56views
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , நரிக்குறவர் குழந்தைகளுக்கான உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தினை திறந்து வைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், பையூர் பிள்ளைவயல் ஊராட்சிக்குட்பட்ட பழமலை நகர்ப்பகுதியில், நரிக்குறவர் குழந்தைகளுக்கான அமைக்கப்பட்டுள்ள உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், திறந்து வைத்து தெரிவிக்கையில், டாக்டர்.கலைஞர் , வழியில், சிறப்பாக தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் , அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்களை மேம்படுத்திட வேண்டும் என்ற அடிப்படையில், இலக்கு நிர்ணயித்து, அவ்இலக்கினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
அதில், குறிப்பாக நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் நலன் காத்து வருகிறார். டாக்டர்.கலைஞர், நரிக்குறவர்கள் என்று அழைக்கப்பட்டதை நெரிக்குறவர்கள் என்று அழைத்து அவர்களுக்கு சான்றும் தந்தவராவார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் , நரிக்குறவர் இன மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, அவர்கள் விரும்புகின்ற தொழிலை தொடங்கி பயன்பெறுவதற்கு ஏதுவாக, வங்கிக்கடனுதவிகள் வழங்கிடவும் வழிவகை ஏற்படுத்தி, அவர்களுக்கு தேவையான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள அறிவுறுத்
தியுள்ளார்கள்.
மேலும், நரிக்குறவர் இன மக்கள் வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது, அவர்களை குழந்தைகளை பேணிப் பாதுகாப்பதற்கு ஏதுவாகவும், குறிப்பாக அழியா செல்வமான கல்வியை பெறுவதற்கும் உண்டு உறைவிடப் பள்ளியை ஏற்படுத்தி, அதன்மூலமும் அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி மையம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 14 வயதிற்கட்பட்ட 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மொத்தம் 114 மாணாக்கர்கள் தங்கிப் பயிலுகின்ற வகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவருக்கு அரசின் சார்பில் உணவு மற்றும் தேவையான அனைத்து அடிப்படைப் பொருட்களுக்கென ஆண்டிற்கு ரூ.20,000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.