இலக்கியம்

இலக்கியம்

கவிதை

இதுதான் வாழ்க்கை

நிஜங்கள் எல்லாம் நிழலாய் மாற நிகழ்வுகள் என்றும் மனதினுள் சேர காலம் கடந்து உண்மை விளங்க கலைந்த கனவால் கண்கள் கலங்க வாழ்க்கை என்பதோ குறுகிய வட்டம் வாழும் நாட்களில் எதற்கு வாட்டம் தேவை எதுவோ அதனைத் தேடு தேகம் கூட மறையும் கூடு இருக்கும் நிமிடம் உனதென நம்பு இருப்போர் இடத்தில் பகிர்ந்திடு அன்பு வேண்டும் வேண்டாம் என்ற சிந்தை மாய வலையை அறுக்கும் விந்தை தெளிந்த மனமும்...
கவிதை

உன்னால் முடியும் தம்பி…

அத்தாவுல்லா நாகர்கோவில் வாழ்க்கைக்கான அர்த்தம் கண்டுபிடி ... அது உன்னை வாழ வைக்கும்.. வாழ்க்கை அர்த்தம் நிறைந்தது.. அர்த்தப்படுத்துவது... நீ வாழ்ந்து - அதை அர்த்தப்படுத்து ... முகம் தெரியாதவர் பலருக்கும் கூட - உழைப்பு முகவரிகளைக் கொடுத்து இருக்கிறது... அழகான முகம் உடையவன் நீ - பிறகு ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய்? தவழ்ந்து கிடக்கும் ஒருவரைப்பார்க்கையில் நீ நிமிர்ந்து நிற்கிறாய் என்பது நிறைவாய் இல்லையா ? கால் கைகள்...
கவிதை

சர்வதேச மகிழ்ச்சி தினம்

அத்தாவுல்லா நாகர்கோவில் என்றைக்கு இந்த நாட்டில் ஏழை சிரிக்கிறானோ.... என்றைக்கு உழவன் வயிறார உண்கிறானோ... என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவிலும் தனியாக நடந்து போக முடிகிறதோ... என்றைக்கு தாழ்த்தப்பட்டவனும் கல்வியால் தலைநிமிர்கிறானோ... என்றைக்கு நீதியும் நேர்மையும் இல்லாதவன் கைகளுக்கும் எளிதாக எட்டுகிறதோ... என்றைக்கு நல்லவர்கள் நாடாள வருகின்றார்களோ... என்றைக்கு மக்கள் குடியுரிமை பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றனவோ... என்றைக்கு கொள்ளை நோய்களும் கொத்துக் கொத்தான மரணங்களும் இல்லாது ஒழிகிறதோ.... எங்கே குழந்தைகள் கொண்டாடப்படுகிறார்களோ......
கவிதை

மண் சுவாசம் பெற்றார் விண் பெண்மணி சுனிதா

மேலே சென்ற உயிர் மீண்டும் பூமிக்கு வந்தது மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் அமைத்த மகாசக்தியின் மறு அவதார தினம் இன்று மாதராய் பிறந்த இவருக்காய் மாதவம் செய்தது பூமி பாரதியின் கனவை நனவாக்கியவளே தொடங்கட்டும் உன் புது பயணம் புலரட்டும் புது வாழ்வு மலரட்டும் மானுடம் - உதயம் ராம்...
கவிதை

1930 – உடனடி அதிரடி ஹீரோ

பணம் காசு பரிசு தருவாங்கன்னு கேட்கின்ற விபரங்களை கொடுத்து விடாதே ஒரு பைசா ஒருத்தனுக்கு இலவசமா எவன் கொடுப்பான் எதுக்கு கொடுப்பான் தப்பேதும் செஞ்சதாக மிரட்டல்கள் வந்தாலே பயந்துகிட்டு பணம் எதுவும் அனுப்பி விடாதே நல்லவனா நீயிருக்க அபராதம் கட்டச் சொல்லி எவன் கேட்பான் எதுக்கு கேட்பான்? வலைதள வாழ்க்கையில் சூழ்ச்சிகள் இருக்குது வளரும் தொழில்நுட்பத்தில் ஆபத்தும் இருக்குது பேராசை பெரு நஷ்டம் மீள்வது மிகக் கஷ்டம் புரிஞ்சுக்கோ நல்லா...
கட்டுரை

