உலகம்

உலகம்

இலங்கை போலீஸ்காரர் கைது, இடைநீக்கம்: பொது இடத்தில் இரு தமிழ் இளைஞர்களை மோசமாகத் தாக்கிய வழக்கில் நடவடிக்கை

இலங்கையில் இளைஞர்கள் இருவரை மனிதாபிமானமற்ற முறையில், பொது இடத்தில் வைத்து தாக்கிய போக்குவரத்து போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, குறித்த போலீஸ் உத்தியோகஸ்தர் பணியிருந்து இடைநிறுத்தப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று (அக்டோபர் 22) இளைஞர்கள் இருவரை போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இந்த...
உலகம்

200 பேர் ஆடையில்லாமல் போட்டோ ஷூட்: ஏன்?

காலநிலை மாற்றத்தால் சுருங்கிய 'டெட் சீ' என்ற உப்பு கடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 200 பேரை நிர்வாணமாக்கி நியூயார்க் புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார். இஸ்ரேல் - ஜோர்டான் நாடுகளுக்கு இடையில் இருப்பதுதான் 'டெட் சீ'. இதை உப்பு கடல் என்றும் அழைக்கிறார்கள். காலநிலை மாற்றத்தால் இந்த டெட் சீ அதன் அளவில் சுறுங்கி விட்டது. இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு உணர்த்த 200 பெண்கள்,...
உலகம்

காங்கோவில் பரவும் மர்ம நோய்.. பாதிக்கப்படும் இளந்தளிர்கள்.. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

மர்ம நோயினால் 165 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காங்கோ நாட்டில் குவிலு மாகாணத்தில் குங்கு என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. இதனால் அங்குள்ள 165 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிலும் இந்த மர்ம நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் மலேரியா நோய்க்கான அறிகுறியும் இரத்தசோகையும் காணப்பட்டதாக அந்நாட்டின் பிராந்திய சுகாதாரத்துறை தலைவர் ஜீன்-பியர்...
உலகம்

கற்களை உடைக்கும் ரோவர்.. பதிவு செய்யப்பட்ட சத்தம்.. பூமிக்கு அனுப்பிய விண்கலம்..!!

செவ்வாயில் கற்கள் உடைக்கப்படும் சத்தம் பதிவு செய்யப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த விண்கலமானது அங்கு மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசேரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக...
உலகம்

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகள், சுற்றுலா தலங்களை மூட உத்தரவு

சீனாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஐந்தாவது நாளாக தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுக்க 40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என...
உலகம்

இந்த விலங்கின் உறுப்பு மனிதனுக்கு பொருந்துமா..? உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில்.. மைல்கல்லை எட்டிய மருத்துவர்கள்..!!

பன்றியின் சிறுநீரகத்தை மூளை சாவு அடைந்த நபருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்துள்ளனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மனிதர்களிடையே தற்போது மிகவும் சாதாரணமாகி விட்டது. ஆரம்பகட்டத்தில் மனிதனுக்கு மிகவும் நெருங்கிய இனமான குரங்குகளிடம் இருந்து உறுப்புகளை மாற்றம் செய்வதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அமெரிக்க மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளனர்....
உலகம்

நேபாளத்தில் கனமழை: 31 பேர் பலி

நேபாளத்தில் பெய்து வரும் கனமழைக்கு 31 பேர் பலியாகினர்; 43 பேர் மாயமாகினர். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: நேபாளத்தில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்தச் சம்பவங்களில் 32 பேர் உயிரிழந்ததாகவும் 22 பேர் காயமடைந்ததாகவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். மேலும், 43 பேரைக் காணவில்லை ; பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை சுமார்...
உலகம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா நீருக்குள் சென்று தாக்கும் ஏவுகணையை கிழக்கு கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக சோதித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வடகொரிய நாடானது அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. சர்வதேச அமைப்புகள் மற்றும் அண்டை நாடுகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் நீருக்கடியில் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணையை...
உலகம்

பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை..! பிரபல நாட்டில் புதிய திட்டம். வெளியான முக்கிய தகவல்..!

சீன நாடாளுமன்றம் பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை என்ற புதிய சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டுவர பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாடாளுமன்றம் பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை என்ற புதிய சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டுவர பரிசீலித்து வருகிறது. அதாவது குடும்ப கல்வி ஊக்குவிப்பு சட்டம் என்ற வரைவு சீனாவில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய வகுப்புகளும், குழந்தைகளுடைய தவறான செயல்களுக்கு பெற்றோரை பொறுப்பாக்குதல்...
உலகம்

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினரின் வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல்: 20 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக கடந்த வாரம் தொடங்கிய வன்முறை தடையின்றி தொடர்கிறது. ராங்பூர் மாவட்டத்தில் இந்துக்களின் வீடுகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி, தீ வைத்தது. இதில் 20 வீடுகள் தீக்கிரையாகின. தசரா பண்டிகையை முன்னிட்டு வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் கடந்த வாரம் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் கமில்லா என்ற இடத்தில் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரான் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த...
1 13 14 15 16 17 42
Page 15 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!