உலகம்

உலகம்

ஒரு வாரத்தில் இரண்டு முறை.. ஏவுகணை சோதனை நடத்திய நாடு.. எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. பாதுகாப்பு சபை..!!

ஏவுகணை சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு ஐ.நா.பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா கடந்த புதன்கிழமை அன்று தொலை தூரம் சென்று தாக்க வல்ல 2 ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதிலும் முதல் சோதனையில் ஏவுகணையானது 800 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை குறிவைத்து தாக்கி அழித்துள்ளது. மேலும் ஒரே வாரத்தில் இரண்டு முறை சோதனைகளை நடத்தியுள்ளது. இது குறித்து தென்கொரியாவும் அமெரிக்காவும் ஆராய்ச்சி...
உலகம்

இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ்

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு, ஜெனிவாவில் நேற்று (செப்டம்பர் 13) தொடங்கியது. இதில் உரையாற்றிய மீச்செல் பெச்சலட், இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பேசினார். உணவு பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு ஆகியவற்றை...
உலகம்

பிரிட்டன்: 50 வயதுக்கு மேலானவா்களுக்கு 3-ஆவது தவணை தடுப்பூசி

பிரிட்டனில் 50 வயதுக்கும் மேலானவா்களுக்கு அடுத்த வாரம் முதல் 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக நிபுணா் குழு அளித்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவித் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். முன்னதாக, 12 முதல் 15 வயது வரை கொண்ட மாணவா்களுக்கு ஃபைஸா்/பயோஎன்டெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவிருப்பதாக சுகாதார மற்றும் சமூக நலத் துறை (டிஹெச்எஸ்சி) அறிவித்தது. நாட்டின்...
உலகம்

ஒரு ஊரே கடலில் மிதந்து வருகிறது… உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல் பிரிட்டன் வந்தடைந்து!

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர் ஆஷ் பிரிட்டன் வந்தடைந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், அப்போது பிரிட்டனில் ஏற்படும் பொருட்கள் பற்றாக்குறையை தவிர்க்க ஏராளமான நுகர்வோர் பொருட்களின் சரக்குகளுடன் பிரிட்டனுக்கு வந்துள்ளது எவர் ஆஷ். உலகின் முன்னணி கப்பல் தயாரிப்பு நிறுவனமான எவர் கிரீன் மெரைன் கப்பல் நிறுவனம் இந்த எவர் ஆஷ் கப்பலை உருவாக்கி இருக்கிறது. தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட இந்த...
உலகம்

‘1500 கி.மீ தூரம் வரை இலக்குகளை தாக்கும்’ – வட கொரியாவின் ஏவுகணை சோதனை வெற்றி

நீண்ட தூரம் பயணித்து இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணை சோதனையில் வெற்றி கண்டுள்ளது வட கொரியா. 'மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அஸ்திரம் இது' என அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. தகவல்களின்படி இலக்குகளை தாக்குவதற்கு முன்னதாக 1500 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ஏவுகணை பயணிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. வட கொரியாவுக்கு அண்டை நாடான ஜப்பானின் பெரும் பகுதி நிலத்தை இந்த ஏவுகணை தாக்கும் வல்லமை உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த...
உலகம்

லெபனான் மக்களின் நிலை இலங்கையருக்கு ஏற்படப்போகிறது – கடும் எச்சரிக்கை விடுக்கும் பேராசிரியர்

லெபனான் மக்களின் அதே வாழ்க்கைத் தரத்தை இலங்கையர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே, பலர் லெபனானில் உள்ள இணையத்தைத் தேடுவது முக்கியம் என்று பேராசிரியர் ரோஹன் சமரஜீவா தெரிவித்துள்ளார். லெபனான் மக்கள் தற்போது எரிபொருள் பற்றாக்குறை, கடுமையான மருந்துகள் மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக சமரஜீவா குறிப்பிட்டார். சமூகத்தில் பொருட்களின் பற்றாக்குறை, குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பற்றாக்குறை குறித்து அச்சம் இருப்பதாகவும், இந்த பிரச்சனையை எதிர்கொள்ள அரசுக்கு இன்னும் வாய்ப்பு...
உலகம்

543 நாள்களுக்குப் பிறகு வங்கதேசப் பள்ளிகள் திறப்பு

வங்கதேசத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த 543 நாள்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன. அந்த நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுத்துள்ளதைத் தொடா்ந்து, கட்டுப்பாடுகளைத் தளா்த்த அரசு முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடுகள் அலட்சியம் செய்யப்பட்டு, நோய்த்தொற்று தீவிரமடைந்தால் அவை மீண்டும் மூடப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது....
உலகம்

“தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி இல்லை!”.. நாளை முதல் புதிய கட்டுப்பாடு.. பிரான்ஸ் அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு, நாளையிலிருந்து தடுப்பூசி செலுத்தாத அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கள் நாட்டில் அனுமதி கிடையாது என்று அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. எனவே, பிரான்ஸ் அமெரிக்காவை, பச்சை பட்டியலிலிருந்து ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றி விட்டதாக தெரிவித்திருந்தது. எனவே நாளையிலிருந்து, தடுப்பூசி செலுத்தாத அமெரிக்க மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டிற்குள் வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு,...
உலகம்

ரஷிய, ஆப்பிரிக்க சிகரங்களின் உச்சியை எட்டி சிஐஎஸ்எஃப் வீராங்கனை சாதனை

ரஷியா, ஆப்பிரிக்காவிலுள்ள இரண்டு சிகரங்களின் உச்சியை குறுகிய இடைவெளியில் அடைந்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீராங்கனை (சிஐஎஸ்எஃப்) சாதனை படைத்துள்ளாா். இதுதொடா்பாக தன்சானியாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி பினயா பிரதான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ''சிஐஎஸ்எஃப் வீராங்கனை கீதா சாமோத்தா கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ரஷியாவிலுள்ள எல்பிரஸ் சிகரத்தின் உச்சியை அடைந்தாா். அவா் ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயா்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோ உச்சியை சனிக்கிழமை எட்டினாா். இதன்...
உலகம்

வரும் 20ஆம் தேதி கனடாவில் பொதுத்தேர்தல் – மீண்டும் பிரதமர் ஆவாரா ஜஸ்டின் ட்ரூடோ?

கனடாவில் இன்னும் 10 நாட்களில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோவே ஆட்சியை கைப்பற்றுவாரா? அல்லது மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமாக அறியப்படும் பிரதமர்களில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒருவர். கனடாவை கடந்து வெளிநாடுகளில் எல்லாம் அவருக்கு ரசிகர்கள் உண்டு. கடந்த 6 ஆண்டுகளாக கனடா பிரதமராக பதவி வகித்துவரும் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது...
1 20 21 22 23 24 42
Page 22 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!