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்…

நானும், என் பேச்சும் : இன்று (17/3/2025) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழப் பெற்ற Grand universe Book of Records organized by Pachyderm Tales மாபெரும் விருது வழங்கு விழாவில் அந்நிறுவனத் தலைவர் லக்ஷ்மி ப்ரியா அவர்கள் எழுதிய 'ரகசியம் ' என்ற நூல் குறித்து நான் பேசிய எனது சிறிய வாழ்த்துரை இது. அனைவருக்கும் வணக்கம், பாராட்டுக்கள் ரகசியம் நூல் எழுதிய லக்ஷ்மி ப்ரியா அவர்களுக்கு....
கவிதை

இந்த பூமிக்கு மலர்ச்சி…அவள்தான்

அத்தாவுல்லா நாகர்கோவில். இந்தப் பூவுலகில் உயிர்ப்பு சக்தி அவள்தான்... உயிர் தந்து பழக்கப்பட்டவள் ஒவ்வொரு உயிரிலும்... உயிர்ப்பிப்பதிலும்... உயர்த்துவதிலும்... ஒன்றும் தெரியாமல் பின் நிற்பதிலும்... எல்லா தவங்களும் தாய் பெயரை முன்மொழிகின்றன.. எல்லா வரங்களும் அவள் காலடியில் குவிகின்றன... சாந்தி மய சமாதானத்தின் பேருருவாய் அவள் அமைதியாக இருக்கிறாள்... பல்வேறு வடிவங்களின் பரிணாமங்களை நீங்கள் அவளுக்குள் வைக்கிறீர்கள்... தாயாக... தாரமாக.... மகளாக ... பேத்தியாக.... அவள் எல்லா சக்திகளையும் பூட்டிய...
கட்டுரை

பேனாக்கள் பேரவை – எழுத்தாளர் சிவசங்கரி அம்மாவுடன் உரையாடல் – 09 03 25

முனைவர் தென்காசி கணேசன் சென்னை 92 அலைப்பேசி எண் : 94447 94010 பேனாக்கள் பேரவை நிகழ்த்திய நேற்றைய  சந்திப்பு மிக அருமை. சாதனை படைத்த ஆளுமையாக இருக்கின்ற எழுத்தாளர் சிவசங்கரி அம்மா அவர்கள் நேற்று வந்து  இருந்தது மிகப்பெரிய சிறப்பு. இந்த ஒரு அற்புதமான நிகழ்வை வடிவமைத்து ஏற்பாடு செய்திருந்த திரு என் சி மோகன் தாஸ் மற்றும் பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்...
கவிதை

மாண்புறு மகளிர்

தன்னின் கனவுகளை தன்னாயுள் வரையே தன்னுள் சுமப்பவள் துன்பத்தை விரட்டி இன்பம் நிலைபெற என்றென்றும் போராடி வென்றே தீருவாள் வாகை சூடிடவே! அனலாய் புனலாய் அறிவால் அவனியிலே தனித்துத் தெரிவாள், துணைவ னின்றியே தனியாய் வாழும் சக்தியைக் கொண்டாலும் தன்னலம் கருதாமல் துணையுடன் இணைந்திருப்பாள் வீட்டில் அடைத்து வதைத்தோரும் வியந்திட பூட்டிய அறையில் பொசுக்கியோரும் வாழ்த்திட பாட்டன் பாரதிப் பெண்ணாய் வாழ்ந்திட காட்டு ஆறாய் களத்தில் இறங்கிடுவாள்! நிலவில் மாந்தர்...
கவிதை

வேண்டாம் மும்மொழி வழக்கு

அத்தாவுல்லா, நாகர்கோவில் அந்தந்த நதிகளை அவ்வவற்றின் திசைகளிலேயே நடக்க விடுங்கள்... நதிகள் நடப்பதுதான் நாட்டிற்கு அழகு... அவற்றை வலிந்து திருப்ப முனையாதீர்கள் ... அது ஒரு வகையில் வம்படி வழக்கு... தாய் முலைக்காம்பில் சுரப்பதெல்லாம் பிள்ளைகளுக்குத்தான் .. நீங்கள் ஏன் கள்ளியின் பாலை புகட்டச் சொல்கிறீர்கள்? கருத்தடையில் கொன்றது இல்லாமல் மீறிப் பிறந்த பிறகு ஏன் இன்னொரு பிள்ளைவதை செய்கிறீர்கள்.... மாடுகளை மட்டும் சுற்றி வராமல் உலக மாநாடுகளையும் சுற்றி...
1 2 3 51
Page 1 of 51
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!