புனித நதிகள் ?
அத்தாவுல்லா, நாகர்கோவில். தரிசனங்களின் திருமுகங்கள் என்கிறார்கள் ... புனிதங்களின் நீர்த்துறைகள் என்று பூசுகிறார்கள்... உங்களுடைய சுவனங்களின் கடைதிறப்பு அகோரிப் பிணங்களின் ஆடம்பர ஆட்டங்களிலா ஆரம்பமாகிறது ? ஆன்மீகம் சுமந்த ஆற்றுப்படுகைகள் எல்லாம் இப்போது இங்கே பிணம் சுமந்த சேற்றுப்படுகைகளை விட மோசமான நாற்றப்படுகைகள் ஆகிவிட்டன ... உங்கள் புனித நதிகளில் புனிதர்கள் வந்து நீராடிப் போகட்டும் பாவம் மனிதர்கள்... இந்த அப்பாவிகள் விட்டு விடுங்கள்.... கூழானாலும் குளித்துக் குடி கந்தையானாலும்...