தமிழகம்

‘சைவசித்தாந்த இரத்தினம்’ புலவர் வி. நாகசுந்தரம் அவர்கள் இயற்றிய “தமிழர் ஆற்றுப்படை” (மூன்று நூல்கள்) மற்றும் தமிழ்ப் பேரவை விழா மலர் வெளியீட்டு விழா

158views
19.04.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அண்ணாநகர் வசந்த பவன் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பாவலர் சீனி பழனி அவர்கள் வரவேற்புரையாற்றி, நிகழ்வின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். பேராசிரியர் முனைவர் ம. இளங்கோவன் அவர்கள் தலைமையிலும், பேராசிரியர் முனைவர் செ.சு.நா. சந்திரசேகரன் அவர்கள் முன்னிலையிலும் விழா சிறப்பாக நடைபெற்றது.
முதுமுனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார். அவர் சிறப்புரை ஆற்றும் பொழுது”தமிழ் மொழியின் சிறப்பை இந்த நூல் ஆழமாகவும் அகலமாகவும் வெளிப்படுத்துகிறது. ஆசிரியர் புலவர் வி. நாகசுந்தரம் தனது அயராத உழைப்பை இந்த மூன்று நூல்களிலும் கொட்டி இருக்கிறார் தமிழ் சார்ந்த அனைத்து ஆய்வுகளும் இந்த நூலில் நடத்தப்பட்டு இருக்கின்றன” என்று கூறினார்.
திருமதி நா. மாயாதேவி நாகசுந்தரம் திரு நா. சண்முகநாதன் டாக்டர் அருணா சண்முகநாதன் திரு.நா. சரவணன் டாக்டர் இராமேஸ்வரி சரவணன் அவர்கள் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் முனைவர் மெய்ஞானி பிரபாகரபாபு, முனைவர் குமரிச்செழியன், தமிழறிஞர் பள்ளத்தூர் பழ. பழனியப்பன், முனைவர் கலியன் சம்பத் பாவலர் சீனி பழனி, திரு S.N. பாலசுப்பிரமணியம், பேராசிரியர் முனைவர் ஜா. திரிபுரசூடாமணி, இன்டர்நேஷனல் எக்ஸ்னோரா தலைவர் திரு நிர்மல் பேராசிரியர் முனைவர் ஜெ. சந்திரிகா, தமிழாசிரியர் சுந்தரி சுவாமிநாதன் மற்றும் பல தமிழ் ஆளுமைகள் வாழ்த்துரையாற்றினர்.
.
‘சித்தாந்த இரத்தினம்’ புலவர் வி. நாகசுந்தரம் அவர்கள் ஏற்புரையாற்றி, தமிழ் வளர்ச்சிக்கான தன்னுடைய பணிகளைப் பகிர்ந்து கொண்டார். திரு சரவணன் நாகசுந்தரம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
முனைவர் ம. தாமரைச்செல்வி அவர்கள் விழா ஒருங்கிணைப்பை சிறப்பாக மேற்கொண்டார். இவ்விழா தமிழின் செழுமையையும் இலக்கியப் பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கும் வண்ணம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டை திரு நா.சண்முகநாதனும் திரு நா சரவணன் அவர்களும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர் திரளாகப் பல்துறை சான்றோர்களும் ஆளுமைகளும்இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!