தமிழகம்

செங்கோட்டை அரசு நூலகத்தில் 56வது நூல் திறனாய்வு போட்டி; கவிதை நூல் வெளியீட்டு விழா

60views
செங்கோட்டை அரசு நூலகத்தில் 56வது நூல் திறனாய்வு போட்டி மற்றும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தென்காசி எழுத்தாளர் தங்கராஜ் எழுதிய “வீடு முதல் தேசம் வரை உறவுகள்” எனும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு நூலகத்தில் திருநெல்வேலி தாணப்பன் கதிர் எழுதிய “சுற்றந்தழால்”என்ற சிறுகதை தொகுப்பு நூல் 56-வது நூல் திறனாய்வு போட்டியாகவும், தென்காசி எழுத்தாளர் தங்கராஜ் எழுதிய “வீடு முதல் தேசம் வரை உறவுகள்” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆதிமூலம், செண்பக குற்றாலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தண்டமிழ் தாசன் பா சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, ரோட்டரி கிளப் தலைவர் திருவிலஞ்சி குமரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொலைக்காட்சி புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். எழுத்தாளர்கள் தங்கராஜ், இளங்குமரன், ஐயப்பன், ரமணி, முருகேஷ், சக்தி வேலாயுதம், வழக்கறிஞர் கார்த்திக் உட்பட 60 பேர் கலந்து கொண்டனர். விழுதுகள் சேகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!