கீழப்பாவூர் பகுதியில் தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் விளையாட்டுக்குழு நடத்தும் தென்னிந்திய அளவிலான 4ஆம் ஆண்டு ஆண்கள், பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி ஜன.27 துவங்கி 29 வரை 3 நாட்கள் கீழப்பாவூரில் நடைபெறுகிறது. இப்போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் விளையாட்டுக்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.சுபா தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் விளையாட்டுக் குழு நிறுவனர் பி.ஆர்.கே.அருண் விளையாட்டு குழுவின் கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ஆர்.பி.இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் விளையாட்டுக்குழு தலைவர் சு.மனோகரன், கௌரவ தலைவர் ச.செல்வன், தென்காசி மாவட்ட கபடி கழக செயலாளர் நல்லாசிரியர் அருள் இளங்கோவன், விளையாட்டுக்குழு துணைத் தலைவர் கே.பி.சுரேஷ், செயலாளர் ஜி.வைகுண்டராஜ், சட்ட ஆலோசகர் கே.ஆர்.பி.பிரபாகரன், பொருளாளர் பொ.அருணாசல முத்துச்சாமி, துணைச் செயலாளர் இசக்கிமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வி, கா.ராஜாமணி, ஆர்....


