25views
நூல் விமர்சனம் : தயானி தாயுமானவன்
நீ கடலில் கலந்திருக்கும் ஒரு துளி அல்ல ஒரு துளிக்குள் ஒளிந்திருக்கும் பெருங்கடல்
_ ஜலாலுதீன் ரூமி
பெண் என்பவள் பெருங்கடல் தான் …ஒரு துளி என்பது அவளின் இமையோரம் துளிர்த்தாலும், ஒரு துளி வியர்வையானாலும் விலைமதிப்பற்றது.
அவள் வந்த வழி மறப்பாளோ? தந்தை முகம் மறையுமோ? தோளி லிட்ட தொட்டிலும் இப்போதில்லை தூக்கிச்சுமந்த மார்பும் தன் இசையை நிறுத்திக் கொண்டது அப்பா இல்லாத தாய்வீடு இதோ இவர் வரிகளில்
சாமி இல்லாக் கோயில்
சங்கடமாய் தாய்வீடு
என்னை வரவேற்க காத்திருக்க
வாசலுக்குத் தெரியவில்லை
என்ற முதல் கவிதையில் இழந்துவிட்ட மனவலியும் மகளின் வலியும் வாசல் அறியுமோ? பக்கம் 65 ‘அரவணைத்த தீ’ என்ற தலைப்பு தமிழின் தீஞ்சுவை நமக்கு கவிதையாக,
காற்சிலம்பின் நீதி சொல்ல
மதுரைநகர் எரித்த
கண்ணகியின் கோபத் தீ
என்பதெல்லாம்
நீதியின் கதை
சொல்லிய
காவியத்தின்
சுடர்பற்ற
வைத்த தீ
மொத்தம் 57 தலைப்புகளில் 143 பக்கங்களில் கவிதையில் ஒரு பெண்மையின் யாகம் அது தியாகத்தின் வழி நீராட்டும் கருணை விழிகளின் பாசத்தீ என்னை ஏன் திருடினாய்? என்ற தலைப்பு
வலிகளிடம் உறக்கம் கேட்டது என்னை ஏன் திருடினாய்? பாசத்தின் நினைவுகளில் தாய்மை சுரந்த
தாய்ப்பால் நினைவுகளின் வரப்பில் தாலாட்டியபடி பசிதீர்க்கும் கவிதைகள் அற்புதம்.
சுசித்ரா செல்லப்பன்
வேர்களோ மறைந்திருக்கும் வண்ணப்பூக்களோ கண்நிறைந்திருக்கும் வேர்களால் ஒரு தூரிகை
அது வாழ்வின் ஓவியத்தின் கதைபேசும்.
சொல்ல வந்ததை மறந்து சொல்லி விடும் மறந்த கதை சுவைக்கத் தெரிந்த மனங்களுக்கு வண்ணங்களின் நன்றி என்பது நுட்பத்தின் அழகியில் .
கடிதத்தின் வருத்தம் காணாமல் போன காகிதத்தின் வருத்தம் எழுதவில்லையே யாரும் என எழுதுகோலின் வருத்தம் கடிதம் .
மனசை சொல்ல ஒரு கடிதமில்லை பொதுவெளியில் கவிதைகள் கொட்டிக் கிடக்கிறது திரும்பிப்பார்க்காத யாரோ ஓர் உறவுக்காக இழந்த அன்பின்காட்சியாக யாருடைய உறக்கத்தை திருடிய கவிதையாக இவரின் வரிகள் பெண்மையின் பக்கங்களில் தூரிகை எழுதிய கவிதை அதுவேர்களின் கவிதை.
வாழ்க கவிதை வெல்க தமிழ்.
நிமிர் புத்தகப் பட்டறை அழகிய அட்டைப் படத்துடன் நிறைவான பக்கங்கள்.
நூல் மதிப்பு :₹180.
பாராட்ட – 919003882135.
இன்னும் பல நூல்கள் தரவேண்டும் சகோதரிக்கு வாழ்த்துகள்.
தயானி தாயுமானவன்
add a comment







