தமிழகம்

தமிழகம்

“உன்னால் முடியும்” – திருச்சி கே கள்ளிக்குடியில் உள்ள என். ஆர் . ஐ .ஏ.எஸ் அகடமியில் நடந்த விழா

திருச்சி கே கள்ளிக்குடி உள்ள என். ஆர் . ஐ .ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் உன்னால் முடியும் என்ற தலைப்பில் மாணவர்களை உற்சாகப்படுத்தி திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வீரமணி சிறப்புரையாற்றினார் முன்னதாக என். ஆர் .ஐ.ஏ.எஸ் அகடமி இயக்குனர் விஜயாலயன் வரவேற்றார்.  மேலும் பயிற்றுநர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இங்கு கடந்த 19 ஆண்டுகளில் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஐஏஎஸ் ,ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அதிகாரிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் : கேசவன், திருச்சி மாவட்டம்...
தமிழகம்

நம்மாழ்வார் நினைவு நாளில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்த காவேரி கூக்குரல் இயக்கம்

நம்மாழ்வார் ஐயாவைப் போற்றும் வகையில் அவரது நினைவு நாளான டிசம்பர் 30 அன்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் 1.5 லட்சம் டிம்பர் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. தமிழகத்தில் பாரம்பரிய விவசாய முறைகளை மீட்டெடுத்து மண் வளம் காப்பதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயல்புரிந்தவர் நம்மாழ்வார் ஐயா அவர்கள், அவர் நம்மோடு வாழ்ந்த காலத்தில் ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபாட்டுடன் செயல் புரிந்தவர். மண்ணை வளமாக வைத்து கொள்ள நாட்டு மாடுகளும், மரங்களும் அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நம்மாழ்வார் அவர்கள் இயற்கை தொடர்பான பணிகளில் மட்டுமல்லாது ஈஷாவின் யோகப் பயிற்சிகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஈஷாவில் கற்றுக்கொண்ட யோகப் பயிற்சிகளை தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். நம்மாழ்வார் அவர்களின் பாதையில் இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதில்...
தமிழகம்

சிவகாசியில், பிரதமரின் தாயார் மறைவிற்கு பாஜக கட்சியினர் இரங்கல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பிரதமர் நரேந்திரமோடியின் தாயார் மறைவிற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. சிவகாசி சிவன் கோவில் முன்பு, பிரதமரின் தாயார் ஹீராபென் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாஜக தலைவர் பாட்டக்குளம் பழனிச்சாமி, மாவட்ட துணை தலைவர் ஒலிம்பிக் செல்வம், மாவட்ட செயலாளர்கள் நாகலிங்கம், குமரி பாஸ்கர், முத்துராமலிங்கம், கோவிந்தன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகச்சாமி உட்பட பாஜக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சி யில் திடீரென சாலை.மறியல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் அருகே உள்ளது காடுபட்டி ஊராட்சி. 9 வார்டுகள் உள்ளன ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்தன் உள்ளார். இந்நிலையில் அங்குள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது. அதனை சரி செய்யும் பொருட்டு காலை 6:30 மணி அளவில் தலைவர் மற்றும் பிளம்பர் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து கொண்டு இருந்தனர். அப்போது சிலர் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று கூறி திடீரென.சாலையில் அமர்ந்து குடத்துடன் மறியல் செய்தனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் கூறும் போது தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக தன் மீது கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டியும் குழாய் உடைப்பை சரி செய்து கொண்டிருந்த வேளையில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே அலங்காரங்களுடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரு நடுகற்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உசிலம்பட்டி அருகே அலங்காரங்களுடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரு நடுகற்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் - சொக்கத்தேவன்பட்டி கண்மாயில் சிலையுடன் கற்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று கள ஆய்வு நடத்தினர், இந்த ஆய்வில் இரு இனக்குழு தலைவன்கள் மற்றும் பெண்கள் அலங்காரங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்த சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரண்டு நடுகற்கள் அருகே அருகில் உள்ளதை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் கண்டறிந்தனர். இதில் முதல் நடுகல் 3 அடி அகலமும் 4 அடி உயரத்துடன் காணப்படுகிறது, இனக்குழுவின் தலைவன் குதிரையில் மீது உட்கார்ந்து கொண்டு இருப்பது போன்றும், ஒரு கையில் வாலும் மறுகையில் குதிரையின் கயிற்றை பிடித்து போன்றும் உள்ளது, இதன் அருகிலேயே ஒரு பெண் ஒரு கையில் மலரை பிடித்தவாறும் மறுகையில் பண முடிப்பை பிடித்தவாறும் அலங்காரத்துடன் காணப்படுகிறது. இந்த நடுகலிலிருந்து...
தமிழகம்

மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை; கஞ்சா, பீடி கட்டுகள், செல்போன் பறிமுதல்

மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்தநிலையில், கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன.  இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து சென்று ஒவ்வொரு அறைகளில் உள்ள கைதிகளிடம் மற்றும் கைதிகளின் அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். சில கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா, பீடி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று பெண் கைதிகளின் அறைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  நேற்று...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள், ‘கோபால விலாசம்’ மண்டபத்தில் எழுந்தருளினர்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள, 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமானதாகவும், பிரசித்தி பெற்றதாக திகழும் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி உற்சவத்தின் சிறப்பு அம்சமான பகல்பத்து திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் தினமும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். மார்கழி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியபெருமாள் சன்னதியில் உள்ள ' கோபால விலாசம்' மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருமங்கலம் சார் பதிவு அலுவலகத்தில் காலியிடம், கட்டிடங்களுக்கு சொத்து பத்திரம் பதிவு செய்ய நிபந்தனைகள் – நகராட்சியில் தடையில்லா சான்று பெற்ற பின்னரே , பத்திரப்பதிவு செய்யப்படும் என அறிவிப்பு – திருமங்கலம் நகர் மக்கள் வேதனை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த ஒரு மாத காலமாக நகராட்சி ஆணையாளர் அனுப்பப்பட்ட அறிக்கையின் படி,  திருமங்கலம் நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காலி இடம் , கட்டிடங்களுக்கு சொத்து பத்திரம் பதிவு செய்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் குழாய் வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை செலுத்தியதற்கான தடையில்லா சான்று பெற்ற பின்னரே, பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டுமென திருமங்கலம் நகராட்சி நிர்வாகத்தால் அறிவுறுத்தல் செய்யப்பட்டதன் படி ,  திருமங்கலம் சார்பு பதிவு அலுவலகத்தில், நடைமுறைப்படுத்தப்பட்டதால், இதற்கு திருமங்கலம் நகர்வாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து , கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் எங்குமே இல்லாத இந்த நடைமுறையை திருமங்கலம் சார்பதிவு அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், திருமங்கலம் நகர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். செய்தியாளர் : வி...
தமிழகம்

வேலூர் சரக டிஐஜியாக முத்துசாமி நியமனம்

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த எம்.எஸ்.முத்துசாமி வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஆனிவிஜயா இந்த பொறுப்பில் இருந்தார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

மணல் சிற்பக்கலைக் கலைஞர் நவீன் பட்நாயக்கின் கைவண்ணம்

புகழ்பெற்ற ஓடிஸாவை சேர்ந்த மணல் சிற்பக்கலை கலைஞர் நவீன் பட்நாயக், மறைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவையொட்டி, மணல் சிற்பத்தால் உருவாக்கப்பட்ட தத்ரூப காட்சி. செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
1 335 336 337 338 339 546
Page 337 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!