உலகம்

உலகம்

தான்சானியா எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்:கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் 4ம் தேதி முதல் துறை ரீதியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டது.தான்சானியாவின் ஸான்ஸிபார் என்ற இடத்தில்...
உலகம்

கைவசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை எவ்வளவு? – அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட அமெரிக்கா!

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட இரு நாடுகளும் தங்கள் கைவசம் இருக்கும் ஆயுதங்களைக் குறைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்தன. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானவுடன் இந்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர முடிவு செய்துள்ளது. இதனையொட்டி அமெரிக்கா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்தாண்டு...
உலகம்

50 வருடங்களுக்கு பிறகு.. தொடங்கப்படும் விமான சேவைகள்.. தகவல் வெளியிட்ட சுற்றுலா அமைச்சகம்..!!

விமான சேவையானது 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கொழும்பில் உள்ள விமான நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது. இலங்கையிலுள்ள கொழும்பில் இரத்மலான விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. அதிலும் முதல் விமானமானது அடுத்தமாதம் மாலத்தீவுக்கு புறப்படவுள்ளது. இதனை இலங்கையின் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாலத்தீவு ஏர்லைன்ஸ் உடன் நடத்தப்பட்ட நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரத்மலானவில் இருந்து...
உலகம்

வரலாற்றில் முதன்முறை: படப்பிடிப்புக்காக சர்வதேச விண்வெளி மையத்துக்குப் பறந்த ரஷ்ய இயக்குநர், நடிகை

வெளிநாட்டுப் படப்பிடிப்புகளை எல்லாம் பழைய கதையாக்கியுள்ளார் சூட்டிங்குக்காக விண்வெளிக்குச் சென்ற ரஷ்ய இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ. ரஷ்யாவின் புகழ்பெற்ற இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ. இவர் எடுத்து வரும் படத்திற்கு தி சேலஞ்ச் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை, விண்வெளியில் ஏற்படும் ஒரு மருத்துவ நெருக்கடி தொடர்பானது. இந்தப் படத்திற்காக இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ, நடிகை ஜூலியா பெரெஸ்லிட், விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ் ஆகியோர் விண்வெளிக்குப் புறப்பட்டனர். கஜகஸ்தானில்...
உலகம்

இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை பயன்படுத்தப்பட மாட்டாது: கோத்தபய ராஜபட்ச உறுதி

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலுக்கும் இலங்கை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச உறுதிபடத் தெரிவித்தாா். இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தாா். அந்நாட்டு அதிபா் கோத்தபய ரஜாபட்சவை அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அதிபா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சுற்றுலா,...
உலகம்

மருத்துவம்: அமெரிக்க விஞ்ஞானிகள் இருவருக்கு நோபல்

மனிதா்கள் வெப்பநிலையையும் தொடுதலையும் உணா்ந்து கொள்வதற்கான உணா்விகளை (ரிசப்டா்ஸ்) கண்டறிந்ததற்காக அமெரிக்காவைச் சோந்த இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட்ட நோபல் குழுவின் பொதுச் செயலா் தாமஸ் பெல்மன் கூறுகையில், ''கண்களின் பாா்க்கும் செயல்பாடு, காதுகளின் கேட்கும் தன்மை, தோலின் உணரும் செயல்பாடு ஆகியவை தொடா்பான 'சொமேடோசென்சேஷன்' என்ற பிரிவில் டேவிட் ஜூலியஸும் ஆா்டம் படாபூடியனும் ஆய்வுகளை மேற்கொண்டனா். அந்த ஆய்வுகள்...
உலகம்

ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு

ஜப்பான் புதிய பிரதமடோக்கியோ-ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா, 64, தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் கோவிட் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்துள்ளது. எதிர்ப்புஇதனால் ஜப்பான் பிரதமராக பதவியேற்ற ஓராண்டிற்குள் ஹோஷிஹைடி சுகாவுக்கு சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. சமீபத்தில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி தலைவர் தேர்தல்...
உலகம்

‘ட்விட்டா்’ கணக்கை மீட்க நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு

தனது சுட்டுரை (ட்விட்டா்) வலைதளக் கணக்கை மீட்டுத் தருமாறு கோரி அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடா்ந்துள்ளாா். டிரம்ப்பின் வழக்குரைஞா்கள் இதுதொடா்பாக ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், டிரம்ப்பின் கருத்துகளை ட்விட்டா் நிறுவனம் தணிக்கை செய்வது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபா் தோதலில் முறைகேடு நடைபெற்ாக அப்போது...
உலகம்

உலகம் பொருளாதார சிக்கல்.. வெளியேறும் பொதுமக்கள்.. மன்றாடும் தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் நிறைய உள்ளதால் மக்கள் பாகிஸ்தானிற்கு அகதிகளாக செல்கின்றனர். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இவர்களின் ஆட்சி முறைக்கு பயந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டதாலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட காரணத்தினாலும் மக்கள் வேறு வழியின்றி வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் எல்லைப்...
உலகம்

மெக்சிகோவில் பலூன் திருவிழா: வானை வண்ண மயமாக்கிய பிரமாண்ட பலூன்கள்

மெக்சிகோவில் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண வண்ண பலூன்கள் வானில் பறந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தலைநகர் நியூ மெக்சிகோவில் வருடாந்திர பலூன் திருவிழா விமரிசையாக தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக கடந்தாண்டு இவ்விழா நடக்காத நிலையில் இந்தாண்டு அதை ஏராளமானோர் கண்டுகளித்தனர். வெப்பக்காற்று நிரப்பப்பட்டு பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்ட பலூன்கள் வானை அலங்களித்தன. 588 பலூன்கள சுமார் 9 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். 9 நாட்கள் நடைபெற உள்ள பலூன் திருவிழாவில்...
1 16 17 18 19 20 42
Page 18 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!