ஒளிராத விண்மீன்கள் -தொடர்: பகுதி- 35
அன்று இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே தந்தையுடன் இருக்கிறான். செழியன். அடுத்த நாள் காலை சரவணனுக்கு தேவையானவற்றை கவிதாவும், லட்சுமியும் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அங்கு செழியனை வீட்டில் போய் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மதியம் வருமாறு கேட்கிறாள் லட்சுமி. அதற்கு செழியன் "இப்போது எனக்கு ஓய்வு தேவை இல்லை அதனால் இங்கேயே குளித்துவிட்டு தந்தையுடன் இருக்கிறேன். நான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் அவரை பார்த்து விட்டு...