1ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்று வேத விற்பனர்களுக்கு 51 சமத்துவ சமுதாயம் திருமண அழைப்பிதழை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் மற்றும் அவரது மகள் யு.பிரியதர்ஷினி தாயார் மீனாள் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மதுரை அட்சயபாத்திர நிறுவனர் நெல்லை பாலு, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏ.கே.பி. சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆர்....
தமிழகம்

நெல்லையில் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட 36 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோரின் சீரிய முயற்சியால் போலி ஆவணம் முலம் அபகரிக்கப்பட்ட சுமார் 36 இலட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, கே.சி.நகர், பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து வேறொருவருக்கு இடம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஜுடிக்கு தெரியவரவே, ஜுடி மேற்படி நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதன்படி விசாரணை மேற்கொண்டதில் மேற்படி...
தமிழகம்

மீண்டும் உயிர் பலிகள் ஏற்படாமல் தடுக்க நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை

தாம்பரம்-சானடோரியம் ஜி.எஸ்.டி.சாலையில் ஆபத்தான முறையில் சாலையை கடந்து சென்று சாமிதரிசனம் செய்யும் பக்தர்கள், தமிழக அரசு நடை மேம்பாலம் அமைக்ககோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அடுத்த தாம்பரம்-சானடோரியம் ஜி.எஸ்.டி. சாலையில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இருபுறமும் சாலையை ஆபத்தான முறையில் கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இது மட்டும்மின்றி தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை செல்லும் ஜி.எஸ்.டி.சாலையில் பிரபல தேசிய சித்தா மருத்துவமனை, நெஞ்சக மருத்துவமனை, அரசு பொதுமருத்துவமனை மற்றும் தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் இங்கு அமைய உள்ளதால் இவற்றிற்கு செல்ல சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் கோவிந்தராஜன் கூறியதாவது; இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு...
1 339 340 341 342 343 546
Page 341 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!