இலக்கியம்

இலக்கியம்

இலக்கியம்கவிதை

எறும்பு

மமதைகளால் சகலத்தையும் உதாசீனித்து கண்ணுக்குத் தெரியா குறுக்கு ஊழல் அடுக்குகளில் பல பிரிவு ரத்தம் உறைந்திருக்க குதித்து குதூகலிக்கிறதொரு லெளகீக வெற்றி சியர்ஸின் கிளிங்கில் தெறிக்கின்றன அதிர் சிரிப்புகள் கசப்பின் மிடறுகளில் துளிர்க்கும் இனிப்புக் கிறக்கம் அண்டசராசரமும் குவிந்தங்கு தன்முனைப்பைக் கவிபாடித் தீர்க்க கண்ணெட்டும் தூரத்தில் ஒரு சின்னஞ்சிறு எறும்பு முதுகு காட்டி முன்னிரு கால்களைச் சொறிந்து நிற்கிறது தாளமுடியா முனைப்பு யாருக்கும் தெரியாமல் தன் பூட்ஸ் காலால் அதை...
கட்டுரை

மாற்றம் தந்த ஒருவர்

வணக்கம், அன்றொரு இரவு வேலை தொலைக்காட்சியில் ஒரு திரைப்படம் நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அவரின் நேர்த்தியான நடிப்போ? அல்லது வேறு என்ன காரணமோ? தெரியவில்லை... அக்கதாபாத்திரத்தின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு... யார் அவர்??? எப்படி இப்படி ஒருவர் வாழ்ந்து தன்னுடைய சொத்து சுகபோகங்கள் அனைத்தையும் தன் நாட்டிற்காக தியாகம் செய்து பல இந்தியர்களின் மனதில் சுதந்திர உணர்வை விதைத்தார் என்ற ஆச்சரியம்…. அந்தப்...
இலக்கியம்சிறுகதை

மனம் நனைத்துப் போனவள்

இரு பத்து ஆண்டுகளாக அவள் பரிச்ச யம். பார்வைப் பரிச்சயம். பேசிய சொல் ஒன்று கூட இல்லை. முறைத்தபடிதான் பார்ப்பாள். அல்லது பார்த்தால் முறைப் பாள். அவளிடம் பேசும் எண்ணமென எதுவும் இருந்ததில்லை. அவள் தேவதை .. என்றெல்லாம் புரூடா விடத் தயாரில்லை. சாதாரண ஒரு இல்லத்தரசியின் தோற்றச் செழுமை. திடமான உடல். மாநிறம். சிறுகடை ஒன்றில் இருப்பாள். சென்ற மாதம் எதோ வாங்கின போது சடசட வென நிறுத்தி...
இலக்கியம்கட்டுரை

பதேர் பாஞ்சாலி உருவான பாடுகளின் கதை

சத்யஜித் ரேயின் சினிமா ஆசை அவர் லண்டனில் இருந்தபோதுதான் அவருக்கு ஏற்பட்டது. அங்கே அவர் பார்த்த பைசைக்கிள் தீவ்ஸ் ஆங்கிலப்படம்தான் அவருள்ளிருந்த ஒரு சினிமா படைப்பாளியை உசுப்பிவிட்டது. அந்த பைசைக்கிள் தீவ்ஸ் படம்போலவே ஒரு இயல்பான சினிமாவை உருவாக்கவேண்டும் என்று அவர் தன் மனதில் நினைத்தபோதே அவருள் தோன்றிய கதைதான் பதேர் பாஞ்சாலி. அது வங்கத்தின் பிரபல எழுத்தாளர் விபூதி பூஷண் பேனர்ஜி எழுதிய நாவல். அது நாவலாக வெளிவரும்...
இலக்கியம்கவிதை

இதழ்களை பொறுக்கி புத்தகங்களில் பதியம் வைக்கிறேன்……!

