விமர்சனம்

சினிமாவிமர்சனம்

“சமூகம் மீது இயக்குனருக்கு இருக்கும் அக்கறை”

சான்றிதழ் : திரை விமர்சனம் தறுதலை கிராமம் எப்படி கருவறை கிராமமாக மாறுகிறது என்பது தான் கதை. முதல் பாதியில் நம்மை ஆச்சர்யங்களுக்கு மத்தியில் மூழ்கடிக்க வைத்து கதை சொல்ல ஆரம்பிக்கின்றனர். இப்படியெல்லாம் ஒரு கிராமம் இருக்குமா என்று ஓவ்வொரு காட்சியும் நம் முன் கேள்வி எழுப்புகிறது. கருவறை கிராமத்திற்கு ஜனாதிபதி விருது கிடைக்க அதை வேண்டாம் என மறுக்கும் கிராமவாசிகள் அதற்கு சொல்லும் காரணம் 'அட' என்று சொல்ல...
சினிமாவிமர்சனம்

மொக்க படம்னு சொல்லலாமா DD ரிட்டன்ஸை

திரைவிமர்சனம் : ஆர்.கே.எண்டெர்டைன்மெண்ட் C ரமேஷ் குமார் தயாரிப்பில் வந்திருக்கும் நகைச்சுவை  படம்  DD ரிட்டன்ஸ். சந்தானம் அண்ட் டீமின் காமடி அல்ட்ராசிட்டி தான் படம் முழுதும் வியாபித்திருக்கிறது. 'தில்லுக்கு  துட்டு' படத்தின் மூன்றாவது பகுதி என்று சொல்லிக் கொண்டாலும் அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும்  துளிக் கூட சந்ம்பந்தமே இல்லை. விளையாட்டாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் விளையாட்டு கதை பின்னணியில்.  அதற்காகவே இந்த குழுவினரை பாராட்டலாம். ஒரு பெரிய...
சினிமாவிமர்சனம்

நல்ல நகைச்சுவை படமாக மாறியிருக்கும் அபாயத்தில் இருந்து தப்பி இருக்கும் சத்திய சோதனை

சத்திய சோதனை - திரை விமர்சனம்: ஒரு கிடாயின்  கருணை மனு - இயக்குனரின் இரண்டாவது படைப்பு இது. அய்யப்பன் பூஜையுடன்  கதை ஆரம்பமாகிறது.  பாடல் முடியும் போது ஒரு கொலை நிகழ்கிறது . அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்திருக்கும்  படமே சத்திய சோதனை. கொலைக்கான காரணம் என்ன என்பதை குற்றவாளிகள் மூலம் ஒரு வரியில் சொல்லி விட்டு வேறு திசையில் பயணிக்கிறது  திரைக்கதை. பிரதீப்...
சினிமாவிமர்சனம்

அநீதிகளுக்காக நியாயம் கேட்கும் திரைப்படம்

அநீதி- திரை விமர்சனம் : OCD  பிரச்சனையில்  சிக்கிக்கொண்டிருக்கும் கதாநாயகன். புட் டெலிவரி செய்யும் வேலையை பார்த்துக்கொண்டிருக்கும் அவருக்கு பணக்காரர்களையே சுத்தமாக பிடிக்காது. கோபம் உண்டாக்கும் யாரைக் கண்டாலும்கொன்றுவிட வேண்டும் என துடிக்கும் மனநிலையை கட்டுப்படுத்த முடியாமல் மனநல  மருவத்துடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கதாநாயகியை சந்திக்கிறார். கதாநாயகி வீட்டு வேலை செய்யும் வீட்டு முதலாளியம்மா எதிர்பாராமல் இறந்து விடுகிறார். அந்த இறப்பிற்கு காரணம் யார் என்பதை  விசாரிக்கின்றனர்.  அந்த...
சினிமாவிமர்சனம்

இன்பினிட்டி – முடிவில்லாமல் அலையும் துப்பறியும் கதை.

