மேயர் அன்பழகனை கண்டித்து திருச்சி அரவிந்தன், அம்பிகாபதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மேயர் அன்பழகனை கண்டித்து திருச்சி அரவிந்தன், அம்பிகாபதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர் திருச்சி மாநகராட் சியில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இழிவாக பேசிய தஞ்சை மேயரை கண்டித்தும், பேச வாய்ப்பளிக்காத திருச்சி மேயர் மற்றும் திமுகவினரை கண்டித்தும், திருச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புதிருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், இன்று மாநகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்று வருகிறதுதிருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளை கொண்ட மாமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் இன்று துவங்கிய இந்த கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வாய்ப்புக் கோரி பேசத் துவங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