கில்லி மாதிரி நல்ல ஒல்லி அவள் துள்ளல் நடை. துவளும் ஒற்றை ஜடை இடை தினம் ஒரு ரோஜா சூடி கலகலச் சிரிப்புடன் கலக்கலாகவே ஒரு நடை நடப்பாள் நடையின் அதிர்வில் ரோஜா இதழ்கள் உதிரும் அவளறியாமல் இதழ்களை பொறுக்கி புத்தகங்களில் பதியம் வைப்பேன்.. சில இதழ்களை தின்று சுகித்த தினங்களும் உண்டு நல்ல நிறம் அவள் அரிசிப் பல்லும், கூர் நாசியும், குருவி இதழ்களுமாக தெருவின் புதிய வசீகரம்...
நிகழ்வு

‘தாளடி’ நாவலுக்கு வடசென்னை தமிழ் சங்கம் வழங்கிய வீரமாமுனிவர் படைப்பிலக்கிய விருது

ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜன் அண்மையில் எழுதிய நாவல் 'தாளடி' இந்த நாவல் இதுவரை 5 விருதுகளை பெற்றிருக்கிறது. 'தாளடி' என்ற இந்த புனைவின் மொழி சொற்சித்திரங்களை வரையும் கவிதை மொழி.  சீனிவாசன் நடராஜனின் இந்த நாவல் ஒரு அரிய முன்னெடுப்பு.  வடிவத்தில் ஒரு புதிய வகைப்பாட்டை வெற்றிகரமாக பார்த்திருக்கிறார் - மாலன். 'தாளடி 1967' எதிர்காலத்தின் முன்னுரை - சந்தியா நடராஜன். மனசாட்சியோடு உரையாடும் நாவல் - சு.தமிழ்செல்வி....
நிகழ்வு

அபுதாபியில் சபரி மாலாவுக்கு அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்த சமூக ஆசிரியை சபரிமாலா அவர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி, அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் வைத்து  08-11-2021 மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர், கீழை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் தலைமை வகித்தார். அய்மான் சங்க மார்க்கத்துறைச் செயலாளர் மெளலவி எஸ்.எம்.பி. ஹுஸைன் மக்கி மஹ்ளரி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். அய்மான் சங்கப் பொருளாளர் மௌலவி...
நிகழ்வு

“Holistick approach to Women’s Health” நூல் வெளியீட்டு விழா

Dr .தவமணி பன்னீர்செல்வம் எழுதியிருக்கும் "Holistick approach to Women's Health" என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா ஷார்ஜா 40-வது பன்னாட்டு புத்தக கண்காட்சியில் நவம்பர் 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நூல் டிஸ்கவரி புத்தக நிறுவனத்தின் ஆங்கில பதிப்பில் முதல்முறையாக முறையான வெளியீடு கண்டிருப்பதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் திரு.வேடியப்பன் தெரிவித்துள்ளார். சமூக அக்கறையுடன் இந்த நூலை எழுதி இருக்கும் Dr .தவமணி பன்னீர்செல்வம் அவர்களுக்கு நான் மீடியாவின்...
சிறுகதை

கடைசியாக ஒரு கவிதை

ததும்பிக் கொண்டிருந்தது சந்தோஷம். எக்கணமும் வழியத் தயாராகி விட்டதைப் போலவும்கூட. கடகடவென பறந்து வந்து அமரும் புறாக்களாக, மனதில் முகிழ்த்த கவிதைக்கான வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன. பூக்களின் பின்னணியில், வண்ணத்துப் பூச்சிகளின் சிறகடிப்புகளைப் போல உணர்வுகள் நுரைத்துக் கொண்டிருக்க ஜோவிற்கு சிறகுகள் முளைத்திருந்தன. மனதுள் பதிந்து கொண்டிருந்த காட்சிகள், இன்றைக்கென்று அப்படியானதொரு லயத்தில் ஒரு ஸிம்பனிக்கான காட்சிக் கோப்புகளைப் போல அமைந்திருந்தன. அது மழையென்று சொல்ல முடியாத ஊட்டிக்கே உரித்தானதொரு...
சிறுகதை

தென்னூர் தேவதை!

06.11.2021 இன்று காலை திருச்சி தென்னூரில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்கச் சென்றேன். அங்கிருந்த கடையில் இளநீர் வாங்கி குடித்துவிட்டு, அதில் இருந்த மெல்லிய தேங்காயை தின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே இளநீர் குடிப்பதற்காக கல்லூரி மாணவி போல் இருந்த ஒரு இளம்பெண் வந்தாள். லட்சுமிகரமான முகம்! அந்தப் பெண் தனக்கு இளநீர் சொல்லிவிட்டு நிற்க, அதே நிமிடம் ஒருவர் வேகமாய் வந்து தனக்கு இளநீர் கேட்டார். உடனே...
1 23 24 25 26 27 45
Page 25 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!