திரை விமர்சனம் : இன்பினிட்டி - ஏதோ ஆங்கில பெயரில் தலைப்பு வைத்துவிட்டு,  தமிழ் பெயரில் கதாப்பாத்திரங்களின்  பெயர்களை உலவ விட்டு  நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கும்  தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பு. மென்பனி - தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்.  எவ்வி இளவளவன் – சிபிஐ  அதிகாரி பெயர்.  ஆதவன், தமிழினி, நந்தினி - இப்படி வழியெங்கும் தமிழ் பெயர்கள்.  பெயர்களில் காட்டிய  அக்கறையை  படக்குழுவினர் கொஞ்சம் கதைப்பக்கமும்,  திரைக்கதை பக்கமும் திருப்பி...
சினிமாவிமர்சனம்

அறம் சார்ந்த மனிதர்களின் கதை – பம்பர்

திரை விமர்சனம் : ஒரு திரைப்படத்திற்கு மிக முக்கிய  தேவை கதை.  கதையில்லாமல் தடுமாறும் படங்களுக்கு  மத்தியில் கதையுடன் கூடிய ஒரு திரைப்படம்.. பம்பர் - திரைப்படம் அறம் சார்ந்த மனிதர்களுடைய வாழ்க்கையும்,  அறம் சார்ந்து வாழும் போது கிடைக்கும்  சிக்கல்க்ளையும்  பேசுகிறது. இயக்குனர் M செல்வகுமார்  கதையை மிக அழகாக கொண்டு செல்லும் பங்கை பாராட்டலாம். மனிதர்கள் இயல்பில் நல்லவர்கள் தான்.  சந்தர்ப்பம் சூழ்நிலையால் மட்டுமே அவர்கள் மாறுகிறார்கள்...
சினிமாவிமர்சனம்

மாமன்னன் – திரை விமரிசனம்.

இயக்குநர் பா. ரஞ்சித் , இயக்குநர் மாரி. செல்வராஜ் இரண்டு பேருமே எப்படியாவது என்னை வலுக்கட்டாயமாக திரையரங்கிற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள் . காலதாமதமாகத் தான் படம் பார்ப்பது வழக்கம். எல்லோரும் பார்த்து விமரிசனம் எழுதிய பிறகு படத்தைப் பார்ப்பதற்கு நான் ஆர்வம் காட்டுவது பொதுவாக இல்லை. ஆனால் இந்த முறை எல்லோரும் சொல்லுகிறார்களே என்பதற்காக மாமன்னன் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தேன் .மாரி...
சினிமாவிமர்சனம்

மை டியர் பூதம் – திரை விமர்சனம்

குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எப்போதும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கூட. கொண்டாட வைப்பது கொண்டாட்டத்திற்கு இட்டுச்செல்வது. நீங்கள் குழந்தையாக மாறி ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கும், நீங்கள் நீங்களாகவே இருந்துகொண்டு ஒரு குழைந்தைக்கான திரைப்படத்தை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அப்படி இயல்பான ரசனையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "மை டியர் பூதம்" பூதலோகத்தில் வசிக்கும் கர்க்கிமுகி பூதலோக தலைவன். பல ஆண்டுகளுக்கு பிறகு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. தன் எல்லா...
சினிமாவிமர்சனம்

இரவின் நிழல் -திரை விமர்சனம்

சிங்கிள் ஷாட்டில் ஒரு முழுத்திரைப்படம் அதுவும் நான்லீனியரில். சாத்தியமான்னு கேட்டால் ஏன் முடியாது என்ற கம்பீர கேள்வியுடன் களம் புகுந்திருக்கிறது 'இரவின் நிழல்' இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆச்சர்யங்களின் உக்கிரமான பெயர். எதிலும் ஒரு புதுமை. புருவங்களை உயர்த்தி கண்களால் வியப்புகளையும், பிரமிப்புகளையும் அனாயசமாக பதிவுசெய்யும் கோடம்பாக்கத்து ஆஸ்கார் கலைஞன். அடுத்தவர் சாதனையை முறியடித்து தம்சப் காட்டுபவர்களுக்கு மத்தியில் தனது நேற்றைய சாதனையை தானே முறியடித்து அசால்ட்டாக வலம் வருகிறார் பார்த்திபன்....
சினிமாவிமர்சனம்

மாமனிதன் – திரை விமர்சனம்

'வணக்கம் என் பேரு ராதாகிருஷ்ணன். நான் ஆட்டோ ஓட்டுறேன். ' -இப்படி கதை ஆரம்பிக்குது. யாரு இந்த ராதா கிருஷ்ணன் ரொம்ப ஆர்வமா பார்க்க நாமளும் ஆரம்பிக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. பிள்ளைகள் மேல ரொம்ப பாசம். எப்படியாச்சும் சம்பாதிச்சு வாழ்க்கையில பெரிய அளவுக்கு வரணுன்னு ஆசைப்படுற சராசரி மனசுக்காரர். அந்த நேரத்துல அந்த ஊருல புதுசா வீட்டுமனை விற்பனை நடக்க ஆரம்பிக்குது. தன்னால் மொத்த பிளாட்டையும் வித்துத்தர முடியும்னு...
1 2 3
Page 2 of 3

Right Click & View Source is disabled.

error: Content is protected !!