உலகம்

உலகம்

பால்வெளி மண்டலத்திலிருந்து வந்த ரேடியோ சமிக்ஞைகள்: ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

பால்வெளி மண்டலத்திலிருந்து ரேடியோ அலை சமிக்ஞைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பால்வெளி மண்டலத்தில் நமது சூரியக் குடும்பமும், நட்சத்திரங்களும், விண்கற்களும் உள்ளன. தற்போதைய கண்டுபிடிப்புகளின்படி சூரியக் குடும்பத்தில் மட்டும் உயிரினங்கள் வாழ்ந்துவரும் நிலையில் இதர கோள்களிலும், பால்வெளி மண்டலம் மற்றும் அதனைக் கடந்த வான்வெளியில் உயிரினங்கள் உள்ளனவா என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பால்வெளி மண்டலத்தின் மத்தியில் இருந்து ரேடியோ அலை சமிக்ஞைகள் வந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறைந்த...
உலகம்

பல்லுயிர் பாதுகாப்புக்கு சீனா ரூ.1700 கோடி நிதி: அதிபர் ஜின்பிங் அறிவிப்பு

சீன அதிபர் ஜின்பிங், வளரும் நாடுகளில் பல்லுயிர் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளுக்கு ரூ.1700 கோடி நிதி வழங்குவதாக ஐநா கூட்டத்தில் அறிவித்தார். உயிரியல் பன்முகத்தன்மை குறித்து ஐநாவின் 15வது தலைவர்கள் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று பேசியதாவது: உலகிலேயே அதிகளவில் கார்பன் உமிழ்வை வெளியிடும் நாடாக உள்ள சீனா, 2060க்குள் கார்பன் உமிழ்வை முழுமையாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது....
உலகம்

‘யாராலும் வெல்ல முடியாதராணுவத்தை அமைப்போம்’ – வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் சூளுரை

யாராலும் வெல்ல முடியாத, வலிமை வாய்ந்த ராணுவத்தைக் கட்டமைக்கப் போவதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் சூளுரைத்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: தாங்கள் வட கொரியாவுக்கு எதிரானவா்கள் இல்லை என்று அமெரிக்கா கூறி வந்தாலும், அந்த நாட்டின் நடவடிக்கைகள் அதற்கு எதிராக உள்ளன. எனவே, அமெரிக்க அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் வகையில் யாராலும் வெல்ல முடியாத வலிமையான ராணுவத்தை உருவாக்குவோம் என்றாா் அவா். அமெரிக்கா வரை சென்று தாக்கி அழிக்கக்...
உலகம்

சீனாவில் வெள்ளம்: 1.76 மில்லியன் மக்கள் பாதிப்பு

சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 1.76 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் வடக்கு மாகாணமான ஷாங்க்சியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 1.76 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,000 வீடுகள் சேதமடைந்ததோடு 189,973 ஹெக்டேர் பயிர்களும் முற்றிலும் நாசமாயின. மேலும் 1,20,100 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழையால்...
உலகம்

பணியிடங்களில் ஹெல்த் பாஸ் கட்டாயம்..மீறினால் சஸ்பெண்ட்!: இத்தாலி அரசின் திடீர் அறிவிப்பை கண்டித்து நாடு முழுவதும் வலுக்கும் ஆர்ப்பாட்டம்..!!

இத்தாலியில் பணியிடங்களில் ஹெல்த் பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போலீசார் விரட்டி அடித்தனர். இத்தாலியின் ரோம் நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணியிடங்களில் கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்காக கொரோனா தடுப்பூசி சான்றிதழ், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதற்கான ஆதாரம் அல்லது சமீபத்திய கொரோனா பரிசோதனை முடிவை...
உலகம்

மின் உற்பத்தி நிலையம் மூடல்: இருளில் மூழ்கியது லெபனான்

லெபனானில் எரிபொருள் தட்டுப்பாடால், இரண்டு பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த நாடே இருளில் மூழ்கி உள்ளது.மேற்காசிய நாடான லெபனான் பல ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. கடும் வீழ்ச்சிஅமெரிக்க டாலருக்கு நிகரான லெபனானின் நாணய மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் எரிபொருள் ஏற்றுமதியை நம்பி இருக்கும் லெபனான் மின் வாரியம், தற்போது பெரும் சவாலை சந்தித்து வருகிறது. இந்த மின்...
உலகம்

ரஷியா: விமான விபத்தில் 15 பேர் பலி

மத்திய ரஷியாவில் சிறிய வகை விமானம் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் 15 போ பலியாகினா். எல்-41 ரகத்தைச் சோந்த அந்த விமானம், மென்ஸெலின்ஸ்க் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியதாகவும் விபத்துக்குள்ளானபோது அந்த விமானத்தில் வான் சாகச வீரா்கள் உள்பட 22 போ இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். புறப்பட்ட சில நிமிஷங்களிலேயே இந்த விபத்து நேரிட்டதாக அவா்கள் கூறினா். விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து 7 போ உயிரோடு...
உலகம்

ஜப்பான் நிலநடுக்கம்: 32 பேர் காயம்

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நேற்று (அக்-7) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 காயம் அடைந்திருக்கிறார்கள். டோக்கியோவில் நேற்று(அக்-7) வியாழக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான இந்நிலநடுக்கக்கதால் இதுவரை 32 பேர் காயம் அடைந்திருப்பதாக அந்நாட்டு பேரிடர் மீட்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரயில் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் 3,28,000 பயணிகள் பாதிப்படைந்திருக்கிறார்கள். காயமானவர்களில் 3 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  ...
உலகம்

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு- 100 அப்பாவி மக்கள் பலி !!

மசூதியில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம் வந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறினர். தற்போது அமைச்சரவை அமைக்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில், அவர்களுக்கு தலைவலியாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு உள்ளது. இந்த நிலையில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்....
உலகம்

பணிந்தது பிரிட்டன்: இரு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கு 10 நாட்கள் தனிமை இல்லை: அக்.11முதல் அமல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட்தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திய இந்தியர்கள், இந்தியப் பயணிகள் அக்டோபர் 11ம் தேதி முதல் பிரிட்டனுக்கு வந்தால், அவர்களுக்கு 10 நாட்கள் கட்டாயத் தனிமைதேவையில்லை என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீரித்தபோதிலும், இரு டோஸ் செலுத்த இந்தியர்கள் 10 நாட்கள்பிரிட்டனில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த இந்தியா, பதிலடியாக இந்தியாவுக்கு வரும் பிரிட்டன்...
1 15 16 17 18 19 42
Page 17 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!